MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 'வணங்கான்' பட கெட்டப்பில் மிரட்டும் அருண்விஜய்..! சூர்யாவையே மிஞ்சிட்டாரே... வைரலாகும் புகைப்படம்!

'வணங்கான்' பட கெட்டப்பில் மிரட்டும் அருண்விஜய்..! சூர்யாவையே மிஞ்சிட்டாரே... வைரலாகும் புகைப்படம்!

'வணங்கான்' பட கெட்டப்பில் நடிகர் அருண் விஜய் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்து வருவது போன்ற புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

2 Min read
Author : manimegalai a
Published : Mar 11 2023, 07:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

எப்போதுமே வித்யாசத்தை புகுத்தி ரசிகர்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ற போல் திரைப்படம் இயக்கி வருபவர் இயக்குனர் பாலா. இவர் அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்காக நடிகர் விக்ரமின் மகன் துருவை வைத்து இயக்கிய, 'வர்மா' திரைப்படம், எதிர்பார்த்தது போல் வரவில்லை என்கிற காரணத்தால், படக்குழுவினரால் நிராகரிக்கப்பட்ட நிலையில்... பின்னர் ott தளத்தில் வெளியாகி,மோசமான விமர்சனங்களை சந்தித்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

இந்த படத்தை தொடர்ந்து, இயக்குனர் பாலா யாரை வைத்து படம் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நடிகர் சூர்யாவை வைத்து 'வணங்கான்' என்கிற படத்தை இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனமே தயாரித்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு  துவங்கிய நிலையில், படப்பிடிப்பும் முழு வீச்சில் நடந்து வந்தது.  ஒரு மாதத்திற்கு மேல் படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில், திடீரென சூர்யா தரப்புக்கும்... பாலா... தரப்புக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக 'வணங்கான்' படத்தில் இருந்து சூர்யா விலகுவதாக அதிரடியாக தெரிவித்தார். அதேபோல் 2டி எண்டெர்டைன்மென்ட் நிறுவனமும் இப்படத்திலிருந்து விலக்கியது.

புள்ளிங்கோ ஹேர் ஸ்டைலில்... சால்ட் அண்ட் பெப்பர் தாடியில் தளபதி! லியோ படத்திற்காக பிரபலத்துடன் நடந்த சந்திப்பு

35

சூர்யா - பாலா கூட்டணியில், உருவான வணங்கான் திரைப்படம் கைவிடப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், பாலா தரப்பில் இருந்து சூர்யா இப்படத்தின் கதாபாத்திரத்திற்கு பொருந்தவில்லை எனவே வேறு ஒரு நடிகரை வைத்து இப்படம் தயாராகும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது நடிகர் அருண் விஜய்யை ஹீரோவாக ஒப்பந்தம் செய்து மீண்டும் படப்பிடிப்பு பணிகள் துவனாகியுள்ளது.

45

 இப்படத்தின் முதல் பாகத்தில், சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த கீர்த்தி ஷெட்டியே இப்படத்திலும், ஜோடியாக நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்... தற்போது ஹீரோயினையும் அதிரடியாக மாற்றியுள்ளார் பாலா. அதன்படி 'வணங்கான்' படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரோஷினி பிரகாஷ் என்கிற இளம் நடிகை நடிக்கிறார் . இவர் ஏற்கனவே நடிகர் கதிருக்கு ஜோடியாக 'ஜடா' என்கிற படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

ஜூனியர் NTR அணிந்திருக்கும் இந்த வாட்ச் இத்தனை கோடியா? விலையை கேட்டு வாய்பிளக்கும் ரசிகர்கள்!

55

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், சூர்யாவையே மிஞ்சும் அளவிற்கு வேட்டி சட்டையில்... முரட்டுத்தனமான கெட்டப்பில் நடிகர் அருண் விஜய் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்து வரும் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. இப்படத்தில் அருண் விஜய் காது கேளாத, வாய் பேச முடியாத மாற்று திறனாளி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என கூறப்படுகிறது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்  என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
இயக்குநர் பாலா
அருண் விஜய்
சூர்யா
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image2
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image3
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved