நடிகர் மஹத் தனது காதலியான முன்னாள் மிஸ் இந்திய அழகி, பிராச்சி மிஸ்ராவை இந்த ஆண்டு பிப்ரவரி மாதம், பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு திருமணம் ஆகி மூன்று மாதம் ஆகும் நிலையில் தற்போது தங்களுடைய திருமண கொண்டாட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

நடிகர் மஹத் மங்காத்தா, பிரியாணி, ஜில்லா, போன்ற பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடிக்க துவங்கியவர். இதை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 3 , நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டு 70 ஆவது நாளில், இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

பிக்பாஸ் மூலம் கிடைத்த அறிமுகம், குணச்சித்திர வேடத்தில் நடித்து வந்த இவரை தற்போது ஹீரோவாக மாற்றியுள்ளது. 'கெட்டவனு பேர் எடுத்த நல்லவன்டா' , ' இவன் உத்தமன்' ஆகிய படங்களில் நாயகனாகவும், விஜய் டிவி தொலைக்காட்சியில் நடைபெற்று வரும், டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்து வருகிறார்.

சமீபத்தில் கூட, கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு கை கொடுக்கும் விதத்தில்,  தான் பெரிய நடிகன் இல்லை என்றாலும், தற்போது கதாநாயகனாக நடித்து வரும் படங்களுக்கு வாங்கும் சம்பளத்தில் இருந்து 50 சதவீத சம்பளத்தை குறைத்து கொள்வதாக அறிவித்தார்.

இந்நிலையில் மஹத்துக்கும் - பெமினா மிஸ் இந்தியா, மிஸ் எர்த் ஆகிய உலக அழகி பட்டங்களை பெற்றுள்ள பிராச்சி மிஸ்ராவிற்கும், பீச் ரிசார்ட் ஒன்றில், மிகவும் பிரமாண்டமாக  திருமணம் நடைபெற்றது. இதில், மஹத் மற்றும் பிராச்சியின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமே அதிக அளவில் கலந்து கொண்டனர். திரையுலகை சேர்ந்த சிம்பு உள்ளிட்ட ஒரு சில பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

திருமணம் நடந்து முடிந்து 3 மாதத்திற்கு பின், மஹத்தின் மனைவி பிராச்சி மிஸ்ரா, முதல் முறையாக தங்களுடைய திருமண கொண்டாட்டத்தை, ரசிகர்களுக்கு தெரியப்படுத்தும் விதத்தில், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் ஆட்டம் பாட்டம் என மஹத் - பிராச்சி குடும்பத்தினர் மிகவும் சந்தோஷமாக உள்ளனர்.

ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வரும் அந்த வீடியோ இதோ...