MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. மஞ்சள் நிற பட்டு புடவையில் பொங்கல் பிரபல ஹீரோயினுடன் பொங்கல் வைத்த கீர்த்தி சுரேஷ்!

ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. மஞ்சள் நிற பட்டு புடவையில் பொங்கல் பிரபல ஹீரோயினுடன் பொங்கல் வைத்த கீர்த்தி சுரேஷ்!

நடிகை கீர்த்தி சுரேஷ், இந்த வருட பொங்கல் பண்டிகையை... குடும்பத்தினர் மற்றும் தோழிகளுடன் இணைந்து, மஞ்சள் நிற பட்டு புடவையில், மங்களகரமாக பட்டு புடவை கட்டி கொண்டாடியுள்ளார். இது குறித்த புகைப்படங்கள், தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

2 Min read
Author : manimegalai a
Published : Jan 16 2023, 09:55 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமாகும் அனைவருமே, முன்னணி ஹீரோயினாக திரையுலகில் ஜெயித்து விடுவதில்லை. ஆனால் அப்படிப்பட்ட ஒரு அதிர்ஷ்டத்தை பெற்றவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

28

மலையாள திரை உலகில், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் தமிழில்... 'இது என்ன மாயம்' எங்கிற  படத்தில் நடிகர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்தார்.  இவருடைய முதல் படம் தோல்வியை சந்தித்தாலும், இரண்டாவதாக, நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த 'ரஜினி முருகன்' திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.

நடிகர் சமுத்ரகனிக்கு இவ்வளவு பெரிய மகன் - மகளா? குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய புகைப்படங்கள் வைரல்!

38

இதைத்தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாக 'தொடரி', சூர்யா ஜோடியாக 'தானா சேர்ந்த கூட்டம்' விஜய்க்கு ஜோடியாக 'பைரவா' , 'சர்கார்'  என முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்ட கீர்த்தி சுரேஷ், ஆரம்பத்தில் சில தோல்வி படங்களை கொடுத்தாலும்... இவர் கதையின் நாயகியாக நடித்த 'மகாநடி' திரைப்படம் இமாலய வெற்றியை பெற்றது.

48

'மகாநடி' படத்திற்காக தேசிய விருதையும் வாங்கிய கீர்த்தி சுரேஷ், இப்படத்தின் வெற்றிக்கு பின்னர் தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் படங்களை விட, கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களையே அதிகம் தேர்வு செய்து நடித்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

முதன்முறையாக மகனின் கியூட்டான போட்டோவை வெளியிட்டு... மகிழ்ச்சி பொங்க பொங்கல் வாழ்த்து சொன்ன சிவகார்த்திகேயன்

58

தமிழ், தெலுங்கு, மலையாளம், போன்ற மூன்று மொழிகளிலும் பிஸியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷின் கைவசம் தற்போது பல படங்கள் உள்ளன. குறிப்பாக தமிழில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்து வரும் 'மாமன்னன்', ஜெயம் ரவியுடன் 'சைரன்' ஆகிய தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

68

இது தவிர 'ரகு தாத்தா' மற்றும் 'ரிவால்வர் ரீட்டா' போன்ற படங்களில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தெலுங்கிலும் படு பிஸியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷின் கைவசம் இரண்டு படங்கள் உள்ளன. அதில்' போலா ஷங்கர்' திரைப்படத்தில் சிரஞ்சீவிக்க தங்கையாகவும், தசரா எனும் படத்தில் நானிக்கு ஜோடியாகவும் மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் நடித்து வருகிறார்.

சபரிமலையில் யோகி பாபு நடிக்கும் 'சன்னிதானம் PO' படத்தை கிளாப் அடித்து துவங்கி வைத்த விக்னேஷ் சிவன்!

78

தென்னிந்திய திரை உலகில் மிகவும் பிசியான நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன், இந்த வருட பொங்கலை மிகவும் பிரமாண்டமாக கொண்டாடியுள்ளார்.

88

மஞ்சள் நிற பட்டுப் புடவையில், ஸ்லீவ் லெஸ் அழகில், மண்பானையில் பொங்கல் வைத்து இந்த பொங்கலை வரவேற்றுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது குறிப்பாக கீர்த்தி சுரேஷின் இந்த பொங்கல் செலிப்ரேஷனில், சிவகார்த்திகேயனுடன் டாக்டர், டான், சூர்யாவுக்கு ஜோடியாக 'எதற்கும் துணிந்தவன்' போன்ற படங்களில் நடித்துள்ள பிரியங்கா மோகன் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் இளமைக்கு காரணம் இந்த புட் டயட் தானா..? நடிகர் ஷியாமுக்கு ஷாக் கொடுத்த தளபதி..!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
கீர்த்தி சுரேஷ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தனுஷால் தொடங்கிய பயணம்.! விருது விழாவில் எமோஷ்னல் ஆன சிவகார்த்திகேயன்.!
Recommended image2
MGR - Saroja Devi : காத்திருந்த எம்ஜிஆர்.! காதலை நிராகரித்த சரோஜா தேவி.! முன்னணி ஹீரோக்களிடமே கெத்து காட்டிய கன்னடத்து பைங்கிளி.!
Recommended image3
திருமணத்தை நிறுத்திய சேரன்... அதிர்ச்சியில் சந்தா - அய்யனார் துணை சீரியலில் இப்படி ஒரு ட்விஸ்டா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved