Jeep Cars Offer : வருட இறுதி நெருங்கி வரும் நிலையில் தந்து Compass ரக காருக்கு எக்கச்சக்க சலுகைகளை வழங்கி வருகின்றது பிரபல Jeep நிறுவனம்.

ஆண்டு நிறைவடையும் இந்த நேரத்தில், பிரபல கார் தயாரிப்பு நிருவமான ​​ஜீப் இந்தியா, அதன் அனைத்து ரக கார்களிலும் கவர்ச்சிகரமான பல வகை சலுகைகளை வழங்குகிறது. குறிப்பாக Jeep நிறுவனத்தின் காம்பஸ் மற்றும் மெரிடியன் போன்ற சிறப்பான எஸ்யூவிகளில் ரூ.4.95 லட்சம் வரையிலும், அதன் ஃபிளாக்ஷிப் கிராண்ட் செரோகியில் சுமார் ரூ.12 லட்சம் வரையிலும் சலுகைகளை அந்த நிறுவனம் வழங்கி வருகின்றது. இந்த ஆண்டு இறுதி வரை இந்த சலுகைகள் நீடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.

Skoda EV: ரூ.10 லட்சத்திற்குள் மிரட்டலான EV காரை களம் இறக்கும் Skoda: எப்போது தெரியுமா? 

Jeep Compass

Jeep Compass கார்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட வகைகளில் ரூ.3.15 லட்சம் வரையிலான பலன்களுடன் அது விற்பனைக்கு வருகிறது. கூடுதலாக, ஜீப் MY2024 மாடல்களில் ரூ. 1.40 லட்சம் மதிப்புள்ள கார்ப்பரேட் சலுகைகளையும், ரூ. 15,000 மதிப்புள்ள சிறப்புச் சலுகைகளையும் வழங்குகிறது அந்நிறுவனம். ஜீப் காம்பஸ் கார்களை பொறுத்தவரை ரூ.18.99 லட்சம் முதல் ரூ.28.33 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கிறது. இந்த கார் 170எச்பி, 2.0 லிட்டர் டீசல் எஞ்சினுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் மட்டுமே வருகிறது. டாப்-ஸ்பெக் மாடல் S மாறுபாடுகள் மட்டுமே 4x4 வகையில் வருகிறது. 

Jeep Meridian

Jeep Meridian கார்களின் MY2024 மாடல்களில் ரூ. 2.80 லட்சம் வரையிலான சலுகைகள் மற்றும் ரூ. 1.85 லட்சம் மதிப்புள்ள கூடுதல் கார்ப்பரேட் சலுகைகளுடன், மாறுபாட்டின் அடிப்படையில் ஜீப் மெரிடியனை விற்பனை செய்து வருகிறது. 30,000 மதிப்புள்ள சிறப்புச் சலுகையும் இதில் உள்ளது. இதன் மொத்தப் பலன்கள் ரூ. 4.95 லட்சம் வரை கிடைக்கும். சமீபத்தில், ஜீப் தந்து எஸ்யூவியின் புதிய என்ட்ரி ஸ்டேஜ் 5-சீட்டர் மாடலை அறிமுகப்படுத்தியது. தற்போது இதன் விலை ரூ.24.99 லட்சம் முதல் ரூ.38.49 லட்சம் வரை உள்ளது.

Jeep Grand Cherokee 

இந்தியாவில் ஜீப்பின் ஃபிளாக்ஷிப் தயாரிப்பான கிராண்ட் செரோக்கி எஸ்யூவியின் ஆண்டு இறுதி சலுகைகள் ரூ.12 லட்சம் வரை உள்ளது. இந்த காரின் விலை ரூ.67.50 லட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கது. கிராண்ட் செரோக்கியில் 2.0-லிட்டர், நான்கு சிலிண்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சின் உள்ளது, இது 272hp மற்றும் 400Nm உச்ச முறுக்குவிசையை உருவாக்குகிறது மற்றும் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

குளிர் காலத்தில் அதள பாதாளத்திற்கு செல்லும் மைலேஜ்: வாகனத்தின் மைலேஜை பராமரிக்க என்ன செய்யனும்?