MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஒரு வருஷமா வீட்டுக்கே வரல; இதெல்லாம் சுத்த பொய்; ஏ ஆர் ரகுமான் விவாகரத்து காரணத்தை உடைத்த பயில்வான்!

ஒரு வருஷமா வீட்டுக்கே வரல; இதெல்லாம் சுத்த பொய்; ஏ ஆர் ரகுமான் விவாகரத்து காரணத்தை உடைத்த பயில்வான்!

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் விவாகரத்து செய்தி தான், தற்போது உலக அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் தன்னுடைய கருத்துகளையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.  

3 Min read
Author : manimegalai a
| Updated : Nov 23 2024, 06:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
AR Rahman

AR Rahman

மிஸ்டர் பர்ஃபெக்ட் என பெயரெடுத்த ஏ.ஆர்.ரகுமானையே தற்போது சத்திய சோதனைக்கு ஆளாக்கி உள்ளது இவருடைய விவாகரத்து விவகாரம். இந்நிலையில் ஏ ஆர் ரகுமான் குறித்து, சர்ச்சை பிரபலமான பயில்வான் ரங்கநாதன் பிரபல தனியார் youtube சேனலுக்கு கொடுத்த பேட்டியில் கூறியுள்ள தகவல்கள், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அப்படி அவர் என்னதான் கூறி உள்ளார்? என்பது பற்றி பார்க்கலாம்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
AR Rahman Divorce Issue

AR Rahman Divorce Issue

மணிரத்னம் இயக்கிய 'ரோஜா' திரைப்படத்தின் மூலம், வெள்ளி திரையில் தன்னுடைய இசை பணியை துவங்கிய ஏ.ஆர்.ரகுமான் முதல் படத்திலேயே தேசிய விருது நாயகனாக மாறினார். இப்படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடலும், இன்றளவும் ரசிகர்கள் மனதை குளிர்வித்து வருகிறது. அந்த அளவுக்கு தன்னுடைய இசையை மனதார உணர வைத்திருப்பார் ஏ.ஆர்.ரகுமான். இந்த படத்தை தொடர்ந்து இவர் இசையமைத்த, அடுத்தடுத்த படங்களும், பாடல்களும், தனித்துவமான இசையோடு வெளியாகி முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பலம் சேர்த்தது.

ஆரம்பிச்சு ஒரு மாசம் கூட ஆகல; அதற்குள் 'கார்த்திகை தீபம்' சீரியலை விட்டு வெளியேறிய முக்கிய நடிகர்!
 

37
AR Rahman Music

AR Rahman Music

காதல், எமோஷன், த்ரில்லர், ஆக்சன், வரலாற்று கதை, என எந்த மாதிரியான கதைகளம் என்றாலும் தன்னுடைய முழு திறனை வெளிப்படுத்துபவர் ஏ ஆர் ரகுமான். தன்னுடைய பணியில் எந்த அளவுக்கு பிஸியாக இருந்தாலும், குடும்பத்தையும் கண்ணும் கருத்துமாக கவனிக்க தவறியது இல்லை.

ஏ ஆர் ரகுமானின் வெற்றிக்கு, அவருடைய மனைவியின் சாய்ராவின் பங்கு மிகவும் முக்கியமானது எனலாம். திரையுலகில் வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ஏ ஆர் ரகுமான், முழுமையாக அவருடைய பணியில் கவனம் செலுத்தும் சுதந்திரத்தை அவருக்கு கொடுத்து விட்டு, தன்னுடைய குடும்பத்தை கட்டி அணைத்து வெற்றிகரமாக நடத்தி வந்தார் சாய்ரா. தன்னுடைய 3 பிள்ளைகளையும் பொறுப்பாக வளத்துள்ள இவர், ஏ ஆர் ரகுமானை திருமணம் செய்து கொண்டு சுமார் 29 வருடங்களுக்குப் பிறகு அவரிடம் இருந்து விவாகரத்து கேட்டுள்ள சம்பவம், பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

47
AR Rahman and Saira Banu

AR Rahman and Saira Banu

எந்த ஒரு திரைப்பட நிகழ்ச்சி என்றாலும், ஹீரோ - ஹீரோயினை மிஞ்சும் வகையில் மிகவும் க்யூட் ஜோடியாக வந்து போஸ் கொடுக்கும் சாய்ரா பானு - ஏ ஆர் ரகுமான் ஜோடி தங்களுடைய திருமண வாழ்க்கையில் இருந்து, அதுவும் 29 வருடம் கழித்து இப்படி ஒரு முடிவை எடுக்க என்ன காரணம் என்பதே பல ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.

