வெள்ளை சுப்பையாவின் அறிமுக படமே சிவாஜி கணேசன் நடிப்பில் வெள்ளி விழா கொண்டாடிய 'பாசமலர் திரைப்படம் தான்' இதை தொடர்ந்து சிறு சிறு வேடங்களில் நடித்த இவரை, அனைவருக்கும் தெரிந்த நடிகராக மாற்றியது "வைதேகி காத்திருந்தாள், கரகாட்டக்கரன் போன்ற திரைப்படங்கள் தான். 

இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள இவரின் நடிப்பு மிகவும் எதார்த்தமானது என இவரை பல இயக்குனர்கள் இவரை பாராட்டியுள்ளனர். 

தற்போது 74 வயதாகும் இவருக்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் கழுத்தில் ஒரு கட்டி வந்துள்ளது. ஆரம்பத்தில் இதை பெரிதாக கண்டு கொள்ளதா இவர், பின் வலி ஏற்பட்டதும் மருத்துவரை அணுகினார். அப்போது இவருக்கு கார்த்திருந்தது பேர் அதிர்ச்சி. ஆம் அவருடைய கழுத்தில் இருந்தது சாதாரண கட்டி இல்லை! கேன்சர் கட்டி என மருத்துவர்கள் தெரிவித்தனர். 

இதனை கேட்டதும் நொடிந்து போனார் வெள்ளை சுப்பையா. தொடர்ந்து திரைப்படங்கள் நடிப்பதிலும் அவர் கவனம் செல்லுத வில்லை. படங்கள் தொடர்ந்து நடிக்க அவருடை வயது மற்றும் உடல் நிலையும் ஒத்துழைக்க வில்லை. குடும்ப சூழ்நிலை காரணமாக இவரால் தன்னுடைய புற்றுநோய்க்கு மருத்துவம் பார்க்க பணம் இல்லாமல் அல்லடியதாக கூறுகிறார்கள் அந்த ஊர் மக்கள். மேலும் இவர் தன்னுடைய மருத்துவ உதவிக்காக அந்த ஊர் மாவட்ட ஆட்சியரிடமும் உதவி கேட்டும் பயன் இல்லை. ஒருவழியாக இவரின் கேன்சர் கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

வயது முதிர்வு காரணமாக, தன்னுடைய மகள் வீட்டில் இருந்த இவர் நேற்று அவருடைய சொந்த ஊரான கோவை, மேட்டுபாளையத்தில் வெள்ளை சுப்பையா காலமானார்.  அவரது  மறைவிற்க்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது. மேலும் அவருடைய மறைவிற்கு பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் சமூக வலைதளத்தில் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

அதே போல் தென்னிந்திய நடிகர் சங்கமும் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளது. பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்துள்ள இவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, கடைசி காலத்தில் கண்ணீரோடு தன்னுடைய வாழ்க்கையை முடிந்துள்ளது திரையுலக வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.