Asianet News TamilAsianet News Tamil

இரண்டு வருடம் இதுக்கு தடை போட்ட மருத்துவர்.....ஷாக்கில் இருந்து மீளாத நடிகை முமைத்கான்...!!!   

actres mumaithkhan-schoking-news
Author
First Published Feb 10, 2017, 1:35 PM IST


பவுர்ணமி நாகம், பிரசாந்த் நடித்த மம்முட்டியான் ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை முமைத்கான், மேலும்    வில்லு படத்தில்  'டாடி மம்மி வீட்டில் இல்ல.'  பாடலில் விஜய்யுடன் கவர்ச்சி  நடனமாடி அசத்தியவர்.    

அதே போல கந்தசாமி படத்தில் 'என் பேரு மீனாகுமாரி' போன்று பல கவர்ச்சி நடனங்களும் ஆடியுள்ளார். இந்நிலையில் அவர் பற்றிய அதிர்ச்சியான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

சென்ற வருடம் காலில் நரம்பு கோளாறு காரணமாக அவருக்கு மேஜர் ஆபரேஷன் நடந்துள்ளது, இந்த சிகிச்சையின்  தாக்கத்தால்  அவர் கடந்த  இரண்டு வாரமாக கோமாவில் நிலைக்கு சென்றுவிட்டாராம்  

அதற்கு பிறகு சமீபத்தில் தான் இவருக்கு நினைவு வந்து விழித்திருக்கிறார், இதனால் அவருடைய உறவினர்கள் சந்தோஷப்பட்டாலும் , தற்போது அவரை  டாக்டர்   8 மாதங்களுக்கு நடக்கவே கூடாது, என்றும்  2 வருடங்களுக்கு நடனமாட கூடாது என தெரிவித்துள்ளாராம்.

நடன பிரியையான இவருக்கு இந்த செய்தி வருத்தத்தை கொடுத்தாலும்  முமைத் கான் இதை யாரிடமும் பகிராமல் ரகசியமாக வைத்திருந்துள்ளார். 

அதற்கு காரணம் தன்னை  பார்த்து யாரும் பரிதாபப்படுவது  தனக்கு  பிடிக்காது என கூறியுள்ளார். மேலும் பூரண குணமடைந்த பின்னர் மீண்டும் நடனமாட உள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார் முமைத்கான்.

Follow Us:
Download App:
  • android
  • ios