ஆண்மை குறைவு; மலட்டுத்தன்மை நீங்கி குவா குவா சத்தம் கேட்கணுமா? மருத்துவ ஜோதிடம் சொல்லும் டிப்ஸ்

இன்றைக்கு மருத்துவமனைகள் ஒருபக்கம் பெருகி வரும் அதே நேரத்தில் செயற்கை கருத்தரிப்பு மையங்களும் அதிகரித்து வருகின்றன. ஆண்மை குறைவு உள்ளவர்கள் மன ரீதியாக பாதிக்கப்படுகின்றனர். நமக்கு வாரிசே இல்லாமல் போய்விடுமோ என்ற பயம்தான் காரணம். கிரக கோளாறுகளினால் சிலருக்கு ஆண்மை குறைவு ஏற்படுகிறது. சத்தான உணவுகளை சாப்பிட்டும் மனம் தளராமல் வாழ்ந்தால் போதும் அந்த ஆரோக்கியமான நினைவுகளும் பாசிட்டிவ் ஆன எண்ணங்களுமே ஆண்மை குறைவை நீக்கிவிடும் என மருத்துவ ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.

Medical astrology Infertility and the role of planets Astrology Secrets remedies

ஆண்மை குறைபாடு:
எண்ணம் போல வாழ்க்கை என்று முன்னோர்கள் கூறுவார்கள். நல்ல எண்ணங்கள், நேர்மறையான எண்ணங்கள் நமக்கு நன்மையை செய்யும். மனோகாரகன் சந்திரனை மனதை திட படுத்தினால் போதும் செவ்வாயும் சுக்ரனும் 100 சதவிகிதம் நன்மை செய்யும். சனி என்பவர் அலி இவர் நீச சுக்கிரனுடன் தொடர்ப்பு பெறும்போது ஆண்மை  குறைவு ஏற்படும். ஜென்ம ராசி என வர்ணிக்கப்படக்கூடிய சந்திரன் சனி, செவ்வாய், ராகு, கேது ஆகிய  பாவகிரகங்களில் ஏதாவது இரு கிரகங்களின் சேர்க்கைப் பெற்றிருந்தாலும் ஜாதகருக்கு ஆண்மை குறைவு ஏற்பட்டு இல்வாழ்வில் மகிழ்ச்சியற்ற நிலை உண்டாகும். மேற்கூறிய கிரக அமைப்புகள் பெண்கள் ஜாதகத்தில் இருந்தால் திருமணத்தில் பிரச்சினை ஏற்படும்.

ஜாதகத்தில் கிரகங்களின் நிலை:
ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் பலம் குறைந்து கேதுவுடன் தொடர்பு பெறும் போது ரத்த ஓட்டம் குறைவாக செலுத்தி விரைப்பு சுருக்கி விடுதல்  இது போன்று நிகழும் இதில் வீரிய ஸ்தானம் அதிபர் பலம் இருந்தால் எதுவும் நடக்காது. 12ஆம் இடம் பாதிப்பு இல்லாமல் இருந்தால் எதுவும் நடக்காது 7ஆம் அதிபர் பலமாக இருந்தால் எதுவும் இல்லை. நீங்கள் உண்ணும் உணவை வைத்தே உங்கள் கிரக பலத்தை கூட்ட முடியும்.  நவகிரகங்களில் அலிகிரகம் என வர்ணிக்கப்படுவது சனி,புதன் ஆகும். ஒருவர் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் சனி, செவ்வாய், ராகு போன்ற பாவிகள் சேர்க்கை பெற்று சுபர் பார்வையின்றி இருந்தாலும் 8ம் வீடு புதன் வீடாக இருந்து சனி, ராகு 8ம் வீட்டைப் பார்த்தாலும், புதன், சனி, ராகு அல்லது கேது சேர்க்கை பெற்றிருந்தாலும் மலட்டுத்தன்மைதான்.

Personality by birth: குருவாரத்தில் பிறந்தவர்கள் குணமானவர்களாம்; வியாழக்கிழமை பிறந்த நீங்க இப்படிப்பட்டவர்களா?

பாரம்பரிய உணவுகள்:
உணவின் மூலம்,கிரகங்களை வென்றவர்கள் நம் முன்னோர்கள் எனவே சத்தான உணவுகளை சாப்பிட்டால் போதும் எந்த கிரக பாதிப்பும் எதுவும் செய்யாது.  கம்பு, கேழ்வரகு களி வகைகள்,பழையசோறு,இது எல்லாம் பாரம்பரிய உணவு இவை எல்லாம் சனியின் உணவுகள், சனிக்கு எளிமை தான் பிடிக்கும், இதை அறிந்து முன்னோர்கள் சத்தாக உண்டு சனியை அடக்கினார்கள், ஆண்மை குறைவு என்ற வியாதியை இல்லாமல் வாழ்ந்து சென்றார்கள்.

