கிழித்த மாடர்ன் பேன்டில் அஜித் மகள் அனோஷ்கா! AK62 பட கெட்டப்பில் குடும்பத்துடன் எடுத்த சீக்ரெட் போட்டோஸ்!
அஜித் தன்னுடைய மனைவி மற்றும் மகளுடன்... AK 62 பட கெட்டப்பில் எடுத்து கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக உள்ளவர் அஜித். இவரின் திரைப்படங்கள் மட்டும் இன்றி, குடும்பத்தை பற்றிய எந்த தகவல் வெளியானாலும், அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் படு வைரலாகி விடுகிறது. அந்த வகையில் தற்போது அஜித் அவரின் மகள், மகன், மற்றும் மனைவி ஷாலினியோடு எடுத்து கொண்ட புகைப்படம் படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'துணிவு'. சுமார் 350 கோடி வசூலை வாரிக்குவித்த இந்த படத்தை தொடர்ந்து, விரைவில் அஜித், இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விரைவில் இணைந்து நடிக்க உள்ளார். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் போட்டு முடிக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், விரைவில் இந்த படம் குறித்து லைகா நிறுவனம் அதிகார பூர்வமாக அறிவிக்கும் என கூறப்படுகிறது.
இந்த படத்தில் அனிரூத் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதே போல்... ஹீரோயினாக நடிக்க நடிகை காஜல் அகர்வாலிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும், விரைவில் இப்படத்தின் அதிகார பூர்வ அறிவிப்பு பட தலைப்புடன் வெளியாகும் என தெரிகிறது.
மேலும் அஜித் தற்போது AK 62 பட லுக்கில், தன்னுடைய குடும்பத்தினருடன் எடுத்து கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. குறிப்பாக அஜித்தின் மகள் அனோஷ்கா... படு மாடர்னாக கிழிந்து போன்ற ஜீன்ஸ் மற்றும் டாப் அணிந்துள்ளார். அஜித்தின் மனைவி ஷாலினியும் மாடர்ன் உடை அழகில் ஜொலிக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது, வைரலாகி வருகிறது.