Published : Jul 04, 2022, 07:10 AM ISTUpdated : Jul 04, 2022, 11:45 PM IST

TamilNews Highlights:அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு நானும் போட்டியிடுவேன் முன்னாள்அமைச்சர்

சுருக்கம்

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த வேண்டும் எனவும் தானும் போட்டியிட இருப்பதாக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

TamilNews Highlights:அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு நானும் போட்டியிடுவேன் முன்னாள்அமைச்சர்

08:32 PM (IST) Jul 04

முதலில் மனிதனா நடந்துக்கோ...யூ-டியூபர் பாரிசாலன் மீது திருநங்கை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்.

LGBTQ மக்களுக்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை, அவர்களை சக மனிதர்களாக நடத்துங்கள் என திருநங்கையும், சமூக ஆர்வலருமான ஜெஸ்ஸி அரோரா கோரிக்கை வைத்துள்ளார். LGBTQ சமூகத்தினரை பாரிசாலன் என்பவர் சமூக வலைதளத்தில் மிகவும் இழிவாக பேசியுள்ளதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அவர் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் படிக்க
 

07:28 PM (IST) Jul 04

திமுகவில் இணையும் முன்னாள் DGP ரவி IPS...??? அண்ணாமலைக்கு டப் கொடுக்க ஐடியா.?


தமிழக முன்னாள் ஓய்வு பெற்ற டிஜிபி ரவி IPS விரைவில் அதிமுகவில் இணையப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பொருத்திருந்து பார்க்கலாம்  என சிரிப்பையே பதிலாக கூறியுள்ளார்.

ஐபிஎஸ் அதிகாரிகள் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு அரசியலில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை தனது ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக பாஜகவில் இணைந்து தற்போது தமிழக பாஜகவின் மாநில தலைவராக செயல்பட்டு வருகிறார். பிரதமர் மோடியின் மீது ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாக அரசியலுக்கு தான் வந்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் படிக்க
 

06:19 PM (IST) Jul 04

இது தான் சார் இந்தியா ... பாகிஸ்தான் ராணுவத்திற்கு மனிதநேயத்தை போதித்த BSF.

இந்திய எல்லைப் பகுதிக்குள் வழிதவறி வந்த 3 வயது குழந்தையை இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் (BSF)பத்திரமாக மீட்டு அந்த நாட்டிடம் ஒப்படைத்தது. இதற்கான புகைப்படம் வெளியாகியுள்ள நிலையில் இந்தியா எப்போதும் மனிதநேயத்தின் அடையாளம் என பலரும் பாராட்டி வருகின்றனர். உலகிலேயே பதற்றம் நிறைந்த எல்லைக் கோடாக இந்தியா-பாகிஸ்தான் எல்லை கோடு உள்ளது. இருநாடுகளும் பிரிந்தது முதலே பகை நாடுகளாக இருந்து வருகின்றன. மேலும் படிக்க

05:38 PM (IST) Jul 04

காசுக்காக இந்து தெய்வங்களை தினம் தினம் அவமரியாதை செய்யும் திருமாவளவன் அயோக்கியன்.. அர்ஜூன் சம்பத் ஆவேசம்.

இந்து தெய்வங்களை அன்றாடம் ஆபாசமாக பேசிக் கொண்டிருக்கிற திருமாவளவன் ஒரு அயோக்கியன் என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார். வெளிநாட்டினரிடம் காசு வாங்கிக்கொண்டு, இசுலாமியர்கள் போடுகிற எச்சில் பிரியாணிக்காக இந்து மதத்துக்கு எதிராக பேசிக் கொண்டிருக்கிறார் என அவர் விமர்சித்துள்ளார். மேலும் படிக்க

04:59 PM (IST) Jul 04

விஜய்காந்த் உடல்நிலை.. இதெல்லாம் ஈனத்தனமான செயல்.. தேமுதிக வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..

கேப்டன்‌ உடல்நிலை குறித்து வெளியாகும்‌ வதந்திகளை கழக நிர்வாகிகளும்‌, பொதுமக்களும்‌ யாரும்‌ நம்ப வேண்டாம்‌. அடுத்தவரின்‌ உடல்நிலை குறித்து தவறான செய்தியை பரப்பி அதன்மூலம்‌ ஆதாயம்‌ தேடும்‌ ஈனத்தனமான செயல்களை இன்றுடன்‌ நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று தேமுதிக கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க
 

04:53 PM (IST) Jul 04

Nayanthara Movies : லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தொட்டு வந்த சிகரங்கள்!

