Asianet News TamilAsianet News Tamil

லெஸ்பியன் சர்ச்சைக்கு மத்தியில்... ஒரே பாத்ரூமில் பெண் போட்டியாளருடன் மாயா செய்த தில்லுமுல்லு வேலை- வீடியோ இதோ

மாயா ஒரு லெஸ்பியன் என பாடகி சுசித்ரா கூறிய நிலையில், பிக்பாஸ் வீட்டில் அவர் பெண் போட்டியாளருடன் ஒரே பாத்ரூமுக்குள் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.

After Lesbian controversy Maya and Aishu went same bathroom in BiggBoss house viral video gan
Author
First Published Nov 10, 2023, 9:24 PM IST | Last Updated Nov 10, 2023, 9:24 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுக்க சண்டைகளுக்கு பஞ்சமில்லை என்று தான் சொல்ல வேண்டும். கடந்த வாரம் பிரதீப்பை ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றிய விவகாரம் தான் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு இடையேயான இந்த சண்டைக்கு முக்கிய காரணம். இதில் மாயா, பூர்ணிமா, ஐஷூ, ஜோவிகா ஆகியோர் ஓர் அணியாக சேர்ந்துகொண்டு பிரதீப்புக்கு ஆதரவு தெரிவித்த விசித்ரா மற்றும் அர்ச்சனாவை திட்டித்தீர்த்தனர்.

ஆனால் பிக்பாஸ் கொடுத்த டாஸ்க்குகளை வைத்து உஷாரான மாயாவின் புல்லி கேங், தற்போதே கமலிடம் என்ன கதை சொல்லலாம் என்று விவாதிக்க தொடங்கி உள்ளது. நாளை மாயாவின் புல்லி கேங்கிற்கு கமல் செம்ம டோஸ் கொடுப்பார் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். அதுமட்டுமின்றி பிரதீப் ஆண்டனியும் இந்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டுக்குள் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

After Lesbian controversy Maya and Aishu went same bathroom in BiggBoss house viral video gan

இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டின் இந்த வார தலைவரான மாயா, அந்த வீட்டில் விதிமீறலில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. அதன்படி மாயாவும், ஐஷூவும் பிக்பாஸ் வீட்டில் உள்ள பாத்ரூமில் ஒன்றாக உள்ளே சென்ற காட்சிகள் வெளியாகி உள்ளன. பிக்பாஸ் விதிப்படி போட்டியாளர்கள் கலந்துரையாடும்போது மைக்கை கட்டாயம் மாட்டி இருக்க வேண்டும். பாத்ரூமுக்கு செல்லும் போது மட்டும் மைக்கை கழட்டிவைத்துக் கொள்ளலாம். இதைப் பயன்படுத்தி இருவரும் மைக்கை கழட்டிவைத்துவிட்டு ஒன்றாக ஒரே பாத்ரூமுக்குள் சென்று சிலவற்றை பேசி இருப்பார்கள் போல தெரிகிறது.

அண்மையில் தான் பாடகி சுசித்ரா அளித்த பேட்டி ஒன்றில் மாயா லெஸ்பியன் என்கிற தகவலை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். மேலும் கவுதம் மேனனிடம் உதவியாளராக பணியாற்றிய பெண் ஒருவருடன் மாயா உறவில் இருந்ததாக சுசித்ரா கூறி இருந்தார். மாயா ஒரு லெஸ்லியன் என சுசித்ரா சொன்ன மறுதினமே மாயா, ஐஷூவுடன் ஒரே பாத்ரூமுக்குள் சென்ற வீடியோ வெளியாகி சர்ச்சையில் சிக்கி உள்ளது. இதை கமல் தட்டி கேட்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்... Dhanush Vs Aishwarya: மோதி பார்க்க தயாரான தனுஷ்! இப்போதே ஆட்டத்தை ஆரம்பித்த ஐஸ்வர்யா.. தாறுமாறு அப்டேட்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios