இனி சேர்ந்து வாழ முடியாது; ஒற்றைக் காலில் நின்ற தனுஷ் - ஐஸ்வர்யா - கோர்ட் சொன்னதென்ன?
நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா ஜோடி விவாகரத்து வழக்கு தொடர்பாக இன்று நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், நீதிபதி வழங்கிய தீர்ப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
Actor Dhanush
கோலிவுட் திரையுலகின் நடிப்பு அசுரனான தனுஷ், திரையுலகினர் மத்தியில் எந்த அளவுக்கு பிரபலமானவரோ அதே அளவுக்கு சர்ச்சைக்கும் பஞ்சம் இல்லாத மனிதராக பார்க்கப்படுகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட, சைலெண்டாக இருக்கும் தனுஷ் தான் தன்னுடைய திருமண ஆவணப்படம் 2 வருடமாக வெளியாகாமல் இருக்க காரணம் என்றும், அவர் தயாரித்த நானும் ரவுடி தான் படத்தின் 3 நிமிட காட்சியை பயன்படுத்தியதற்கு 10 கோடி கேட்பதாகவும், 3 பக்க அறிக்கை வெளியிட்டு வெச்சு செய்தார் நயன்தாரா.
Nayanthara and Dhanush
ஆனால் தனுஷ் இதுகுறித்து ஒரு வார்த்தை கூட பேசத நிலையில்... தனுஷின் தந்தை மட்டும் வரிந்து கட்டி கொண்டு வந்து, நயன்தாரா சொல்வதெல்லாம் பொய் என கூறினார். மேலும் தனுஷ் - நயன் இடையேயான பிரச்சனை ஒருபக்கம் சென்று கொண்டிருக்க, தற்போது தனுஷின் வாழ்க்கை பிரச்சனை மீண்டும் நீதிமன்றத்தை நாடி வந்துள்ளது.
விவாகரத்துக்கு பின்னும் இப்படியா? ஜிவிக்காக ஓகே சொன்ன சைந்தவி - ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!
Aishwarya Rajinikanth Dhanushs divorce Report
நடிகர் தனுஷ், கோலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை கடந்த 2004-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், திருமணம் ஆகி 18 வருடங்கள் ஆன பின், இருவரும் கடந்த 2022-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக அறிவித்தனர். இருவரும் தங்கள் பிரிவை அறிவித்த பின்னர்... ஐஸ்வர்யா கடந்த ஆண்டு தான், விவாகரத்து கேட்டு சென்னை குடும்பல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
Actor Dhanush and Aishwarya Divorce Case
இந்த வழக்கு ஏற்கனவே இரண்டு முறை விசாரணைக்கு வந்த போது, ஐஸ்வர்யா - தனுஷ் இருவருமே நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. எனவே இவர்கள் மீண்டும் சேர்ந்து வாழ உள்ளனர் என்று தகவல் பரவியது. இந்த சந்தேகத்தை உறுதி செய்யும் விதமாக, ஐஸ்வர்யா - தனுஷ் இருவரும் வேட்டையன் படத்தை ஒரே திரையரங்கில் FDFS காட்சி பார்த்ததோடு, மாமனார் ரஜினிகாந்துக்கு தனுஷ் 'வேட்டையன்' பட வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.
Dhanush - Aishwarya
இந்நிலையில், இன்று தனுஷ் - ஐஸ்வர்யாவின் விவாகரத்து மனு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த முறையாவது இவர்கள் இருவரும் ஆஜர் ஆவார்களா? என்கிற கேள்வி எழுந்த நிலையில், இன்று காலை 10.30 மணி அளவில் ஐஸ்வர்யா ஆஜரானார். தனுஷ் வருவதற்கு தாமதம் ஆனதால் 12 மணிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. தனுஷ் 11:30 மணியாளத்தில் நீதிமன்றத்திற்கு வந்த நிலையில் தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் 12 மணிக்கு நீதிபதி முன் ஆஜராகினர்.
Court Order
நீதிபதி முன் இருவருமே இனி சேர்ந்து வாழ்வதில் விருப்பம் இல்லை என கூறி, தங்களின் திருமணத்தை செல்லாது என அறிக்கை வேண்டும் என கேட்டு கொண்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, நீதிபதி வரும் 27-ஆம் இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
அட்ரா சக்க..! கயல் சீரியலில் அதிரடி என்ட்ரி கொடுக்கும் பிரபல வெள்ளித்திரை ஹீரோ!