MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • இன்டீரியருக்கு மட்டும் ரூ.25 கோடி... போயஸ் கார்டனில் பிரம்மாண்ட பங்களா கட்டும் நயன்தாரா!

இன்டீரியருக்கு மட்டும் ரூ.25 கோடி... போயஸ் கார்டனில் பிரம்மாண்ட பங்களா கட்டும் நயன்தாரா!

Nayanthara House : நடிகை நயன்தாராவின் புதுவீடு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் இல்லம் அமைந்துள்ள போயஸ் கார்டன் பகுதியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. 

2 Min read
Author : Ganesh A
| Updated : Jul 05 2022, 09:20 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

நடிகை நயன்தாராவுக்கு வயது 40-ஐ நெருங்கும் நிலையிலும், அவர் தென்னிந்திய திரையுலகில் முன்னணி ஹீரோயினாக வலம் வருகிறார். அதுமட்டுமின்றி தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலிலும் இவர் தான் முன்னணியில் உள்ளார். இத்தனை ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் மட்டுமே நடித்து வந்த நயன்தாரா தற்போது இந்தியிலும் அறிமுகமாகி உள்ளார்.

25

இவர் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் என்கிற இந்திப் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் அட்லீ இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. நடிகை நயன்தாராவுக்கு கடந்த மாதம் திருமணம் ஆனது. கல்யாண வேலைகளில் பிசியாக இருந்ததால் கடந்த ஒரு மாதமாக ஜவான் பட ஷூட்டிங்கில் கலந்துகொள்ளாமல் இருந்த நயன்தாராம் கடந்த வாரம் தான் இணைந்தார்.

இதையும் படியுங்கள்... Iravin Nizhal : ரிலீசுக்கு முன்பே சர்வதேச திரைப்பட விழாக்களில் 3 விருதுகளை தட்டித்தூக்கிய இரவின் நிழல்

35

நடிகை நயன்தாரா, தனது காதல் கணவன் விக்னேஷ் சிவனுக்காக பிரம்மாண்ட வீடு ஒன்றை திருமண பரிசாக வழங்கி இருந்தார். அந்த வீடு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் இல்லம் அமைந்துள்ள போயஸ் கார்டன் பகுதியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. சுமார் 16 ஆயிரத்து 500 சதுர அடியில் இந்த வீட்டை கட்டி வருகிறார் நயன்தாரா.

இதையும் படியுங்கள்... சுசிகணேசன் மீதான மீடூ புகார் முதல் காளி தம் அடிக்கும் போஸ்டர் வரை... தொடரும் சர்ச்சை- யார் இந்த லீனா மணிமேகலை?

45

இந்த வீட்டின் உள்புற வேலைப்பாடுகள் குறித்து பல ஆச்சர்ய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி இந்த ஆடம்பர வீட்டில் நீச்சல் குளம், தியேட்டர், உடற்பயிற்சி கூடம் ஆகியவை இடம்பெற்று உள்ளதாம். குறிப்பாக பாத்ரூம் மட்டும் 1500 சதுர அடியில் கட்டப்படுகிறதாம். பாத்ரூமே இவ்வளவு பிரம்மாண்டமாக கட்டப்பட்டால் வீடு எவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கும் என்பதை நினைத்து பார்க்கவே தலை சுற்றுகிறது.

இதையும் படியுங்கள்... Ajith : முதல்வர் இருக்கையில் அஜித்... டுவிட்டரில் அதகளப்படுத்தும் AK ரசிகர்கள் - வைரலாகும் Fan Made போட்டோ

55

இந்த ஆடம்பர வீட்டின் உள்புற வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறதாம். இதற்காக சச்சின், ஷாருக்கான் போன்ற பிரபலங்களின் வீடுகளுக்கு உள்புற வேலைகள் பார்த்த மும்பையை சேர்ந்த தனியார் நிறுவனத்தை நடிகை நயன்தாரா அணுகியுள்ளாராம். உள்புற வேலைகளுக்காக மட்டும் சுமார் 25 கோடி ரூபாய் செலவழித்து உள்ளாராம் நயன். விரைவில் இந்த புது வீட்டில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி குடியேற உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நயன்தாரா

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒரே கார்.. ஒரே நிற உடை; எதைப் பற்றியும் கவலை இல்ல; மேரேஜ் ரிஷப்சனுக்கு ஜோடியாக வந்த விஜய் அண்ட் த்ரிஷா!
Recommended image2
ராசியில்லாத நடிகை என முத்திரை..ஷங்கர் கொடுத்த மிகப்பெரிய லைஃப்! ஒரே படத்தில் ஓவர்நைட் பிரபலம்!
Recommended image3
சிறையில் ரேவதி.. வெளியே சந்திரகலாவின் வன்மம்! கார்த்திக்கிற்கு 'எமன்' ஆகும் சாமுண்டீஸ்வரி - பகீர் திருப்பம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved