சுசிகணேசன் மீதான MeToo புகார் முதல் காளி தம் அடிக்கும் போஸ்டர் வரை.. தொடரும் சர்ச்சை- யார் இந்த லீனா மணிமேகலை?
Leena Manimekalai controversy : இயக்குனர் சுசி கணேசன் மீது பாலியல் புகார் கூறியது முதல் காளி பட போஸ்டர் சர்ச்சையில் சிக்கியது வரை லீனா மணிமேகலை எதிர்கொண்ட பிரச்சனைகள் குறித்தும், அவர் யார் என்பது குறித்தும் தற்போது பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் பல்வேறு முன்னணி இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய லீனா மணிமேகலை, கவிஞர், தொகுப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்கினார். இவர் கடந்த 2002-ம் ஆண்டு மாதம்மா என்கிற ஆவணப்படத்தை முதன்முதலாக இயக்கினார். இதில் அரக்கோணம் அருகே உள்ள மாங்காட்டுச்சேரி கிராமத்தில் பெண் குழந்தைகளை தெய்வத்திற்கு அர்ப்பணிக்கும், அருந்ததியர் சமூகத்தினரின் வினோதமான நடைமுறையைப் பற்றி இதில் காட்சிப்படுத்தி இருந்தார்.
இதையும் படியுங்கள்... கையில் LGBT கொடி... வாயில் சிகரெட் உடன் ‘காளி’ - லீனா மணிமேகலையின் ஆவண பட போஸ்டரால் வெடித்த சர்ச்சை
இதையடுத்து கடந்த 2011-ம் ஆண்டு வெளியான செங்கடல் என்கிற படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இப்படத்தில் இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு தஞ்சம் புக வரும் அகதிகள் பற்றியும் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றியும் பேசி இருந்தார். இவ்வாறு தொடர்ந்து சமூகத்தில் நடக்கு அவலங்கள் குறித்து தனது படங்களில் உரக்கப்பேசி கவனம் ஈர்த்தார்.
இதையும் படியுங்கள்... போஸ்டர் சர்ச்சை - காளி படத்துக்கு தடைகோரி வழக்கு... அஞ்ச மாட்டேன் என அசால்டாக பதிலடி கொடுத்த லீனா மணிமேகலை
கடந்த 2018-ம் ஆண்டு இயக்குனர் சுசி கணேசன் மீது மீடூ புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். ஓடும் காரில் அவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர் கூறி இருந்தார். லீனா மணிமேகலையில் இந்த புகாருக்கு நடிகர் சித்தார்த், நடிகை அமலாபால் ஆகியோரும் ஆதரவு தெரிவித்து இருந்தனர். இதையடுத்து தான் சுசிகணேசனால் தான் பாதுகாப்பின்றி உணர்வதாகவும், தனக்கு எது நடந்தாலும் அதற்கு அவர் தான் காரணம் என்றும் டுவிட்டரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதையும் படியுங்கள்... டொராண்டோ கண்காட்சியில் இருந்து காளி போஸ்டரை அகற்றுங்கள்… கனடாவில் உள்ள இந்திய தூதரகம் அதிரடி!!
பதிலுக்கு சுசி கணேசனும் லீனா மீது அவதூறு வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த விவகாரம் இன்றளவும் நீடித்து வரும் நிலையில் தான் தற்போது புதிய சர்ச்சையில் சிக்கி உள்ளார் லீனா. அவர் இயக்கியுள்ள காளி என்கிற ஆவணப்படத்தின் போஸ்டரின் பெண் ஒருவர் காளியின் வேடமணிந்து சிகரெட் புகைப்பது போலவும், கையில் LGBT சமூகத்தின் கொடியை வைத்திருப்பது போலவும் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. இந்த விவகாரம் தான் தற்போது சோசியல் மீடியாவில் ஹாட் டாப்பிக்காக உள்ளது.
இது தொடர்பாக லீனா மணிமேகலைக்கு எதிர்ப்பு குரல்கள் தொடர்ந்து ஒலித்து வருகின்றன. அவர் மீது டெல்லி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.