Asianet News TamilAsianet News Tamil

பிக்பாஸ் மீது அவ்ளோ காதலா... எலிமினேஷனுக்கு பின் தனலட்சுமி செய்த வேலையை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆன பின்னர் தனலட்சுமி சமூக வலைதளங்களில் எந்தவித பதிவுகளும் போடாமல் இருந்து வந்ததால், அவர் பிக்பாஸ் மீது கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல் பரவி வந்தது.

Dhanalakshmi shows her love towards biggboss reels video viral
Author
First Published Jan 8, 2023, 1:19 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி தற்போது 90 நாட்களைக் கடந்து இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்த சீசனில் பொதுமக்கள் என்கிற அடையாளத்தோடு இரண்டு போட்டியாளர்கள் களமிறக்கப்பட்டனர். அவர்கள் ஷிவின் மற்றும் தனலட்சுமி. இருவருமே பைனல் வரை முன்னேற தகுதி உள்ளவர்கள் என என்னப்பட்ட நிலையில், கடந்த 2 வாரத்துக்கு முன் தனலட்சுமி வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்து பல இடங்களில் டி.ஆர்.பி.யை எகிற வைத்தது தனலட்சுமி தான். குறிப்பாக அசீமுக்கு எதிராக இவர் போட்ட சண்டைகள் எல்லாம் இந்த சீசனில் மிகவும் பேசுபொருளாக மாறின. ஒரு எபிசோடில் கமல்ஹாசனே தனலட்சுமியின் துணிச்சலை பாராட்டி இருந்தார். அந்த அளவுக்கு பலமான போட்டியாளராக தனலட்சுமி இருந்து வந்தார்.

இதையும் படியுங்கள்... லண்டனில் தொடங்கப்பட்ட துணிவு புரோமோஷன்: வைரலாகும் வீடியோ!

Dhanalakshmi shows her love towards biggboss reels video viral

அவர் எலிமினேஷன் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக தான் இருந்தது என ரசிகர்களும் தங்களது அதிருப்தியை சமூக வலைதளங்கள் வாயிலாக தெரிவித்திருந்தனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆன பின் தனலட்சுமி எந்தவித பதிவும் போடாமல், பேட்டிகள் எதுவும் கொடுக்காமல் இருந்து வந்ததால், அவர் பிக்பாஸ் மீது கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல் பரவி வந்தது.

இதெல்லாம் வதந்தி என்பதை நிரூபிக்கும் விதமாக அவர் ஒரு ரீல்ஸ் வீடியோ ஒன்றை போட்டுள்ளார். அதன்படி பச்சைக் குத்தும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் தனலட்சுமி. அதில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் லோகோவை தன் கையில் டாட்டுவாக குத்திக் கொண்டுள்ளார் தனா. இதைப்பார்த்த ரசிகர்கள் பிக்பாஸ் மீது அம்புட்டு காதலா உனக்கு என கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... இதென்னப்பா பகல் கொள்ளையா இருக்கு... துணிவு, வாரிசு படத்தின் FDFS டிக்கெட் விலை இத்தனை ஆயிரமா?

Follow Us:
Download App:
  • android
  • ios