பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினம், நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இதனால் பிக்பாஸ் குடும்பமே சோகத்தில் மூழ்கினர். அதிலும் பாலாஜியின் மகள் போஷிகா பாலாஜியிடம் பேசிய போது, போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருமே அழுது விட்டனர்.

இந்நிலையில் மீண்டும் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது, பிக்பாஸ் விளையாட்டு. அதனால் இந்த வாரத்திற்கான நாமிநேஷன் நடைபெறுகிறது.

இதில் பிக்பாஸ் குரல், இந்த நிகழ்ச்சியின் மீது ஆர்வம் இல்லாமல், மெத்தனம் காட்டும் போட்டியாளர்கள் பெயர்களை நாமினேட் செய்ய வேண்டும் என கூறுகிறது. பின் ஒவ்வொரு போட்டியாளராக சென்று விருப்பம் இல்லாமல் விளையாடுவதாக தோன்றும் நபரின் பெயரை சொல்லி அதற்கான காரணத்தையும் கூறுகிறார்கள்.

கடைசியாக செல்லும் நடிகர் சென்ராயன், ஐஸ்வர்யா பெயரை கூறுகிறார். இவரை தான் நாமிநேஷன் செய்ய காரணம் அவர் மெச்சூரிட்டி இல்லாமல் விளையாடுவதாக கூறுகிறார். இதற்கு பிக்பாஸ் நீங்கள் சொல்லும் காரணம் சரியானது அல்ல என அவரையே குழப்பி விடுகிறது. பின் என்ன காரணம் சொல்லுவது என தெரியாமல் சென்ராயன் திணறுவது போல் ப்ரோமோ வெளியாகியகியுள்ளது.

இதற்கு பலர் இவ்வளவு அப்பாவியா இருக்கீங்களே சென்ராயன் என ரசிகர்கள் சிலர் அவர்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.