MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தளபதி 69; விஜயுடன் மீண்டும் இணையும் வாரிசு நடிகை? வினோத் போடும் மாஸ் பிளான்!

தளபதி 69; விஜயுடன் மீண்டும் இணையும் வாரிசு நடிகை? வினோத் போடும் மாஸ் பிளான்!

Thalapathy 69 : பிரபல இயக்குனர் வினோத் இயக்கத்தில் தன்னுடைய 69வது மற்றும் இறுதி திரைப்படத்தில் தற்பொழுது நடித்து வருகிறார் நடிகர் விஜய்.

2 Min read
Author : Ansgar R
Published : Nov 21 2024, 09:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Thalapahy 69

Thalapahy 69

இந்த ஆண்டு தொடக்கத்தில் பலரும் எதிர்பார்த்த வகையில், தன்னுடைய தமிழக வெற்றிகழக கட்சியின் அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார் தளபதி விஜய். ஆனால் யாருமே கொஞ்சம் கூட எதிர்பார்க்காத அதிரடியான ஒரு விஷயத்தை அவர் அறிவித்தார். அது தான் ஏற்கனவே அவர் ஒப்புக்கொண்டுள்ள இரு திரைப்படப் பணிகளை முடித்த பிறகு, தன்னுடைய கலை பயணத்திற்கு முழுமையாக ஓய்வு கொடுத்து விட்டு முழு நேர அரசியல் தலைவராக தான் பயணிக்க உள்ளதாக அறிவித்தார். 

பிரபலத்தின் கல்யாணம்; அருகருகே இருந்தும் பேசாமல் கடந்து சென்ற நயன்தாரா & தனுஷ்!

24
Vijay

Vijay

இந்த அறிவிப்பு அவருடைய ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்திருந்தாலும், நம்முடைய அபிமான நட்சத்திரம் விரைவில் அரசியலில் களமிறங்க போகிறார் என்கின்ற ஆனந்தம் அவர்களுக்குள்ளே எழுந்தது. இந்த சூழலில் தன்னுடைய தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் மாநில மாநாட்டை வெகு சிறப்பாக விக்கிரவாண்டியில் நடத்தி முடித்தார். இன்று வரை அந்த மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் வைரலாகி வருகிறது என்றால் அது சற்றும் மிகையல்ல. குறிப்பாக ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்தை அவர் நேரடியாக தாக்கிப் பேசியது பெரும் பரபரப்புகளை ஏற்படுத்தியது. 

அதே நேரம் அவருடைய அந்த பேச்சுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையான கண்டனங்களை முன்வைத்தார். அதே போல விடுதலை சிறுத்தைகள் கட்சி தொல் திருமாவளவனும் கடுமையாக விஜயை சாடி பேசினார். ஆனால் இவர்கள் இருவருமே, இதற்கு முன்பு தளபதி விஜயை பெரிய அளவில் அரசியலில் வரவேற்றதும் குறிப்பிடத்தக்கது.

34
Pooja Hegde

Pooja Hegde

இப்படி அரசியல் தலைவராக தொடக்கத்தில் இருந்தே மிகப்பெரிய வரவேற்பு பெற்று வரும் தளபதி விஜய், தன்னுடைய 69 ஆவது மற்றும் இறுதி திரைப்படத்தில் இப்போது நடித்து வருகிறார். எச் வினோத் தான் இந்த திரைப்படத்தை இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல நடிகை பூஜா ஹெக்டே இந்த திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு நாயகியாக நடித்து வருகிறார். மேலும் பல முக்கிய நட்சத்திரங்கள் இந்த திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் ஏற்கனவே தளபதி விஜய் உடன் நடித்த ஒரு நடிகை இப்படத்தில் இணையுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

44
Varalaxmi Sarathkumar

Varalaxmi Sarathkumar

தளபதி விஜய்க்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்த சர்க்கார் திரைப்படத்தில் அவருக்கு சரியான எதிரியாக நின்று நடித்து அசத்தியவர் தான் பிரபல நடிகை வரலட்சுமி சரத்குமார். அவரும் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. நெகட்டிவ் கதாபாத்திரங்களில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்துபவர் வரலட்சுமி சரத்குமார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆகவே அவரை மிக நேர்த்தியாக இந்த திரைப்படத்தில் பயன்படுத்துவார் வினோத் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினியின் ஹிட் படம்; "அந்த" ஒரு காட்சியில் மட்டும் நடிக்கவே மாட்டேன்னு சொன்ன "லேடி சூப்பர் ஸ்டார்"!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AR
Ansgar R
பூஜா ஹெக்டே
வரலட்சுமி சரத்குமார்
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
வீட்டுக்குள் நுழைய தடை! ஆனந்தியை விரட்டியடிக்கும் லலிதா - அதிர்ச்சியில் அன்பு! Singapenne Serial Promo Today
Recommended image2
ஒரே ஒரு சிரிப்பு.. ஓராயிரம் ஹார்ட்டின்ஸ்!" - இன்டர்நெட் குயீன் மமிதா பைஜுவின் ரகசியம் என்ன?
Recommended image3
TRP ரேஸில் டாப் 10 இடங்களை தட்டிதூக்கிய தமிழ் சீரியல்கள் என்னென்ன? முழு லிஸ்ட் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved