'ஜெயம்கொண்டான்', உன்னாலே உன்னாலே', கல்யாண சமையல் சாதம்' போன்ற  ஒருசில படங்களில் நடித்தவர் நடிகை லேகா வாஷிங்டன். 

சமீப காலமாக உலவி வரும் நடிகைகளின் அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து, தன்னுடை அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

இதே போல் பல நடிகைகள் பாவனாவின் பாலியல் துன்புறுத்தலுக்கு பிறகு, திரையுலகில் தாங்கள் சந்தித்த மறக்க முடியாத நிகழ்வுகளை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஒரு பிரபல இயக்குனர் தனக்கு  அவர் படத்தில் நடிப்பதற்கு  வாய்ப்பு தருவதாக கூறினார், நானும் அதை நம்பி அவரிடம் கதையை கேட்டு நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்ததும், அட்ஜஸ்ட்மென்ட் பற்றி மெதுவாக பேச்சை தொடங்கி தவறாக நடக்க முயற்சி செய்தார்

ஆனால் நான் அதற்கு இடம் தரவில்லை. அவர் என்னை விடாமல் தொலைபேசியிலும் அழைத்து இது குறித்து பேசி வற்புறுத்தியும் அவர்க்கு தோல்விதான் கிடைத்தது. நானும் அந்த படத்தில் நடிக்க வாய்ப்பே வேண்டாம் என விலகிவிட்டேன்.

பின் சில நாட்கள் கழித்து அதே இயக்குனர் வேறொரு முன்னணி நடிகையுடன் அதே படத்திற்காக வெளிநாட்டுக்கு படப்பிடிப்புக்கு சென்றார். 

அங்கு அவர் அதிக  டோஸ் வயாக்ரா பயன்படுத்தியதால்  மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்ததாக செய்தி வெளிவந்தது. இந்த சம்பவம் எனக்கு விதி வலியது என்பதை உணர்த்தியது என லேகா கூறினார்.