Lady Super Star Nayanthara journey in Tamil Cinema- Quick-Rewind : தமிழக சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்து வந்த பாதை குறித்த சிறு தொகுப்பை இங்கு காணலாம்...

மேலும் செய்திகளுக்கு... Nayanthara Movies : லேடி சூப்பர் ஸ்டார் நயன்தார தொட்டு வந்த சிகரங்கள்!

04:18 PM (IST) Jul 04

இலங்கை கடற்படையினரால் 12 மீனவர்கள் கைது.. கடலோரப்‌ பகுதிகளில்‌ பாதுகாப்பின்மை அச்சுறுத்தல்..முதலமைச்சர் கடிதம்

இலங்கைக்‌ கடற்படையினரால்‌ சிறைபிடிக்கப்பட்டுள்ள 12 தமிழக மீனவர்களையும்‌, அவர்களது மீன்பிடிப்‌ படகினையும்‌ விடுவிக்க வலியுறுத்தி வெளியுறவுத்‌ துறை அமைச்சர்‌ ‌ஜெய்சங்கருக்கு‌ முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ கடிதம் எழுதியுள்ளார். மேலும் படிக்க

04:09 PM (IST) Jul 04

மருத்துவமனையில் இருந்து பச்சிளம் குழந்தை திருட்டு..! கட்டப்பையில் வைத்து கொண்டு சென்ற மர்ம பெண்..? தட்டி தூக்கிய போலீஸ்

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட பச்சிளம் பெண் குழந்தையை சிசிடிவி காட்சி உதவியோடு போலீசார் 24 மணி நேரத்தில் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் படிக்க..

04:07 PM (IST) Jul 04

நம்ம பிரதமர் மோடி மூளையே மூளைதான்.. சீனா பாகிஸ்தானை டரியல் ஆக்கும் சம்பவம்... காஷ்மீரில் G20 மாநாடு

2023 ஆம் ஆண்டு இந்தியா ஜி20 உச்சி மாநாட்டை தலைமையேற்று நடத்த உள்ளது. அதில் ஜம்மு மற்றும் காஷ்மீரில் சில கூட்டங்களை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது இது சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக ஜம்மு மற்றும் காஷ்மீர் நிர்வாகத்தால் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

03:27 PM (IST) Jul 04

துறைமுக கண்டெய்னர் லாரிகள் காலவரையற்ற ஸ்டிரைக்.. பல கோடி ரூபாய் சரக்குகள் தேக்கம் ஆகும் அபாயம்..

சென்னை மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் கண்டெய்னர் லாரி ஓட்டுநர்கள் , வாடகையை உயர்த்தி தர வலியுறுத்தி தரக்கோரி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வேலைநிறுத்தத்தால் பல கோடி ரூபாய் சரக்குகள் தேக்கம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் படிக்க
 

03:14 PM (IST) Jul 04

நேரம் காலம் இல்லாமல் கணவர் ஓயாத டார்ச்சர்... மாடியில் இருந்து குதித்து மனைவி தற்கொலை..

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கணவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

மேலும் படிக்க

02:42 PM (IST) Jul 04

வனிதாவை சேர்த்து கொள்வீர்களா?..ஆடிப்போன அருண்விஜய் !

அருண் விஜயிடம்  படத்தில் மட்டும் உறவுகளை விட்டுக் கொடுக்கக் கூடாது என பேசி உள்ள தாங்கள் உங்கள் குடும்பத்திலும் ஒருவரை ஒதுக்கி வைத்துள்ளீர்களே அவர்களை சேர்த்துக் கொள்வீர்களா என கேட்டுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு... வனிதாவை சேர்த்து கொள்வீர்களா?..ஆடிப்போன அருண்விஜய் !

02:38 PM (IST) Jul 04

ராக்கெட்ரி படக்குழுவுக்கு ரஜினி வாழ்த்து

ராக்கெட்ரி படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், “நமது நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி வளர்ச்சிக்காக பல துன்பங்களுக்கு உள்ளாகி, தியாகங்களை செய்து அரும்பாடுபட்ட பத்ம பூஷன் நம்பி நாராயணன் அவர்களின் வரலாற்றை மிகத் தத்ரூபமாக படமாக்கி, முதல் படத்திலேயே தலைசிறந்த இயக்குனர் என நிரூபித்து இருக்கிறார் மாதவன். ராக்கெட்ரி அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு படம்” என பாராட்டி உள்ளார்.மேலும் படிக்க

02:37 PM (IST) Jul 04

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு தானும் போட்டியிட இருப்பதாக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் மட்டுமேதான் அதிமுகவா? என கேள்வி எழுப்பியவர்,   எம்.ஜி.ஆரின் உயில்படி தொண்டர்கள் மட்டுமே தலைவரை தேர்ந்தெடுக்க முடியும் என கூறினார். தேர்தல் நடத்தட்டும், நான் நிற்கிறேன் என்னை போல் 100 பேர் நிற்பார்கள் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர் தலைமை ஏற்கட்டும் என முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் கூறியுள்ளார்.

மேலும் படிக்க..

02:34 PM (IST) Jul 04

13 ஆயிரம் காலி பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர் நியமனம்.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.. முழு தகவல்

தமிழகத்தில் காலியாக உள்ள தற்காலிக ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இன்று முதல் ஜூலை 6ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.மேலும் படிக்க

02:10 PM (IST) Jul 04

ஒர்க் ஷாப் வேலைக்கு வந்த 22 வயது இளைஞரை மடக்கிய ஓனரின் மனைவி..

கள்ளக்காதலை கண்டித்த மின்வாரிய ஊழியரை கட்டையால் தாக்கி கொன்றுவிட்டு விபத்தில் உயிரிழந்தது போல நாடகமாடிய மனைவி உள்ளிட்ட 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

மேலும் படிக்க

01:53 PM (IST) Jul 04

வெற்றிவிழா நடத்தும் உதயநிதி!

உதயநிதி வெளியிட்ட படங்களில் எஃப்.ஐ.ஆர், பீஸ்ட், காத்துவாக்குல ரெண்டு காதல், டான், நெஞ்சுக்கு நீதி, விக்ரம் ஆகிய படங்கள் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியைத் தழுவின. இதன்காரணமாக இந்த படங்களின் வெற்றியை ஒரு விழாவாக நடத்தி கொண்டாட உதயநிதி ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.மேலும் படிக்க

01:52 PM (IST) Jul 04

தினம் படுக்கையறையில் செ* டார்ச்சர்... துணி மாற்றும் போது மறைந்திருந்து வீடியோ... சைகோ கணவனால் கதறிய மனைவி.

மனைவிக்கு தினந்தினம் பாலியல் டார்ச்சர் கொடுத்து வந்ததுடன், நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டி வந்த கொடூரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்நிலையில் கணவன் மீது மனைவி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இச்சம்பவம் இந்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதலிரவு தொடங்கி தற்போது வரை உடல்ரீதியாக கணவன் சித்திரவதை செய்து வந்ததாகவும் அந்த பெண் தனது புகாரில் கூறியுள்ளார்.மேலும் படிக்க


 

01:40 PM (IST) Jul 04

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா.. பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம்.. மாநகராட்சி உத்தரவு..

சென்னையில் பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் வேண்டும் சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.  கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை வணிக நிறுவனங்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் மாநகராட்சி எச்சரித்துள்ளது. அதே போல்   வணிக நிறுவனங்கள் ஒரே நேரத்தில் மக்கள் அதிகளவில் கூடுவதை தவிர்க்க வேண்டும். வணிக வளாகங்கள், திரையரங்குகள், துணிக்கடையில் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் முக கவசம் அணிய வேண்டும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும் படிக்க

01:39 PM (IST) Jul 04

இந்த உத்தரவு பொருந்தாது.. ஓபிஎஸ் தலையில் இடியை இறக்கிய சென்னை உயர்நீதிமன்றம்

ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழுவுக்கு இடைக்கால தடை வேண்டுமெனில் தனி நீதிபதியை அணுகுமாறு ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்ற அமர்வு அறிவுறுத்தியுள்ளது. 
மேலும் படிக்க

01:39 PM (IST) Jul 04

இன்று 5 மாவட்டங்களில் கனமழை.. இந்தெந்த மாவட்டங்களில் அடித்து ஊற்றப்போகிறது.. வானிலை அப்டேட்..

தமிழகத்தில் தொடந்து 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் அகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க

01:32 PM (IST) Jul 04

மருத்துவமனையிலிருந்து திரும்பிய விஜயகாந்த்..உடல்நிலை எப்படி இருக்கு தெரியுமா?

அறுவை சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பியுள்ள பிரபல நடிகர் விஜயகாந்த் தற்போது அவரது வீட்டில் மேல் சிகிச்சை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் விவரம் அறிய.. மருத்துவமனையிலிருந்து திரும்பிய விஜயகாந்த்..உடல்நிலை எப்படி இருக்கு தெரியுமா?

01:32 PM (IST) Jul 04

பொதுக்குழு உறுப்பினர்கள் பணம் வாங்கினார்களா..? வைத்தியலிங்கம்,டிடிவி தினகரனுக்கு எச்சரிக்கை விடுத்த கே பி முனுசாமி

ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவிக்க மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்களுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளதாக வைத்தியலிங்கம், டிடிவி தினகரன் கூறியதற்கு அதிமுக மூத்த நிர்வாகி கே.பி. முனுசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க..

01:14 PM (IST) Jul 04

உத்தரவு பொருந்தாது... ஓபிஎஸ்-க்கு அதிர்ச்சி கொடுத்த நீதிமன்றம்

ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழுவுக்கு இடைக்கால தடை வேண்டுமெனில் தனி நீதிபதியை அணுகுமாறு ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு அறிவுறுத்தியுள்ளது. 

01:04 PM (IST) Jul 04

கல்யாணம் ஆன டீச்சருக்கு இது தேவையா...? இளைஞனை விரட்டி விரட்டி காதலித்து டார்ச்சர்... கடைசியில் நடந்த கொடூரம்

பள்ளி ஆசிரியை கொலை செய்யப்பட்ட வழக்கில், ஆசிரியையின் கள்ளக் காதலனை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து தன்னை காதலிக்குமாறு பள்ளி ஆசிரியை வற்புறுத்தி வந்ததால் அந்த இளைஞன் ஆசிரியை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் நடந்துள்ளது. மேலும் படிக்க

12:59 PM (IST) Jul 04

தினகரன் மீது மானநஷ்ட வழக்கு தொடங்கப்படும்.. கே.பி.முனுசாமி

அவதூறு கருத்துக்களை கூறினால் தினகரன் நீதிமன்றத்தில் நிற்க நேரிடும். தினகரன் மீது மானநஷ்ட வழக்கு தொடங்கப்படும் என கே.பி.முனுசாமி கூறியுள்ளார். தனது இருப்பை காட்டவே சசிகலா பேசி வருகிறார். கைது நடவடிக்கைகளுக்கு அதிமுக அஞ்சாது என கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

12:55 PM (IST) Jul 04

பொன்னியின் செல்வனில் ஆதித்ய கரிகாலனாக நடித்துள்ளார் விக்ரம்

பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் நடிகர்களின் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகின்றன. முதலாவதாக நடிகர் விக்ரமின் கதாபாத்திரம் அடங்கிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதன்படி இவர் ஆதித்ய கரிகாலன் எனும் பட்டத்து இளவரசர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். மேலும் தற்போது வெளியிடப்பட்டுள்ள போஸ்டர் பர்ஸ்ட் லுக்கை விட சூப்பராக இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.மேலும் படிக்க

12:41 PM (IST) Jul 04

சென்னையில் இனி முகக்கவசம் கட்டாயம்

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் சென்னையில் பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை வணிக நிறுவனங்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

12:33 PM (IST) Jul 04

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை குண்டு கட்டாக கைது செய்த போலீஸ்..! அதிமுகவினர் அதிர்ச்சி

மதுரை கப்பலூர் டோல்கேட்டை அகற்றக்கோரி அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், குண்டு கட்டாக போலீசார் கைது செய்தனர்.

மேலும் படிக்க..

12:15 PM (IST) Jul 04

RSS-ன் துணை அமைப்பான முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச்சில் உள்ளவர்களை இஸ்லாத்தில் இருந்தே விரட்டுங்க.. தடா ரஹீம்.

ஆர்எஸ்எஸின் துணை அமைப்பான முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் நிர்வாகிகளையும் , உறுப்பினர்களையும் இஸ்லாத்தை விட்டு விரட்ட வேண்டும் என தமிழக ஜாமஅத்துல் உலமா சபைக்கு இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக கோரிக்கை வைத்துள்ளது.இந்து முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைத்து கலவரங்களை உருவாக்கி அதன் மூலம் நாடு முழுவதும் அரசியல் அறுவடை செய்ய ஆர்எஸ்எஸ் பாஜக முயன்று உள்ளதே இந்த சம்பவங்கள் எடுத்து காட்டுகிறது. மேலும் படிக்க

 

12:00 PM (IST) Jul 04

நம்பிக்கை வாக்கெடுப்பில் ஏக்நாத் ஷிண்டே அரசு வெற்றி

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஏக்நாத் ஷிண்டே வெற்றி பெற்றுள்ளார். பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை தக்க வைக்கிறார் ஏக்நாத் ஷிண்டே. பெரும்பான்மைக்கு 144 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில் 164 வாக்குகள் பெற்று ஏக்நாத் ஷிண்டே அரசு வெற்றி பெற்றார். 

