MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ரஜினியின் ஹிட் படம்; "அந்த" ஒரு காட்சியில் மட்டும் நடிக்கவே மாட்டேன்னு சொன்ன "லேடி சூப்பர் ஸ்டார்"!

ரஜினியின் ஹிட் படம்; "அந்த" ஒரு காட்சியில் மட்டும் நடிக்கவே மாட்டேன்னு சொன்ன "லேடி சூப்பர் ஸ்டார்"!

Rajinikanth : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியில் நடிக்க இறுதிவரை மறுத்து அதன் பிறகு கட்டாயத்தின் பேரில் நடித்து கொடுத்திருக்கிறார் பிரபல நடிகை ஒருவர்.c

2 Min read
Author : Ansgar R
| Updated : Nov 21 2024, 07:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Rajinikanth

Rajinikanth

லேடி சூப்பர் ஸ்டார் என்று சொன்னதுமே அனைவருக்கும் மனதில் தோன்றும் நபர் தான் நயன்தாரா. ஆனால் 90களில் பிறந்தவர்களுக்கு, தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்றால் சட்டென்று நினைவில் வரும் ஒரு நடிகை தான் விஜயசாந்தி. கோலிவுட் திரையுலக வரலாற்றைத் தாண்டி, இந்திய சினிமா வரலாற்றிலேயே ஆக்சன் நாயகியாக பல திரைப்படங்களில் வலம் வந்த ஒரே நடிகை விஜயசாந்தி என்றால் அது மிகையல்ல. அந்த அளவிற்கு ஹீரோக்களுக்கு இணையாக ஆக்ஷன் காட்சிகளில் நடித்து புகழ்பெற்ற நடிகை அவர். ராம்கி போன்ற பல ஆக்சன் ஹீரோக்களே விஜயசாந்தியின் திரைப்படத்தில் கௌரவ வேதத்தில் நடித்து அசத்திய காலங்களும் உண்டு.

ஒரு வருஷமா வீட்டுக்கே வரல; இதெல்லாம் சுத்த பொய்.. ஏ ஆர் ரகுமான் விவாகரத்து காரணத்தை உடைத்த பயில்வான்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Vijayashanthi

Vijayashanthi

அதே போல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்படங்களை பொறுத்தவரை பொதுவாகவே நாயகிகளுக்கு சற்று குறைவாகவே கதாபாத்திரங்கள் கொடுக்கப்படும். ஆனால் அந்த ஒரு டெம்ப்ளேட்டில் இருந்து மாறுபட்ட படமாக வெளியானது தான் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான படையப்பா என்கின்ற திரைப்படம். "நீலாம்பரி" என்கின்ற கதாபாத்திரத்தில் மிக நேர்த்தியாக ரஜினிகாந்துக்கு சவால் விடும் வகையில் நடித்திருப்பார் ரம்யா கிருஷ்ணன். ஆனால் அதற்கு முன்னதாகவே பி. வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட் ஆன மன்னன் திரைப்படத்தில் நீலாம்பரியை விட 10 மடங்கு அதிக வேகத்துடன் நடித்து அசத்தியிருப்பார் விஜய் சாந்தி. சாந்திதேவி என்கின்ற கதாபாத்திரத்தில் ஒரு நிறுவனத்தின் தலைவராக மிக சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கும் அந்த கதாபாத்திரம்.

34
Mannan

Mannan

பெண்கள், ஆண்களை விட அனைத்து வகையிலும் பெரியவர்கள், அவர்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதை நிரூபிக்கும் ஒரு கதாபாத்திரத்தில் மன்னன் படத்தில் நடித்திருப்பார் விஜயசாந்தி. இந்நிலையில் இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் மற்றும் விஜயசாந்தி இடையே நடக்கும் ஒரு வாக்குவாதத்தின் இறுதியில், ரஜினிகாந்தை அவரது கன்னத்தில் அறைவது போன்ற ஒரு காட்சி இந்த திரைப்படத்தில் அமைக்கப்பட்டு இருக்கும். பி. வாசு இந்த காட்சியை விஜயசாந்தியிடம் கூறிய போது, ரஜினியை நான் அடிப்பது என்பது ரசிகர்களால் கொஞ்சம் கூட ஏற்றுக் கொள்ளப்படாத விஷயமாகும். நீங்கள் எவ்வளவு என்னை வற்புறுத்தினாலும் இந்த ஒரு காட்சியில் மட்டும் நான் நடிக்கவே மாட்டேன் என்று கூறியிருக்கிறார் விஜயசாந்தி.

44
Mannan movie

Mannan movie

பி வாசு தொடர்ந்து அவரிடம் எவ்வளவோ சொல்லியும் இந்த ஒரு காட்சியில் மட்டும் நான் நடிக்க முடியாது என்று அவர் கூறியிருக்கிறார். இந்த காட்சி முடிந்த பிறகு ரஜினிகாந்த் மீண்டும் உங்களை இரண்டு முறை அறைவது போன்ற காட்சிகள் உள்ளது என்று கூறியும் விஜயசாந்தி ஒத்துக் கொள்ளவில்லையாம். இறுதியில் ரஜினிகாந்த் அவரிடம் பேசிய பிறகு அந்த காட்சியை படமாக்கப்பட்டிருக்கிறது. சிவாஜி புரொடக்ஷன்ஸ் சார்பில் 1992 ஆம் ஆண்டு இளையராஜாவின் இசையில் வெளியான மன்னன் படம் இன்றளவும் பலருக்கு பேவரட்டான திரைப்படம். அதுமட்டுமல்ல இந்த திரைப்படத்தின் மூலம் தான் பாடகராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதன்முதலில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பிச்சு ஒரு மாசம் கூட ஆகல; அதற்குள் 'கார்த்திகை தீபம்' சீரியலை விட்டு வெளியேறிய முக்கிய நடிகர்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AR
Ansgar R
ரஜினிகாந்த்
தமிழ் சினிமா
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved