புள்ளிங்கோ ஹேர் ஸ்டைலில்... சால்ட் அண்ட் பெப்பர் தாடியில் தளபதி! லியோ படத்திற்காக பிரபலத்துடன் நடந்த சந்திப்பு
தளபதி விஜய், வெறித்தனமாக புள்ளிங்கோ ஹேர் ஸ்டைலில்... சால்ட் அண்ட் பெப்பர் தாடி லுக்கில் முக்கிய பிரபலம் ஒருவரை சந்தித்த போது எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
'விக்ரம்' படத்தை உலக நாயகன் கமல்ஹாசனை வைத்து இயக்கி வெறித்தனமான ஹிட் கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ். மாஸ்டர் படத்தை தொடர்ந்து மீண்டும் தளபதி விஜய்யுடன் 'லியோ' படத்திற்காக கை கோர்த்துள்ளார். விஜய், கேங் ஸ்டாராக நடிக்கும் இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர், தளபதிக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்கிறார்.
மேலும் வில்லன்களாக அர்ஜுன், கவுதம் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் முக்கிய கதாபாத்திரத்தில், பிக்பாஸ் ஜனனி, அபிராமி வெங்கடாசலம், சாண்டி மாஸ்டர், நடிகை பிரியா ஆனந்த், நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோரும் நடித்து வருகிறார்கள்.
பிரமாண்டமாக கொண்டாடப்பட்ட ஆர்யா - சாயிஷாவின் நான்காம் ஆண்டு திருமணநாள்.! வைரலாகும் போட்டோஸ்..!
இப்படத்தின் டீசர் கடந்த ஓரிரு மாதத்திற்கு முன்னர் வெளியான போதே... இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில், தற்போது விஜய்யின் வெறித்தனமான லியோ படத்தின் கெட்டப் தற்போது வெளியாகியுள்ள புகைப்படம் மூலம் தெரியவந்துள்ளது.
'லியோ' படத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சஞ்சய் தத் தற்போது, விஜய், லோகேஷ் கனகராஜ் ஆகியோரை ரெஸ்டாரெண்ட் ஒன்றில் சந்தித்துள்ளதாக தெரிகிறது. எனவே கூடிய விரைவில் சஞ்சய் தத் காட்சிகள் படமாக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில்... இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட போட்டோஸ் வைரலாகி வருகிறது.