தமிழ், மலையாளம் போன்ற மொழிகளில் பல படங்களில் கவர்ச்சி வேடத்தில் நடித்து, பிரபலமானவர் நடிகை சோனா. கடந்த இரண்டு வருடத்திற்கு முன், இனி கவர்ச்சியான வேடத்தில் நடிக்க போவதில்லை என தெரிவித்தார். இதை தொடர்ந்து, நல்ல கதைக்களம் கொண்ட படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இந்நிலையில், இவர் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள திரைப்படம் 'பச்சமாங்கா' . பிரபல நடிகரும், இயக்குனருமான பிரதாப் போத்தன் இந்த படத்தில் நாயகனாக நடித்துள்ளார். நடிகை சோனா நாயகியாக நடித்துள்ளார்.

இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் நடிகை சோனா இருவருடன் படுக்கையறை காட்சியில் நடித்திருந்தது சற்று பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் மிகவும் கவர்ச்சியாக சோனா நடித்துள்ளார் என்கிற பல்வேறு விமர்சனங்களும் பறந்தன.

இந்நிலையில், 1 நிமிடம் 30 நொடி மட்டுமே வெளியாகியுள்ள ட்ரைலரை வைத்து தன்னுடைய கதாப்பாத்திரத்தை தவறாக சித்தரிக்க வேண்டாம் என, நடிகை சோனா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் நச் என கேள்வி ஒன்றையும் எழுப்பியுள்ளார். 'பச்சை மாங்கா' படத்தில் நான் கவர்ச்சியாக நடித்திருந்தால் எப்படி பிரதாப் போத்தன் தன்னுடன் நடித்திருப்பார். கேரளா பெண்கள் எப்படி உடை அணிந்திருப்பார்களோ அதே போல் தான் நானும் உடை அணிந்து நடித்துள்ளேன்.

படம் வெளியானதும், கண்டிப்பாக இப்படத்தில் தன்னுடைய கதாப்பாத்திரம் பேசும் படி இருக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ள சோனா, ட்ரைலரை மட்டுமே பார்த்து விட்டு தன்னை தவறாக சித்தரித்து பேச வேண்டாம் என பதில் கொடுத்துள்ளார்.

 

கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட மலையாளப்படமான பச்சமாங்கா விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  ஜெஷீதா ஷாஜி மற்றும் பால் பொன்மணி  தயாரித்துள்ள இப்படத்தை ஜெய்ஸ் இயக்கியுள்ளார்.