அம்மாடியோவ்...ஒரு ஆஸ்கர் விருதுக்கு இத்தனை கோடி செலவு செய்தாரா ராஜமௌலி? ஷாக்கிங் தகவல்.!
ஆஸ்கர் விருதை பெறுவதற்காக, மிகப்பெரிய தொகையை RRR படக்குழு செலவு செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.
இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'ஆர் ஆர் ஆர்' சுதந்திர போராட்ட வீரர்களான, கோமரம் பீம் மற்றும் சீதா ராமராஜு ஆகிய இரு வீரர்களை பற்றி கமர்சியல் கதையம்சத்துடன் எடுக்கப்பட்ட இப்படத்திற்கு, ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.
இப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்த ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரின் நடிப்பும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று, உலக அளவில் தங்களை திரும்பிப் பார்க்க வைத்தனர். மேலும் இப்படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி இசையில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் இந்தியா சார்பில் சிறந்த ஒரிஜினல் பாடலுக்காக ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரை செய்யப்பட்டது.
ஏற்கனவே கோல்டன் குளோப் விருதை வாங்கிய இப்பாடல், கண்டிப்பாக ஆஸ்கர் விருதை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்... நேற்று லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ஆஸ்கர் விருது விழாவில், சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் 'ஆர் ஆர் ஆர்' படத்தில் இடம்பெற்ற, நாட்டு நாட்டு பாடலுக்காக இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் இந்த பாடலின் பாடல் ஆசிரியர் சந்திரபோஸ் ஆகியோருக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது.
இந்த தருணம் ஆர் ஆர் ஆர் பட குழுவினரை மட்டுமின்றி, இந்திய திரையுலகத்தையே மிகவும் பெருமை கொள்ள வைத்துள்ளது. மேலும் காலை முதலே பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல்வாதிகள், நடிகர்கள், நடிகைகள், என அனைவருமே தொடர்ந்து படக்குழுவினருக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இதையடுத்து, இந்த ஆஸ்கர் விருதுக்காக படக்குழு தரப்பில் இருந்து சுமார் 80 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக சமூக வலைதளத்தில் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஆஸ்கர் விருதுக்காக பல்வேறு புரமோஷன் பணிகளில் இறங்கிய படக்குழு, சுமார் ஆறு மாதங்கள் அங்கேயே தங்கி... பல்வேறு ஊடகங்களில் இப்பாடல் குறித்த செய்திகளை வைக்க 80 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது வெளியாகி பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.
ஏற்கனவே பார்த்திபன், தன்னுடைய ஒத்த செருப்பு படம் ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் இடம்பெறமே சில லட்சங்களை செலவு செய்ததாக கூறிய நிலையில், ஆஸ்கர் விருதை வாங்க வேண்டும் என்றால் இத்தனை கோடி செலவாகுமா என்பதை படக்குழு தான் கூறவேண்டும்.