உணவே மருந்தாகும்:
சோளம், சிவப்பு அரிசி, கோதுமை, சாப்பிடலாம். யோக ஆசனம் செய்வது சூர்ய நமஸ்காரம் செய்வதும் சூரியனின் உணவுகள் என்று மருத்துவ ஜோதிடத்தில் அழுத்தம் திருத்தமாக கூறப்பட்டுள்ளது. நீர் அதிகம் குடிக்கலாம். இது சந்திரனுக்கு ஏற்றது. எல்லா உணவுகளையும் மருந்தாக மாற்றி நலம்பெற செய்பவர் கேது பகவானே.  

மட்டன் ஈரல்:
ஆட்டு கறி, ஈரல், பீட்ருட், கேரட், மல்லிச்செடி, புதினா செடி, துளசி, அனைத்து கீரை வகைகள், முக்கியமாக அகத்தி கீரை, குதிரை வாலி தானியம் மற்றும் விளையாடுதல் வேகமாக ஓடுதல் இது போன்ற செயல்கள் செய்ய செய்ய இந்த உணவுகளை உண்ண உண்ண செவ்வாய் என்னும் கிரகம் பலம் குறைவாக இருந்தலும் பலம் கூடிவிடும். மாதுளை,பேரீச்சை, செவ்வாழை,பழங்களும் செவ்வாய் பலத்தை கூட்டி விடும்

பச்சை பயறு:
பச்சை நிற காய்கறிகள், பச்சை பயறு, சுண்டல் வகைகள்,கற்றாழை,, வெங்காயம் சாப்பிடலாம். புத்திரகாரகன் குரு ஆணுக்கும் பெண்ணுக்கும் தொப்பை உருவாக்கி தருபவர் ஆண்மைக்குறைவுக்கு தொப்பையும் ஒரு காரணி அப்போ அவரை கவனிக்க மஞ்சள் நிற வாழைப்பழம், பப்பாளி, அன்னாசி பழம், உலர்ந்த திராட்சை, கொண்டை கடலை சாப்பிடலாம்.

சுக்ரன் உணவுகள்:
சூரிய காந்தி விதைகள் பாதம் பருப்பு,சிவப்பு பூசணி விதைகள் சுரைக்காய் விதைகள் நிலக்கடலை இவை எல்லாம் சுக்ர சுக்கிலத்தின் தரத்தை உயர்த்தும் சுக்ர பலம் இல்லாத ஜாதகர்கள் உண்டு வர சுக்ரன் பலம் கூடி விடும் பசும்பால்,தேங்காய் பால் போன்றவை சுக்கிரன் பலத்தை கூட்டும். மது, சிகரெட் புகை, ப்ரைடு ரைஸ், சிப்ஸ் போன்றவையும் குளிர்பானங்களும் ராகுவிற்கு காரகம் இவற்றை தவிர்த்தாலே போதும் ஆண்மை குறைவு நீங்கும்.

Sani Vakra Peyarchi: சனி வக்ர பெயர்ச்சி; 5 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் சனியால் வரப்போகும் அதிரடி மாற்றம்!

நல்லெண்ணெய் குளியல்:
எள்ளு, எள்ளுருண்டை, கருப்பட்டி, பனைமர பதநீர் நொங்கு சாப்பிடலாம். வாரம் இருமுறை நல்லெண்ணெய் குளியல் நன்மை தரும். சனி மற்ற கிராகத்திடம் இருந்து எதையும் பறிக்காது. இது  மற்ற கிரகங்களை தொந்தரவு செய்வது இல்லை உடல் உறுப்புகளை சேத படுத்தாமல் இருப்பார்.  நாம் உணவுகள்தான் இன்றைக்கு பல பிரச்சினைகளுக்குக் காரணம். சத்தான உணவுகளை உண்டு நவகிரகங்களை சாந்தப்படுத்தினாலே போது நோய்களை வெல்ல முடியும். கிரகங்களை வலுவாக்க முடியும். மது, சிகரெட் புகை, ப்ரைடு ரைஸ், சிப்ஸ் போன்றவையும் குளிர்பானங்களும் ராகுவிற்கு காரகம் இவற்றை தவிர்த்தாலே போதும் ஆண்மை குறைவு நீங்கும்.  ஜாதகத்தில் பாதிப்பு உள்ள ஆண்கள் மகாலட்சுமியை வணங்கலாம். பெண்கள் பெருமாளை வணங்கலாம். ராகு கேது நீர் ராசியில் நின்றால் சிவனை வழிபட ஆண்மை குறைபாடு மலட்டுத்தன்மை நீங்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios