பல முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கியுள்ள, இயக்குனர் ஏ.எல்.விஜய் கடந்த வருடம் ஐஸ்வர்யா என்கிற பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது இவர்களுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ள விஷயத்தை, ஏ.எல்.விஜய்யின் சகோதரர் மிகவும் சந்தோஷத்தோடு தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்:  விமானத்தை வாடகைக்கு எடுத்து புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பிய நடிகர் சோனு சூட்!
 

முதல் படத்திலேயே, ரசிகர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த ஒரு சில இயக்குனர்களில் ஒருவர் ஏ.எல்.விஜய். தல அஜித்தை வைத்து ’கிரீடம்' படத்தை இயக்கி வெற்றி கண்ட இவர், இந்த படத்தை அடுத்து இயக்கிய 'மதரசாபட்டினம்' , 'தெய்வத்திருமகள்' போன்ற படங்கள் இவருக்கு சிறந்த இயக்குனருக்கான விருதுகளையும் பெற்று தந்தது.

தற்போது வரை இவர் இயக்கத்தில் விஜய் நடித்த ’தலைவா’ திரைப்படம் பலரது பேவரட் படங்களில் ஒன்று. இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை அமலாபாலை, காதலித்து, கடந்த 2014 ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

மேலும் செய்திகள்:  கொரோனாவால் வந்த பிரச்சனை... குழந்தை பெற்று கொள்ளும் ஆசையில் இருந்து பின்வாங்கிய காமெடி நடிகர்!
 

அழகாய் துவங்கிய இவர்களது திருமண வாழ்க்கை, கடைசியில் கருத்து வேறுபாடு முற்றி விவாகரத்தில் முடிந்தது. அதன்படி இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தார்.

இதை தொடர்ந்து, இயக்குனர் ஏ.எல்.விஜய் கடந்த ஆண்டு ஐஸ்வர்யா என்கிற மருத்துவரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் விஜய்யின் மனைவி ஐஸ்வர்யா கர்ப்பமாக இருந்த நிலையில் இவர்களுக்கு, இன்று காலை சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.

மேலும் செய்திகள்:  கைக்குட்டையில் மேலாடை... ஷாலு ஷம்மு - மீரா மிதுனை மிஞ்சிய இளம் நடிகை! சோசியல் மீடியாவை சூடாக்கிய ஹாட் போட்டோஸ்
 

இந்த தகவலை, இயக்குனர் ஏ.எல்.விஜய்யின் சகோதரர்... உதயவும் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

மேலும் செய்திகள்:  திருமணத்தில் செம்ம ஆட்டம் போட்ட மஹத் - பிராச்சி! முதல் முறையாக வெளியான கொண்டாட்ட வீடியோ!
 

இயக்குனர் விஜய் தற்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தை ’தலைவி’ என்ற பெயரில் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் கொரொனா வைரஸ் பரபரப்பு முடிந்த பின்னர் இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளிவர உள்ளதாகவும் கூறப்படுகிறது.