 ஏ ஆர் ரகுமானின் மகன் அமீன், இந்த மாதிரியான நேரத்தில் எங்களுக்கான பிரைவசியை கொடுக்குமாறு உருக்கமாக தன்னுடைய சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார். இதை போன்ற கருத்தை தான் கதீஜாவும் கூறி இருந்தார்.

இனி சேர்ந்து வாழ முடியாது; ஒற்றைக் காலில் நின்ற தனுஷ் - ஐஸ்வர்யா - கோர்ட் சொன்னதென்ன?

57
Bayilvan Ranganathan

Bayilvan Ranganathan

எந்த ஒரு கிசு கிசுவிலும் சிக்காத இந்த மனிதரின் சோதனை காலமாகவே இது பார்க்கப்படும் நிலையில், தற்போது பிரபல பத்திரிகையாளரும் -  நடிகருமான பயில்வான் ரங்கநாதன், ஏ ஆர் ரகுமான் குறித்து youtube  சேனலுக்கு கொடுத்த பேட்டியில், கூறி உள்ளதாவது... "ஏ ஆர் ரகுமான் உண்மையிலேயே எந்த ஒரு கிசுகிசுவிடும் சிக்காத உன்னதமான மனிதர். அவருடைய இந்த விவாகரத்து விஷயம் ரசிகர்களை மட்டுமின்றி சினிமா துறையை சேர்ந்தவர்களையும் உச்சகட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

67
Bayilvan Ranganathan About AR Rahman

Bayilvan Ranganathan About AR Rahman

ஏ.ஆர்.ரகுமானின் விவாகரத்து செய்தி வெளியான பின்னர், அவருக்கு வேறு ஒரு பெண்ணோடு உறவு என வாயிக்கு வந்ததை எல்லாம் சிலர் பேச துவங்கி இருக்கிறார்கள். ஆனால் அதெல்லாம் சுத்த பொய். அவர் அப்படிப்பட்ட ஆள் கிடையவே கிடையாது. அதேபோல ராயன் படத்துக்கு இசையமைத்ததால் தான் ஏ ஆர் ரகுமானுக்கு விவாகரத்து ஆகிவிட்டதாக சிலர் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர். அதுவும் தேவையில்லாத ஒன்று.

நடிச்சது ஒரே ஒரு தமிழ் படம்; பிரைவேட் ஜெட்டோடு பல கோடி சொத்துக்கு அதிபதி; யார் இந்த குழந்தை தெரியுமா?
 

77
AR Rahman Divorce Reason

AR Rahman Divorce Reason

ஏ ஆர் ரகுமான் குடும்பத்துக்கு விவாகரத்து என்பது பழகிப்போன ஒன்று. அதாவது பரம்பரை நோய் போன்றது. ஏற்கனவே ஏ ஆர் ரகுமானின் சகோதரி ஒருவர், பத்திரிகையாளரை திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்றார். இதைத்தொடர்ந்து ஏ ஆர் ரகுமானின் சகோதரியின் மகனான ஜிவி பிரகாஷும் தன்னுடைய மனைவியிடம் இருந்து  விவாகரத்து பெற்று விட்டார். இப்போது ஏ ஆர் ரகுமானும் விவாகரத்து பெற்றுள்ளார்.

அதே சமயம் எப்போதும் சர்ச்சையான விஷயங்களை கொளுத்தி போடும் பயில்வான் இந்த பேட்டியில் ஏ.ஆர்.ரகுமான் பற்றி பெருமையாக பேசியுள்ளதை நோட் செய்து நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
1st TEST • NZ vs IND 2026
Live
NZNZ
368
INDIND
(43.0 ov)163/1
Day 3 - Session 1
Schedule ›
29th T20 • WBBLT20
HH-WHH-W
Sat, 21 Nov, 2026
ST-WST-W
06:30 am
Match yet to begin.
Schedule ›
30th T20 • WBBLT20
SS-WSS-W
Sat, 21 Nov, 2026
PS-WPS-W
10:00 am
Match yet to begin.
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
31st T20 • WBBLT20
BH-WBH-W
Sun, 22 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
325 & 90/2
SLSL
98 & 316
PAK won by 8 wickets
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss : டாஸ்கில் TTF வைத்த மெகா ட்விஸ்ட்... டிக்கெட் டூ பினாலே பில்டப் வீக்கில் வெற்றிவாகை சூடியது யார் தெரியுமா?
Recommended image2
Ashwin Kumar : பிளாக்பஸ்டர் இயக்குநரின் பேத்தியா இது... அஸ்வின் குமார் திருமணம் செய்த புவனேஸ்வரி யார் தெரியுமா?
Recommended image3
Sathyavan Savithiri Review : கீர்த்தி சுரேஷ் நடித்த சத்தியவான் சாவித்திரி பந்தயம் அடித்ததா? பல்பு வாங்கியதா? முழு விமர்சனம் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved