அஜித் நடிக்கும் AK62 படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா ராய் நடிக்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி வருகிறது. 

அஜித் நடிப்பில் வெளியான துணிவு படம் தமிழகம் முழுவதும் 5 நாட்களில் மட்டும் ரூ.65 கோடி வசூல் குவித்துள்ளது. உலகம் முழுவதும் ரூ.100 கோடிக்கும் அதிகமாகவே வசூல் அள்ளியுள்ளது. முழுக்க முழுக்க வங்கி கொள்ளையை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பில் விபத்து..! விஜய் ஆன்டனி படுகாயம் அடைந்ததாக வெளியான தகவலால் பரபரப்பு!

துணிவு' திரைப்படத்தின் தமிழகத்தின் ஒட்டு மொத்த வெளியீட்டு உரிமையையும், ' வாரிசு' திரைப்படத்தை தமிழகத்தில் சில பகுதிகளிலும் வெளியிட்ட ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம், பொங்கல் வின்னர் யார் என்பது குறித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளது. இதில் அஜித்தின் 'துணிவு' மற்றும் விஜய்யின் 'வாரிசு' ஆகிய இரண்டு படங்களுமே வெற்றிப் படங்கள் தான் என நடுதரமாக தன்னுடைய பதிவை போட்டுள்ளதால் இரு தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் இந்த தகவல் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருவதோடு, லைக்குகளை குவித்து வருகிறது.

பகவதி ஸ்டைலில் உருவாகும் தளபதி67: டீக்கடை ஓனராக நடிக்கும் விஜய்?

இந்தப் படத்தைத் தொடர்ந்து அஜித்குமார் ஏகே62 (AK62) என்ற படத்தில் நடிக்கிறார். இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தை லைகா புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார் என்பது ஏற்கனவே வெளியான தகவல். தற்போது புதிய தகவல் என்னவென்றால், ஏகே62 படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் அதிக தொகைக்கு விலைக்கு வாங்கியுள்ளது. அதுமட்டுமின்றி இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாக இருக்கிறது. அத்தனை மொழிகளிலும் உருவாகும் ஏகே62 படத்தை திரையரங்கு வெளியீட்டிற்கு பிறகு நெட்பிளிக்ஸ் நிறுவனம் வெளியிடும் உரிமையை கைப்பற்றியுள்ளது.

AK62: இது நெட்பிளிக்ஸ் பண்டிகை: ஜில்லா ஜில்லா தான் முடியாமல் போய்விட்டது: டுவிட்டரில் டிரெண்டாகும் AK62!

இது குறித்து நெட்பிளிக்ஸ் நிறுவனம் தங்களது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூவர்மாக கூறியிருப்பதாவது: ஜில்லா ஜில்லா தான் எங்களால் முடியாமல் போய்விட்டது. ஆனால், ஏகே62 (AK62) தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் நெட்பிளிக்ஸில் திரையரங்கு வெளியீட்டிற்கு பிறகு வெளியாகும் என்று குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக #Ak62 என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பொங்கல் வின்னர் அஜித்தின் துணிவா - விஜய்யின் வாரிசா? ரெட் ஜெயிண்ட் மூவிஸ் போட்ட பரபரப்பு ட்வீட்!

இந்த நிலையில், இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்ய ராய் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. கடந்த 2000 ஆம் ஆண்டு வெளிவந்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தின் அஜித்துடன் இணைந்து நடித்திருந்தார். இந்தப் படத்தில் நடிகர் மம்மூட்டிக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 13 ஆண்டுகளுக்குப் பிறகு அஜித்துடன் இணைந்து அவருக்கு ஜோடியாக இந்தப் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. மஞ்சள் நிற பட்டு புடவையில் பொங்கல் பிரபல ஹீரோயினுடன் பொங்கல் வைத்த கீர்த்தி சுரேஷ்!

அதுமட்டுமின்றி இந்தப் படம் வரும் தீபாவளி பண்டிக்கைக்கு வெளிவரும் தளபதி67 படத்திற்கு போட்டியாக வெளிவரும் என்றும் சொல்லப்படுகிறது. எனினும், இது குறித்து எந்த முறையான அறிவிப்பும் வெளியாகவில்லை. அதோடு, AK62 படத்தின் படப்பிடிப்பும் இன்னும் தொடங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.