காமெடி நடிகர் வைகை புயல் வடிவேலு, பிரபல இயக்குனர் ஒருவர் இயக்க உள்ள படத்தில், முன்னணி ஹீரோ ஒருவருக்கு வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காமெடி என்றாலே, கோலிவுட் திரையுலகில் பலருக்கும் கண் முன் வந்து செல்லும் கமெடிய நடிகர்களில் ஒருவர் வைகை புயல் வடிவேலு. இவர் இல்லாதா மீம்ஸுகளே இல்லை என சொல்லும் அளவிற்கு மீம்ஸ் கிரியேட்டர்கள் இவரை கொண்டாடி வருகிறார்கள். அதே போல் இளைஞர்கள், சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவருடைய மனதிலும் தன்னுடைய காமெடி மூலம் ஆழமாக பதிந்து விட்டார். இவர் திரைப்படங்களில் இருந்து சில வருடங்கள் ஒதுங்கி இருந்தாலும் இவருடைய காமெடி ஒவ்வொரு நாளும், போன், தொலைக்காட்சி போன்றவற்றில் தினமும் பல ரசிகர்கள் பார்த்து சிரித்து வருகிறார்கள்.

காமெடி ரோல் மட்டும் அல்ல, கதாநாயகனாகவும் நடித்து வெற்றி கண்டார் வடிவேலு.  இவர் இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில், 2006 ஆம் ஆண்டு நடித்த இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படம், மிகப்பெரிய வெற்றி பெற்றது. 

எனவே இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை, 11 வருடங்கள் கழித்து மீண்டும் இயக்குனர் சிம்பு தேவன் இயக்க தயாரானார். இந்த படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தயாரிக்க இருந்தார். கடந்த 2017 ஆம் ஆண்டு படப்பிடிப்பு துவங்கியது. இந்த படத்தில் ஹீரோவாக நடிகர் வடிவேலு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

படப்பிடிப்பு துவங்கிய சில நாட்கள் மட்டுமே படத்தில் நடித்த வடிவேலு, பின் சரியாக படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை என பட குழுவினர் மத்தியில் இருந்து பிரச்சனை வர துவங்கியது. பின் தயாரிப்பாளர் ஷங்கர் இது குறித்து, நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தார். 

இதுகுறித்த பிரச்சனைக்கு நடிகர் வடிவேலு சரிவர ஒத்துழைப்பு தரவில்லை என கூறி, தயாரிப்பாளர் சங்கம், வடிவேலு தமிழ் படங்களில் நடிக்க தடை விதித்தது. எனவே இந்த படத்தை தொடர்ந்து வடிவேலு மற்ற படங்களில் நடிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இந்த பிரச்சனைகள் அனைத்தையும் கடந்து, கடைசியாக... ராகவா லாரன்ஸ் நடித்த சிவலிங்கா, மற்றும் விஜய் நடித்த மெர்சல் ஆகிய படங்களில் நடித்தார். மேலும் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ள, காமெடி தொடர் ஒன்றில் வடிவேலுவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவலில்,  இயக்குனர் மிஷ்கின், நடிகர் சிம்புவை வைத்து அடுத்ததாக இயக்க உள்ள படத்தில், நடிகர் வடிவேலு அதிரடியாக வில்லனாக அவதாரம் எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் ஒருவேளை உண்மையானால், நடிகர் வடிவேலுவை வில்லனாகவும் ரசிகர்களால் பார்க்க முடியும். அதே நேரத்தில் ஹீரோவாக நடித்து வெற்றி கண்ட வடிவேலு, வில்லனாக வெற்றிபெறுவாரா என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தற்போது நடிகர் சிம்பு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், உருவாகி வரும்... 'மாநாடு' படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் கொரோனா பிரச்சனையின் காரணமாக படப்பிடிப்பு பணிகள் முடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.