11:52 AM (IST) Jul 04

இபிஎஸ் தொடர்ந்த வழக்கு... ஜூலை 6ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை

அதிமுக பொதுக்குழு தொடர்பான சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக இபிஎஸ் தொடர்ந் வழக்கை ஜீலை 6ம் தேதி விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. தலைமை நீதிபதி அனுமதியுடன் நாளை மறுநாள் விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை கோரி இபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். 

11:49 AM (IST) Jul 04

தமிழகத்தில் பாஜகவா... ? வாய்ப்பு இல்லை ராஜா.. அமித்ஷாவையே ஆடவிட்ட வைகை செல்வன்

தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அமித்ஷா கருத்து சொல்லியிருக்கலாம் ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை எப்படி நிலை பெறும் என்பதை போகபோகத்தான் தெரியும் என அதிமுக செய்தி தொடர்பாளர் வைகை செல்வன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..

11:21 AM (IST) Jul 04

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வீடருகே பிரம்மாண்ட பங்களா கட்டும் நயன்தாரா

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் இல்லம் அமைந்துள்ள போயஸ் கார்டன் பகுதியில் புது வீடு கட்டி வருகிறார் நயன்தாரா. இந்த ஆடம்பர வீட்டில் நீச்சல் குளம், தியேட்டர், உடற்பயிற்சி கூடம் ஆகியவை இடம்பெற்று உள்ளதாம். இந்த வீட்டின் உள்புற வேலைகளுக்காக மட்டும் சுமார் 25 கோடி ரூபாய் செலவழித்து உள்ளாராம் நயன். மேலும் படிக்க

11:21 AM (IST) Jul 04

பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து.. பள்ளி மாணவர்கள் உட்பட 16 பேர் பலி

இமாச்சலப் பிரதேசத்தில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பள்ளிக் குழந்தைகள் உட்பட 16 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். 

மேலும் படிக்க

11:12 AM (IST) Jul 04

மாடிப்படியிலிருந்து தவறி விழுந்த லாலு பிரசாத் யாதவ் மருத்துவமனையில் அனுமதி

ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சி தலைவர் லாலு பிரசாத் மாடிப்படியிலிருந்து தவறி விழுந்ததில் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, சிகிச்சைக்காக   பாட்னா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

10:53 AM (IST) Jul 04

முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்த முதலமைச்சர்..!60 நிறுவனங்களுடன் ஒப்பந்தத்தால் 1.25லட்சம் கோடி முதலீடு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், 60 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.புதிய ஒப்பந்தம் மூலம் 1.25 லட்சம்  கோடி ரூபாய்க்கு முதலீடுகள் கிடைக்கவுள்ளது  மேலும் 74 ஆயிரத்து 898 பேருக்கு வேலைவாய்ப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், 21 புதிய தொழில்திட்டங்களுக்கு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.  

மேலும் படிக்க..

10:49 AM (IST) Jul 04

அதிமுக நிர்வாகிகள் உடன் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆலோசனை

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக நிர்வாகிகள் உடன் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆலோசனை ஈடுபட்டுள்ளார்.  இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், வளர்மதி உள்ளிட்டோர் ஈபிஎஸ் இல்லம் வருகை தந்துள்ளனர். அதிமுக பொதுக்குழுவுக்கு ஒரு வாரமே உள்ள நிலையில், ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

10:47 AM (IST) Jul 04

தமிழர்களை பிளவுப்படுத்தும் கருவி மதம்.. முதல்வர் ஸ்டாலின்

வட அமெரிக்க தமிழ் சங்கப் பேரவை ஆண்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் உரையாற்றுகையில்;- தமிழையும், தமிழ் இனத்தையும் காக்கும் அரசாக திமுக விளங்குகிறது. தமிழ் மொழியை காத்திட பல்வேறு நடவடிக்கைள் எடுத்துள்ளோம். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என தமிழர்களின் நலனுக்காக பாடுபடுவது என்ற குறிக்கோளோடு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.

10:45 AM (IST) Jul 04

முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்தார்  முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை, நுங்கம்பாக்கத்தில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் 60 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. புதிய ஒப்பந்தங்களால் ரூ.1.25 லட்சம் கோடி முதலீடுகள் தமிழகத்திற்கு வர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 


More Trending News