பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களில், மிகவும் எதார்த்தமான மனிதர் என பெயர் எடுத்துள்ளவர் காமெடி நடிகர் சென்ராயன்.

இந்நிலையில் தற்போது இவருடைய மனைவியிடம் பல ஊடகத்தை சேர்ந்தவர்கள். பேட்டி எடுத்து வருகிறார்கள். சமீபத்தில் இவர் கொடுத்துள்ள ஒரு பேட்டியில் தன்னுடைய கணவர் சென்ராயனுக்கு சப்போர்ட் செய்யாமல் போட்டியாளர் ரம்யாவிற்கு சப்போர்ட் செய்துள்ளார் கயல்விழி.

கடந்த மூன்று வாரத்திற்கு முன்பு, சென்ராயன் மற்றும் போட்டியாளர்கள் சிலர் நீச்சல் குளத்தில் குளித்து கொண்டிருந்தபோது, திடீர் என சென்ராயன் தும்பினார். அப்போது அவருடைய மூக்கில் இருந்து சளி வந்தது.

 

இதனால் நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த ரம்யா மற்றும் போட்டியாளர்கள் சிலர் உடனடியாக அதில் இருந்து வெளியேறினர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சென்ராயன் கமலிடம் பேசும் போது அனைவரும் நடிப்பதாகவும், திடீர் என வந்த தும்பளால் சளி வந்தது அதனால் தன்னை பிரித்து பார்த்ததாக கூறினார். 

உண்மையில் சென்ராயனின் தரப்பில் இருந்து பார்த்தல், அவர் சொல்லுவதில் நியாயம் உண்டு. அதே போல் நாகரீகம் என்கிற கோர்வையில் இருக்கும் போட்டியாளர்களுக்கு இப்படி நடந்து கொள்வதில் தவறில்லை என்று இதற்கு கலவையான கருத்துக்களே வந்தது. 

இந்நிலையில் சென்ராயன் மனைவி கயல்விழி, இந்த சம்பவம் குறித்து கூறுகையில். ரம்யா செய்தது சரி தான். சென்ராயன் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். இதனால் அவருக்கு இது பெரிதாக தெரிகிறது. ஆனால் ரம்யா மற்றும் மற்ற போட்டியாளர்கள் சிட்டியில் வாழ்பவர்கள் இதனால் அவர்கள் செய்ததும் தவறில்லை என இரண்டு பக்கத்தில் இருந்தும் யோசித்து பதில் கூறியுள்ளார். 

தன்னுடைய கணவருக்காக பேசாமல், பொது நிலையாக பதில் கொடுத்துள்ள இவரை ரசிகர்கள் சிலர் பாராட்டி வருகிறார்கள்.