Asianet News TamilAsianet News Tamil

Vichitra: நைட்டு ரூமுக்கு அழைத்த ஹீரோ; விசித்ரா சொன்ன அந்த டாப் ஹீரோ இவரா?

பிக்பாஸ் வீட்டில் நடைபெற்ற டாஸ்க்கில் தான் சினிமாவை விட்டு விலகியதற்கான ஷாக்கிங் சம்ப்வத்தை முதன்முறையாக கூறி இருக்கிறார் நடிகை விசித்ரா.

BiggBoss vichithra says she face MeToo allegation and casting couch gan
Author
First Published Nov 21, 2023, 10:18 PM IST | Last Updated Nov 22, 2023, 2:02 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் பூகம்பம் டாஸ்க் நடத்தப்பட்டு வருகிறது. இதில் போட்டியாளர்கள் தங்கள் வாழ்க்கையில் பூகம்பத்தை ஏற்படுத்திய சம்பவம் குறித்து பேசுமாறு கூறி இருந்தார். அந்த டாஸ்க்கில் நடிகை விசித்ரா பேசுகையில், தான் சினிமாவில் நடித்தபோது எதிர்கொண்ட கசப்பான சம்பவம் குறித்தும், அது தனது சினிமா கெரியருக்கே முற்றுப்புள்ளி வைத்தது பற்றிய கண்ணீர் கதையை சொல்லி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

அதன்படி அவர் கூறுகையில், நடிகை விசித்ராவுக்கு தெலுங்கு முன்னணி நடிகர் ஒருவரின் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம். அப்போது அப்படத்துக்கான ஷூட்டிங் கேரளாவில் நடைபெற்று இருக்கிறது. இதற்காக அங்குள்ள ஓட்டல் அறையில் தங்கி ஷூட்டிங்கில் பங்கேற்று வந்துள்ளார் விசித்ரா. முதல்முறையாக அந்த ஹீரோவிடம் தன்னை அறிமுகம் செய்ய சென்றபோது, அவர் பெயரை கூட கேட்காமல், நைட்டு ரூமுக்கு வந்திரு என சொன்னாராம்.

ஆனால் அந்த ஹீரோ அழைத்தும் ரூமுக்கு செல்லாததால், இரவில் ஆட்களை விட்டு விசித்ராவின் ஓட்டல் அறையை தட்டி சிலர் ரகளை செய்துள்ளனர். இதையடுத்து அந்த ஓட்டலில் ஊழியராக பணியாற்றி வந்தவரிடம் இதுபற்றி விசித்ரா சொன்னதும். அவர் விசித்ராவை ஒரு நாளைக்கு ஒரு அறையில் தங்க வைத்து, அந்த ஹீரோவின் டார்ச்சரில் இருந்து தப்பிக்க வைத்தாராம். பின் நாளில் அந்த ஓட்டல் ஊழியரை தான் விசித்ரா திருமணம் செய்துகொண்டிருக்கிறார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

ஒருநாள் காட்டுப்பகுதியில் ஷூட்டிங் நடைபெற்றபோது, பைட்டர்கள் மற்றும் ஜுனியர் ஆர்டிஸ்டுகளுடன் ஒரு கலவர காட்சி படமாக்கப்பட்டுள்ளது. அப்போது ஆக்‌ஷன் சொன்னதும் என்னை ஒருவர் தவறாக தொட்டதை உணர்ந்தேன். இதையடுத்து அந்த ஷாட் ரீ-டேக் எடுத்தனர். அப்போது மீண்டும் அதேபோல தடவினார். பின்னர் மூன்றாவது டேக் எடுத்தபோது அந்த நபரை கையும் களவுமாக பிடித்துவிட்டேன்.

உடனே அவனது கையை பிடித்து இழுத்து சென்று ஸ்டண்ட் மாஸ்டரிடம் கொண்டு வந்து நிறுத்தினேன். அவர் அந்த நபரை தட்டிக் கேட்காமல் எனது கன்னத்தில் ஓங்கி அரைவிட்டார். நான் அப்படியே ஷாக் ஆகிப்போய் நின்றேன். அவர் அடித்ததை அங்கிருந்த யாரும் தட்டிக்கேட்கவில்லை. அந்த சம்பவம் என் மனதை உறுத்திக் கொண்டே இருந்தது. பின்னர் நடிகர் சங்கத்திடம் இதுகுறித்து புகார் அளித்தேன். அப்போது அந்த நடிகர் சங்க தலைவர் இதையெல்லாம் மறந்துவிட்டு நடிக்க சொன்னார்.

பின்னர் போலீசிடம் சென்றேன். இந்த சம்பவத்தில் எனக்கு யாருமே ஆதரவு அளிக்காததால் தான் நான் சினிமாவை விட்டே விலக முடிவு செய்தேன். அந்த ரணத்தில் இருந்து தன்னால் மீள முடியாததால் தான் 20 ஆண்டுகளாக சினிமாவில் கம்பேக் கொடுக்கவில்லை என்றும் கண்ணீர் மல்க கூறினார் விசித்ரா. அவர் சொன்ன இந்த சம்பவம் பலேவடிவி பாசு என்கிற தெலுங்கு படத்தில் நடித்தபோது நடந்ததாகவும், அப்படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் ஏ.விஜய் என்பவர் தான் விசித்ராவை கன்னத்தில் அறைந்ததாகவும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். அப்படத்தில் பாலகிருஷ்ணா ஹீரோவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... கவர்ச்சிக்கு லீவு விட்ட மாளவிகா மோகனன்... செம்பொன் சிலை போல் பட்டுச்சேலையில் மனதை கொள்ளைகொள்ளும் மாஸ்டர் நாயகி

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios