ஜூனியர் NTR அணிந்திருக்கும் இந்த வாட்ச் இத்தனை கோடியா? விலையை கேட்டு வாய்பிளக்கும் ரசிகர்கள்!
ஜூனியர் NTR தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில், அவர் கட்டி இருக்கும் வாட்ச் அனைவரது கவனத்தையும் ஈர்த்த நிலையில் இதன் விலை... தற்போது வெளியாகி ரசிகர்களை வாய்பிளக்க வைத்துள்ளது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான.. ஜூனியர் என்டிஆர், விதவிதமான வாட்ச் மற்றும் கார் சேகரிப்பில் அலாதி பிரியம் கொண்டவர். ஒவ்வொரு முறையும் இவர் அணியும் ஆடைகள், வாட்ச் போன்றவற்றை பற்றி தெரிந்து கொள்வதிலும் பல ரசிகர்கள் ஆர்வம் காட்டும் நிலையில், இவரின் லேட்டஸ்ட் வாட்ச் பற்றிய தகவல் தான் சமூக வலைத்தளத்தில் அதிகம் பேசப்படும் ஒன்றாக மாறியுள்ளது.
இன்று காலை ஜூனியர் என்டிஆர்... நேவி ப்ளூ ப்ளேசர் அணிந்து மிகவும் ஸ்டைலிஷாக இருக்கும் புகைப்படங்கள் சில வற்றை வெளியிட்டார். அதில் அவர் கட்டியுள்ள வாட்ச் பற்றிய தகவலை, பலர் ரசிகர்கள் தேடிய நிலையில், இதன் விலையை கேட்டே வாய்ப்பிளந்துள்ளனர்.
படேக் பிலிப் என்கிற பிராண்டட் வாட்சை தான் ஜூனியர் என்டிஆர் அணிந்துள்ளார். இதன் விலை மட்டும் சுமார் 2.5 கோடி என கூறப்படுகிறது. இந்த வாட்ச் நிறுவனம் சுவிட்சர்லாந்தில் அமைந்துள்ளது. 100 வருடம் பழமை வாய்ந்த வாட்ச் கம்பெனிகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தற்போது ஜூனியர் என்டிஆர் ஆஸ்கர் விருது விழாவில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவில் இருக்கிறார். இவர் மட்டும் இன்றி, ராஜமௌலி, ராம் சரண், கீரவாணி ஆகியோரும் ஆஸ்கர் விருது விழாவில் கலந்து கொள்ள உள்ளனர். ராஜமௌலி இயக்கத்தில், ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் நடிப்பில் வெளியான 'ஆர்ஆர்ஆர்' படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கர் ரேஸில் உள்ளது.
பிரமாண்டமாக கொண்டாடப்பட்ட ஆர்யா - சாயிஷாவின் நான்காம் ஆண்டு திருமணநாள்.! வைரலாகும் போட்டோஸ்..!
இந்தப் பாடல் ஆஸ்கார் விருதை வெல்ல வேண்டும் என்பதே அனைவரின் விருப்பப்பாகவும் உள்ளது. ஆஸ்கர் விருது விழா நாளைய தினம் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெறவுள்ளது. இதில் ஹாலிவுட் உட்பட உலகின் பல்வேறு மொழிகளில் உள்ள திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.