Asianet News TamilAsianet News Tamil

போடுறா வெடிய... வலிமை அப்டேட் பற்றி வாய் திறந்த இயக்குநர் எச்.வினோத்...!

ஆனால் இன்னும் ரசிகர்கள் பலர், தொடர்ந்து அப்டேட் கேட்டு வரும் நிலையில், படத்தின் இயக்குனர் எச்.வினோத் சூப்பர் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.

director h vinoth give the valimai updating
Author
Chennai, First Published Mar 2, 2021, 6:26 PM IST

‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் வெற்றியை அடுத்து தல அஜித், ஹெச்.வினோத், போனிகபூர் மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் வலிமை. அஜித்தின் 60வது படமாக தயாராகி வரும் இதில், அஜித் ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மற்ற நடிகர், நடிகைகளைப் பற்றியோ, படத்தின் ஷூட்டிங் பற்றியோ எவ்வித அப்டேட்டையும் வெளியிடாமல் படக்குழு ரகசியம் காத்து வருகிறது. 

director h vinoth give the valimai updating

சோசியல் மீடியாவில் விதவிதமாக ஹேஷ்டேக்குகளை ட்ரெண்ட் செய்து அப்டேட் கேட்டு வந்த தல ரசிகர்கள், பொறுமையிழந்து போனிகபூரை காணவில்லை என போஸ்டர் ஒட்டும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அதுமட்டுமின்றி தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திருச்செந்தூர் முருகன், பாரத பிரதமர் மோடி என பலரிடமும் வலிமை அப்டேட் கேட்டு கூச்சலிடும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வருகிறது. 

director h vinoth give the valimai updating

சமீபத்தில் சேப்பாக்கம் மைதானத்தில் கூட வலிமை அப்டேட் கேட்டு தல அஜித் ரசிகர்கள் கூச்சலிட்டது சோசியல் மீடியாவில் பல விமர்சனங்களை உருவாக்கியது. ஆனால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அஜித் ரசிகர்கள் அப்டேட் கேட்பதிலேயே குறியாக உள்ளனர். ஒரு நிலையில் கடுப்பான அஜித் வலிமை பட அப்டேட் வெளியாகும் வரை பொறுமை காக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டார்.

director h vinoth give the valimai updating

ஆனால் இன்னும் ரசிகர்கள் பலர், தொடர்ந்து அப்டேட் கேட்டு வரும் நிலையில், படத்தின் இயக்குனர் எச்.வினோத் சூப்பர் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். வலிமை மோஷன் போஸ்டர் தயாராகிவிட்டதாக கூறியுள்ளார். இதனால் தல ரசிகர்கள் உற்சாகத்தில் #valimaimotionposter  என்கிற ஹேஷ் டாக்கை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios