பல உணர்ச்சிகளை ஒரு பாட்டுக்குள் பூட்டி வைத்த குறும்படம் போல் உருவான நாட்டு நாட்டு பாடல்! மதன் கார்க்கி பேட்டி!
பிரபல பாடலாசிரியர் மதன் கார்க்கி , RRR படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்து கொடுத்துள்ள பேட்டியில் உணர்ப்பு பூர்வமாக பேசியுள்ளார்.
பாகுபலி திரைப்படத்தின் மூலம் உலக சினிமாவையே... தென்னிந்திய திரையுலகின் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் எஸ் எஸ் ராஜமவுலி. இந்த படத்தை தொடர்ந்து சுதந்திரப் போராட்ட வீரர்களான கொமரம் பீம், மற்றும் சீதா ராமராஜு ஆகியோரின் வாழ்க்கை கதையை புனையப்பட்ட கதையாக இயக்கிய திரைப்படம் தான் ஆர் ஆர் ஆர்.
மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான இப்படத்தில், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களாக இருக்கும் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இணைந்து நடித்திருந்தனர். இப்படம் வெளியானது முதலே தொடர்ந்து அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் வாழ்த்துக்களை பெற்று, வசூலிலும் சாதனை படைத்த நிலையில் தற்போது ஆஸ்கர் விருதையும் வாங்கி, இந்திய திரையுலுகையே பெருமைப்படுத்தி உள்ளது.
நேற்று லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள, டால்பி திரையரங்கில் நடந்த ஆஸ்கர் விருது விழாவில் 'ஆர் ஆர் ஆர்' திரைப்படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஒரிஜினல் பாடலுக்கானபிரிவில் ஆஸ்கர் விருதை பெற்றது. இப்படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் இப்பாடலை எழுதிய சந்திரபோஸ் ஆகியோர் இந்த விருதுகளை பெற்றுக் கொண்டனர். இவ்விருதினை பெறுவதற்காக ஆர் ஆர் ஆர் பட குழுவினர், ஆஸ்கர் விருதுக்காக கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் அமெரிக்கா சென்றது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து தமிழில் இந்தியா சார்பில் பரிந்துரை செய்யப்பட்ட ஆவணப்படமான 'தி எலிபேண்ட் விஸ்பர்ரஸ்' ஆஸ்கர் விருதினை பெற்றுள்ளது. இதையடுத்து பிரபல பாடலாசிரியர் மகன் கார்க்கி, 'நாட்டு நாட்டு' பாடலுக்கு ஆஸ்கர் கிடைத்தது குறித்து மிகவும் உணர்வு பூர்வமாக பேட்டி கொடுத்துள்ளார்.
இந்த பேட்டியில், இசையமைப்பாளர் கீரவாணிக்கு ஆர் ஆர் ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கான கிடைத்த வெற்றி மட்டும், இத்தனை ஆண்டுகள் மிக அழகான பாடலை கொடுத்த ஒட்டுமொத்த பாடலுக்குமான வெற்றி. அதேபோல் இயக்குனர் ராஜமவுலி அவர்கள் ஒவ்வொரு படத்தின் மூலமாகவும், படத்தின் தரத்தை நாளுக்கு நாள் நாள் உயர்த்திக்கொண்டே போகிறார். அவரின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என தெரிவித்துள்ளார். அதேபோல் இப்படத்தில் நடித்த ராம்சரண் மற்றும் நடிகர் ஜூனியர் என்டிஆர், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.