உலக நாயகன் கமலஹாசன் நடித்த, 'விரும்பாண்டி' படத்தின் மூலம் வில்லன் நடிகராக, அறிமுகமானவர் நடிகர் சாய் தீனா. படத்தில் வில்லன் வேடத்தில் நடித்தாலும் உண்மையில் ரொம்ப நல்ல மனிதர்.

தன்னால் முடிந்தவரை மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், வேலைக்கு செல்லமால்... அன்றாட பிழைப்பிற்கு கூட கஷ்டப்பட்டு வரும் 250 குடும்பத்திற்கு மளிகை பொருட்கள் கொடுத்து உதவியுள்ளார் நடிகர் சாய் தீனா.

அதன் படி தன்னுடைய சொந்த செலவில், அவர் நடத்தி வரும் L.F.E.அமைப்பு மூலமாக 5 கிலோ அரிசி,1 கிலோ கோதுமை மாவு,சாம்பார் பருப்பு ஆகிய பொருட்களை, 250 குடும்பங்களுக்கு  கொடுத்து உதவியுள்ளார்.

நடிகர் சாய் தீனா மக்களுக்கு உதவி செய்த புகைப்பகங்கள் சமூக வலைத்தளத்தில் கசியவே, இவருக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.