MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சர்ச்சையை ஏற்படுத்திய இன்பநிதியின் பெண் தோழி புகைப்படங்கள்..! முதல் முறையாக பளார் பதிலடி கொடுத்த உதயநிதி!

சர்ச்சையை ஏற்படுத்திய இன்பநிதியின் பெண் தோழி புகைப்படங்கள்..! முதல் முறையாக பளார் பதிலடி கொடுத்த உதயநிதி!

பிரபல நடிகரும், அரசியல்வாதியுமான உதயநிதியின் மகன் இன்பநிதி அவருடைய பெண் தோழி ஒருவருடன் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில்,  இது குறித்த விமர்சனங்களுக்கு முதல் முறையாக பளார் பதிலடி கொடுத்துள்ளார் உதயநிதி. 

2 Min read
Author : manimegalai a
Published : Mar 11 2023, 09:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தளபதி விஜய் நடித்த 'குருவி' திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகி, பின்னர் நடிகராக மாறியவர் உதயநிதி ஸ்டாலின். இவர் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில், நடித்த 'ஒரு கல் ஒரு கண்ணாடி' திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெறவே, பட தயாரிப்பில் மட்டுமின்றி நடிகராகவும் அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க துவங்கினார். 
 

25

சமீப காலமாக இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில்,  நடிகர் தயாரிப்பாளர் விநியோகஸ்தர் என்பதை தாண்டி, தன்னுடைய தாத்தா மற்றும் அப்பா பாணியில் அரசியலில் திடீரென குதித்தார் உதயநிதி. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் போது, சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி வெற்றி வாகை சூடியதை தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.

'வணங்கான்' பட கெட்டப்பில் மிரட்டும் அருண்விஜய்..! சூர்யாவையே மிஞ்சிட்டாரே... வைரலாகும் புகைப்படம்!
 

35

இதைத்தொடர்ந்து சமீபத்தில் இவருக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியும் அளிக்கப்பட்டது. தற்போது தொடர்ந்து மக்கள் பணியில் கவனம் செலுத்த உள்ளதால், திரைப்படத்தில் நடிப்பதை நிறுத்தி விட்டதாக அதிரடியாக கூறினார். இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்து வரும் 'மாமன்னன்' திரைப்படம் தான், தன்னுடையை கடைசி திரைப்படம் என கூறிய இவர், கமலஹாசன் தயாரிப்பில் நடிக்க இருந்த படத்தில் இருந்தும் விலகினார்.
 

45

இந்நிலையில் 'கண்ணை நம்பாதே' பட ப்ரோமோஷன்காக தனியார் ஊடகம் ஒன்றில் பேட்டி கொடுத்த உதயநிதியிடம், அவருடைய மகன் இன்பநிதி பெண் தோழியோடு நெருக்கமாக இருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையானது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

புள்ளிங்கோ ஹேர் ஸ்டைலில்... சால்ட் அண்ட் பெப்பர் தாடியில் தளபதி! லியோ படத்திற்காக பிரபலத்துடன் நடந்த சந்திப்பு
 

55

இதற்கு பதிலளித்த உதயநிதி, தன்னுடைய மகனுக்கு 18 வயது ஆகிவிட்டது. இது அவருடைய பர்சனல். எனக்கும், என்னுடைய மனைவிக்கும், மகனுக்குமான விஷயம்...  இது எனவே இதைப்பற்றி வெளியே சொல்ல விரும்பவில்லை. இது அவருடைய பர்சனல், இதற்குள் நானே ஒரு லிமிட்டை தாண்டி தலையிட முடியாது என்று முதல்முறையாக மகனின் சர்ச்சை குறித்து பதிலடி கொடுத்துள்ளார். இவரில் இந்த பளார் பதில் தற்போது சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
உதயநிதி ஸ்டாலின்

Latest Videos
Recommended Stories
Recommended image1
மருமகன் வீட்டில் டேரா போட்ட மாமியார் காந்திமதி: இது சரியா? தவறா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2!
Recommended image2
விஜய், சங்கீதா, த்ரிஷாவின் தனிப்பட்ட வாழ்க்கை; அத்துமீறி நுழைந்து கருத்து கந்தசாமியாட்டம் கருத்து சொல்லும் பிரபலங்கள்!
Recommended image3
Netflix Top 10 : இந்த வாரம் OTT-ல என்ன பார்க்கலாம்? தெறிக்கவிடும் டாப் 10 படங்களின் லிஸ்ட் இதோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved