சூர்யா 42... ரசிகர்களுக்கு காத்திருக்கும் தரமான சம்பவம்! வெளியாகும் முன்பே வெறித்தனம்.. வெளியான 10 ரகசிய தகவல்
நடிகர் சூர்யா தற்போது தன்னுடைய 42 ஆவது படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வரும் நிலையில், இப்படம் குறித்து... 10 ரகசிய தகவல்கள் கசிந்துள்ளன. அவை என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம்...
தமிழ் சினிமாவில் தொடர்ந்து, கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படங்களில், நடிகர் தனுஷுக்கு பிறகு அதிக ஆர்வம் காட்டி வருபவர் நடிகர் சூர்யா. தற்போது சூர்யா தன்னுடைய 42-வது படத்தில் முழு கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தை, இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். பீரியட் பிலிம்மாக எடுக்கப்பட்டு வரும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய படக்குழுவினரும் கடுமையாக உழைத்து வருகிறார்கள்.
இப்படத்தில் பல கெட்டப்புகளில் சூர்யா நடிக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், இதுவரை எத்தனை வேடங்கள் என அதிகாரபூர்வமாக கூறவில்லை. மேலும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தீஷா பதானி நடித்து வருகிறார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக கே.இ.ஞானவேல் ராஜா இதுவரை இல்லாத அளவுக்கு, மிகப்பெரிய பட்ஜெட்டில் இப்படத்தை தயாரித்து வருகிறது.இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அம்மாடியோவ்...ஒரு ஆஸ்கர் விருதுக்கு இத்தனை கோடி செலவு செய்தாரா ராஜமௌலி? ஷாக்கிங் தகவல்.!
இந்நிலையில் இப்படம் குறித்த சுவாரஸ்யமான 10 தகவல்கள் சமூக வலைத்தளத்தில் வட்டமிட்டு வருகிறது. அவை என்னென்ன தெரியுமா?
சூர்யா 42 படத்தில், நடிகர் சூர்யா 13 வேடத்தில் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, 5 அல்லது 6 வேடங்களில் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
முதலாவது கதாபாத்திரத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் நிறைவடைந்து விட்டதாம்.
அடுத்த கதாபாத்திரத்தின் பகுதி, பீரியட் போர்ஷன் அடுத்த வாரம் எடுக்க பட உள்ளதாக கூறப்படுகிறது.
இதன் Sub Plot ஒரு குழந்தை மற்றும் சூர்யாவை சுற்றியுள்ளதாக இருக்கலாம் என்பது கூறப்படுகிறது.
இன்னும் அடுத்தடுத்த கெட்டப் காட்சிகள் படமாக்க பட உள்ளதால் பீரியட் போர்ஷன் முடிந்த பிறகு அடுத்தடுத்த கதாபாத்திரங்களின் படப்பிடிப்பை மிகவும் வேகமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.
ஒவ்வொரு படத்துக்கும் ஏதாவது ஒரு சீன் முக்கியமான பேசுபொருளா இருக்கும் அல்லவா.. அந்த வகையில் இந்த படத்தில் " Flight Fight" செம ஹை பாயிண்டா இருக்கும் என கூறப்படுகிறது.
சூர்யா 42 படம், படப்பிடிப்பு முடிவதற்கு முன்பே சுமார் 500 கோடி கல்லா கட்டியுள்ளது.
சூர்யா 42 படத்தின் ப்ரோமோ படப்பிடிப்பு முடிந்து விட்டதாக கூறப்படுகிறது.
விரைவில் இப்படத்தின் டைட்டில் மற்றும் ப்ரோமோ வீடியோவை வெளியிட படக்குழு தயாராக உள்ளார்களாம்.
சூர்யா பல கெட்டப்புகளில் நடிப்பதால் , இது மிகவும் பெரிய படமாக உருவாக உள்ளது. எனவே இப்படத்தை பொன்னியின் செல்வன் பாணியில் இரண்டு பாகமாக வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல்.
கண்டிப்பாக இப்படம், பொங்கல்... தீபாவளி.. போன்று பண்டிகை நாட்களை குறிவைத்து வெளியிடும் திட்டத்தில் உள்ளதாம் படக்குழு.