Asianet News TamilAsianet News Tamil

என்னடா ஸ்மோக்கிங் ரூம்ல ஒரே லிப்லாக் சத்தமா கேக்குது... பிக்பாஸ் வீட்ல இந்த கூத்து வேற நடக்குதா? வீடியோ இதோ

பிக்பாஸ் வீட்டில் உள்ள ஸ்மோக்கிங் ரூமில் ஐஷூவும், நிக்சனும் லிப்லாக் கிஸ் அடித்துக் கொண்டதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அதுகுறித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

Is Aishu and Nixen Liplock in Biggboss Smoking room deets inside gan
Author
First Published Nov 3, 2023, 11:35 AM IST | Last Updated Nov 3, 2023, 11:35 AM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் காதல் ஜோடிகள் நிரம்பி வழிகின்றன. ஆரம்பத்தில் மணி - ரவீனா ஜோடி ஒன்றாக ரொமான்ஸ் செய்து சுற்றி வந்த நிலையில், போகப்போக அது இருவரின் கேமையும் பாதிப்பதை உணர்ந்து ரொமான்ஸை குறைத்துக் கொண்டனர். அவர்களின் ரொமாண்டிக் டிராக் முடிந்ததும், நிக்சனும் ஐஷூவும் தங்களது ரொமாண்டிக் டிராக்கை தொடங்கினர். இவர்கள் தான் தற்போது காதல் புறாக்களாக பிக்பாஸ் வீட்டுக்குள் வலம் வருகின்றனர்.

ஐஷூ தனக்கு ஏற்கனவே வெளியே ஆள் இருப்பதாக கூறிவிட்டு இப்படி நிக்சனை காதலித்து வருவதை அறிந்த ரசிகர்கள் அவரை திட்டித்தீர்த்து வருகின்றனர். அதுமட்டுமின்றி இந்த வார நாமினேஷனிலும் ஐஷூ சிக்கி உள்ளதால் அவரை எலிமினேட் செய்யும் முனைப்பில் ரசிகர்கள் உள்ளனர். ஆனால் இதைப்பற்றி கவலைப்படாத நிக்சனும் ஐஷூவும் ரொமான்ஸில் அடுத்தகட்டத்துக்கே சென்றுவிட்டனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Is Aishu and Nixen Liplock in Biggboss Smoking room deets inside gan

இவர்கள் இருவரும் ஒன்றாக ஸ்மோக்கிங் ரூமுக்குள் சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோ தான் தற்போது சர்ச்சையில் சிக்கி இருக்கிறது. ஸ்மோக்கிங் ரூமில் கேமரா கிடையாது என்பதால் அவர்கள் பேசுவது மட்டுமே அந்த வீடியோவில் காட்டப்பட்டு உள்ளது. அவர்கள் இருவரும் பேசும்போது இடையே சில சத்தங்களும் கேட்கிறது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் நிக்சனும், ஐஷூவும் முத்தம் கொடுத்துக் கொண்டதாக கூறி அந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.

ஆனால் அது சிகரெட்டை பற்ற வைக்கும் லைட்டரின் சத்தம் என ஒருதரப்பினர் கூறுகின்றனர். நிக்சனிடம் காதல் ஆசையை தூண்டிவிட்டு அவரை ஐஷூ தம்பி என அந்த ஸ்மோக்கிங் ரூமில் அழைத்ததை பார்த்து கடுப்பான ரசிகர்கள், அவர் டபுள் கேம் ஆடி வருவதாகவும், இந்த விவகாரத்தை கமல்ஹாசன் தட்டிக் கேட்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். ஐஷூ, நிக்சனின் இந்த ஸ்மோக்கிங் ரூம் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... ஓவர் ரொமான்ஸ் உடம்புக்கு ஆகாது... காதல் ஜோடியை பிரிக்க முடிவெடுத்த ரசிகர்கள் - இந்த வார எலிமினேஷன் இவர்தானா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios