டொராண்டோ கண்காட்சியில் இருந்து காளி போஸ்டரை அகற்றுங்கள்… கனடாவில் உள்ள இந்திய தூதரகம் அதிரடி!!
டொராண்டோ கண்காட்சியில் இருந்து இந்துக் கடவுள்களை அவமரியாதையாக சித்தரிக்கும் வகையில் உள்ள சர்ச்சைக்குரிய காளி போஸ்டரை அகற்றுமாறு கனடாவில் உள்ள இந்திய தூதரகம் வலியுறுத்தியுள்ளது.
டொராண்டோ கண்காட்சியில் இருந்து இந்துக் கடவுள்களை அவமரியாதையாக சித்தரிக்கும் வகையில் உள்ள சர்ச்சைக்குரிய காளி போஸ்டரை அகற்றுமாறு கனடாவில் உள்ள இந்திய தூதரகம் வலியுறுத்தியுள்ளது. காளி என்ற ஆவணப்படத்தின் போஸ்டர், காளி வேடமிட்ட பெண் புகைபிடிப்பது மற்றும் LGBTQ கொடியை பிடித்திருப்பது போன்றது சமூக ஊடகங்களில் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகக் கூறி இயக்குனர் லீனா மணிமேகலையை கைது செய்யுமாறு பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மைக்ரோ பிளாக்கிங் தளத்தில் காளி படத்தின் போஸ்டரைப் பகிர்ந்துள்ள மணிமேகலை, டொராண்டோவில் உள்ள ஆகா கான் அருங்காட்சியகத்தில் உள்ள 'ரிதம்ஸ் ஆஃப் கனடா' பிரிவின் ஒரு பகுதியாக இருப்பதாகக் கூறினார். இந்நிலையில், கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் எழுதியுள்ள கடிதத்தில் “திரைப்பட விழாவில் 'இதுபோன்ற அனைத்து ஆத்திரமூட்டும் பொருட்களையும் திரும்பப் பெற வேண்டும்' என்றும் வலியுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கையில் LGBT கொடி... வாயில் சிகரெட் உடன் ‘காளி’ - லீனா மணிமேகலையின் ஆவண பட போஸ்டரால் வெடித்த சர்ச்சை
மேலும் இதுக்குறித்த செய்திக்குறிப்பில், டொராண்டோவில் உள்ள ஆகா கான் அருங்காட்சியகத்தில் ‘Under the tent’ திட்டத்தின் ஒரு பகுதியாக காட்சிப்படுத்தப்பட்ட காளி என்கிற ஆவணப் படத்தின் போஸ்டரில் இந்துக் கடவுள்களை அவமரியாதையாக சித்தரிப்பது குறித்து கனடாவில் உள்ள இந்து சமூகத் தலைவர்களிடமிருந்து எங்களுக்கு புகார்கள் வந்துள்ளன. டொராண்டோவில் உள்ள எங்கள் துணைத் தூதரக அதிகாரி இதுகுறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் அதிருப்தி தெரிவித்திருக்கிறார். சில இந்து அமைப்புகளும் கனடாவில் உள்ள அதிகாரிகளை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்க வளியுறுத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனேடிய அதிகாரிகளையும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களையும் இதுபோன்ற ஆத்திரமூட்டும் விஷயங்களை திரும்பப் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிரபல தமிழ் நடிகர் விஷாலுக்கு திடீர் விபத்து...சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதி...
முன்னதாக, இயக்குனர் லீனா மணிமேகலை தனது உயிரைக் கொடுக்கத் தயாராக இருப்பதாகக் கூறியிருந்தார். "எனக்கு இழப்பதற்கு எதுவும் இல்லை, நான் வாழும் காலம் வரை, நான் நம்புவதை அச்சமின்றி பேசும் குரலுடன் வாழ விரும்புகிறேன். அதற்கான விலை என் உயிராக இருந்தால், அதைத் தரலாம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மேலும் போஸ்டரின் பின்னணியில் உள்ள சூழலைப் புரிந்துகொள்ள மக்கள் படத்தைப் பார்க்க வேண்டும் என்றும் மணிமேகலை வலியுறுத்தினார். ஒரு நள்ளிரவு வேளையில் டொராண்டோ நகரின் தெருக்களில் காளி உலா வரும்போது நடக்கும் சம்பவங்கள்தான் இந்தப் படம். படத்தைப் பார்த்தால் லீனா மணிமேகலையை கைது செய் என்று சொல்வதை விட்டுவிட்டு 'லவ் யூ லீனா மணிமேகலை' என்ற ஹேஷ்டேக்கைப் போடுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
- Director Leena Manimekalai
- FIR filled against Leena Manimekalai
- Kaali movie poster
- Leena Manimekalai Age
- Leena Manimekalai Kali Poster
- Leena Manimekalai Religion
- Leena Manimekalai Susi Ganesan
- Leena Manimekalai controversy
- Leena Manimekalai husband
- filmmaker Leena Manimekalai's Arrest
- leena manimekalai kaali movie