பாலிவுட் மற்றும் கோலிவுட் திரையுலகில் பல படங்களில் வில்லனாக நடித்து வரும்,  நடிகர் சோனு சூட் தனி விமானத்தை வாடகைக்கு எடுத்து, சொந்த ஊருக்கு செல்லமுடியாமல் கேரளாவில் தவித்து வந்த 167 புலம்பெயர் தொழிலாளர்களை, அவர்களது சொந்த மாநிலமான ஒடிசாவுக்கு அனுப்பி வைத்துள்ளார். 

மேலும் செய்திகள்: ஹீரோ கூட ஓகே... இது ஒத்து வருமா..! ரிஸ்க் எடுக்க துணிந்த வடிவேலு?
 

வில்லனாக நடித்து வந்தாலும், மனதால் ரியல் ஹீரோ என நிரூபித்துள்ளார் பிரபல பாலிவுட் பட நடிகர் சோனு சூட். இவர் தமிழில் நடிகர் சிம்பு நடித்த 'ஒஸ்தி', சூப்பர் ஸ்டார் நடித்து  'சந்திரமுகி' , அனுஸ்கா நடித்த 'அருந்ததி' உள்ளிட்ட பல படங்களில் முரட்டு வில்லனாக நடித்து மிரட்டியுள்ளார். 

சமூக சேவை செய்வதில் ஆர்வம் உள்ள சோனு சூட், கடந்த இரண்டு மாதங்களாகவே, கொரோனா வைரஸால் போடப்பட்ட ஊரடங்கினாள் பாதிக்கப்பட்ட ஏழை தொழிலாளர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.  ஏற்கனவே மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தினக்கூலி வேலை செய்து வந்த தொழிலாளர்கள், அவர்களது சொந்த மாநிலங்களுக்கு செல்வதற்கு பஸ் வசதி ஏற்படுத்தி கொடுத்தார்.

மேலும் செய்திகள்: சின்னத்திரை படப்பிடிப்பு... அதிரடி உத்தரவு போட்ட முதலமைச்சர்!
 

மேலும் மும்பை நகரங்களில் வசித்து வரும் ஏழை  தொழிலாளர்களுக்கு தினமும் உணவுப் பொருட்கள் வழங்கி வருகிறார். அந்த வகையில் கேரள மாநிலம் கொச்சியில் கூலி வேலை பார்த்து வந்த 147 பெண்கள் உட்பட 167 தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலமான ஒடிசாவுக்கு செல்ல முடியாமல் தவிப்பதாக, தன்னார்வ அமைப்புகள் மூலம் சோனு சூட்டுக்கு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அவர்களை சொந்த ஊருக்கு அனுப்புவதற்காக,  சிறப்பு விமானத்தை வாடகைக்கு எடுத்து அதில் 167 தொழிலாளர்களையும் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தார். இதற்கான முழு செலவையும் அவரே ஏற்றுள்ளார். இந்த விமானம் நேற்று காலை 8 மணிக்கு கேரளாவில் இருந்து புறப்பட்டு 10 மணிக்கு புவனேஷ்வர் வந்தடைந்தது.  

மேலும் செய்திகள்: கைக்குட்டையில் மேலாடை... ஷாலு ஷம்மு - மீரா மிதுனை மிஞ்சிய இளம் நடிகை! சோசியல் மீடியாவை சூடாக்கிய ஹாட் போட்டோஸ்
 

இதுகுறித்து சோனு சூட் கூறுகையில், வறுமையில் வாடும் ஏழை மக்களுக்கு, சரியான நேரத்தில் உதவுவதை விட வேறு பெரிய நற்செயல் எதுவும் இல்லை என கருதுகிறேன் என்னுடைய இந்த முயற்சிக்கு உதவிய ஏர் ஏசியா விமான நிறுவனத்திற்கு நன்றி என தெரிவித்துள்ளார். எந்த ஒரு பிரதி பலனையும் பாராமல் இவர் செய்து வரும் உதவிகளுக்கு ரசிகர்கள் தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.