பிரபல காமெடி நடிகர் ஒருவர், இந்த வருடம் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்திருந்த நிலையில், தற்போது உலகையே அச்சுறுத்தி வரும், கொரோனா பிரச்சனையின் காரணமாக தற்காலிகமாக இந்த முடிவை தள்ளி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

பாலிவுட் திரையுலகத்தில் பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்து பிரபலமானவர் காமெடி நடிகர் பார்தி சிங். இவர் எழுத்தாளர் ஹர்ஷ் லிம்பச்சயா என்பவரை  கடந்த 2017-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இதுநாள் வரை இந்த தம்பதிகள், தங்களுடைய கேரியர் மற்றும் ஒரு சில காரணங்களுக்காக குழந்தை பெற்று கொள்வதை தள்ளி போட்டனர். மேலும் 2020 ஆம் ஆண்டில் குழந்தை பெற்று கொள்ளும் முடிவையும் எடுத்தனர். 

இதுகுறித்து அவர்கள் தற்போது சமூக வலைத்தளம் ஒன்றில் கூறுகையில், இந்த வருடம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என நாங்கள் எடுத்த முடிவை, கொரோனா வைரஸ் மாற்றியுள்ளது. குழந்தை பெற்று கொள்ளை ஆசை பட்டு, ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. தங்களுடைய குழந்தை அமைதியான நிலையில் தான் இந்த பூமிக்கு வர வேண்டும் என நினைக்கிறோம்.

அதற்க்கு மாறாக இப்போது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஆசையில் நாங்கள் இருந்தால், அது தங்களின் குழந்தையின் உயிரோடு விளையாடுவதற்கு சமம். 

தற்போது உள்ள சூழ்நிலையில், மருத்துவமனைகளுக்கு சென்றுவருவது போன்ற விஷயங்கள் மனதிற்குள் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆகவே ஒரு வருடம் கழித்த பிறகே குழந்தை பெற்று கொள்ளலாம் என்கிற முடிவில் இருப்பதாக தெரிவித்துள்ளனர் இந்த தம்பதிகள்.