பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது அடுக்கடுக்காக பல பிரச்சனைகள் வெடித்து கொண்டிருக்கிறது. மேலும் தற்போது போட்டியாளர்களில் ஒருவரான வைஷ்ணவி ரகசிய அறையில் இருப்பதால் இவர்கள் செய்வதையும், பேசுவதையும் ஜாலியாக கேட்டு ரசித்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில், நேற்றைய தினம் பாலாஜி மற்றும் ஐஸ்வர்யா இருவருக்குள் வெடித்த பிரச்சனை இன்னும் ஓயவில்லை என்பது தெரிகிறது.

பாலாஜி எதோ கூற, இதனால் உச்ச கட்ட கோவத்திற்கு செல்கிறார் ஐஸ்வர்யா. பின் உன்னை வச்சி செய்யப்போகிறேன் என சவால் விடுகிறார். திடீர் என எனக்கு எல்லாம் தெரியும்... இங்க என்ன நடக்குது என கூறி வெயிட் என சொல்கிறார். 

இதைதொடர்ந்து பாலாஜி அமைதியாக அமர்ந்திருக்கும் காட்சி காட்டப்படுகிறது. இவரை பார்த்து இன்னும் டென்ஷன் ஆகும் ஐஸ்வர்யா... குப்பை தொட்டியில் இருக்கும் குப்பைகளை பாலாஜி மீது கொட்டுகிறார். இவர் செய்வதை மற்ற போட்டியாளர்கள் வேண்டாம் என கூறியும் மீறி குப்பையை கொட்டினார். இதற்கு பாலாஜி மிகவும் அமைதியாக அமர்ந்திருக்கும் கையை மட்டும் காட்டுகிறார். ஏன் இந்த பிரச்சனை வெடிக்கிறது இவரின் இந்த கோவத்திற்கு காரணம் என்ன என இன்று தெரியவரும்.