'RRR' படம் பார்த்த இரண்டு முறை ஜேம்ஸ் கேமரூன்..! ராஜமௌலி என்ன சொன்னார் தெரியுமா? வைரல் பதிவு!
இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில், கடந்தாண்டு வெளியான ஆர் ஆர் ஆர் திரைப்படத்தை பிரபல ஹாலிவுட் பட இயக்குனர், ஜேம்ஸ் கேமரூன் தன்னுடைய மனைவியுடன் கண்டு களித்த பின், நடந்த சுவாரஸ்யமான தகவல் குறித்து மிகவும் உற்சாகமாக சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
நான் ஈ, பாகுபலி போன்று ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு தன்னுடைய படைப்புகளை உருவாக்கி வரும் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி, சுதந்திரப் போராட்ட வீரர்களான சீதாராமராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் சிறப்புகளை எடுத்துக் கூறும் விதமாக இயக்கியிருந்த திரைப்படம் 'ஆர் ஆர்ஆர்'.
இந்த படத்தில் சீதா ராமராஜுவாக பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் நடித்திருந்தார். கொமரம் பீம் கதாபாத்திரத்தில், ஜூனியர் என்டிஆர் இருந்தார். இசையமைப்பாளர் கீரவாணி இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
பொங்கல் வின்னர் அஜித்தின் துணிவா - விஜய்யின் வாரிசா? ரெட் ஜெயிண்ட் மூவிஸ் போட்ட பரபரப்பு ட்வீட்!
Rajamouli
'ஆர் ஆர் ஆர்' திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி, ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்த நிலையில்... சமீபத்தில் ஆஸ்கர் விருதுக்கு அடுத்தபடியான கோல்டன் குளோப் விருதை, இப்படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் பெற்று சாதனை படைத்தது.
இதை தொடர்ந்து இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி சமூக வலைதளத்தில், ஆர் ஆர் ஆர் படத்தை பிரபல ஹாலிவுட் பட இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இரண்டு முறை பார்த்ததாக தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து ராஜமௌலி போட்டுள்ள பதிவில்கூறியுள்ளதாவது, 'ஆர் ஆர் ஆர்' படத்தை அவர் மிகவும் விரும்பியதால், தனது மனைவி சுஜிக்கு பரிந்துரைத்து அவருடன் மீண்டும் படத்தைப் பார்த்தார். படத்தை பார்த்துவிட்டு தன்னுடன் சுமார் 10 நிமிடங்கள் படம் குறித்து பகுப்பாய்வு செய்ததால், நான் உலகின் உச்சத்தில் இருப்பது போன்று உணர்கிறேன் என நிகழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
அதேபோல் கீரவாணியும் தன்னுடைய twitter பக்கத்தில் ஜேம்ஸ் கேமரூன் இரண்டு முறை ஆர் ஆர் ஆர் படத்தை பார்த்த பின்னர் தன்னுடைய இசை குறித்து கருத்து தெரிவித்ததாகவும், இதனால் ஒரு சமுத்திரத்தின் அளவிலான சந்தோஷத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் ராஜமௌலி மற்றும் கீரவாணி ஆகியோர் வெளியிட்டு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.