MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Iravin Nizhal : ரிலீசுக்கு முன்பே சர்வதேச திரைப்பட விழாக்களில் 3 விருதுகளை தட்டித்தூக்கிய இரவின் நிழல்

Iravin Nizhal : ரிலீசுக்கு முன்பே சர்வதேச திரைப்பட விழாக்களில் 3 விருதுகளை தட்டித்தூக்கிய இரவின் நிழல்

Iravin Nizhal : இரவின் நிழல் திரைப்படம் வருகிற ஜூலை 15-ந் தேதி ரிலீசாக உள்ள நிலையில், இப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் 3 விருதுகளை வென்றுள்ளது. 

1 Min read
Author : Ganesh A
Published : Jul 05 2022, 09:08 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்குவதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பார்த்திபன். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான ஒத்த செருப்பு திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதில் அவர் ஒருவர் மட்டுமே நடித்திருந்தார். உலக அளவில் பல்வேறு கலைஞர்களின் பாராட்டைப் பெற்ற இப்படம் தேசிய விருதையும் வென்றது.

இதையும் படியுங்கள்... சுசிகணேசன் மீதான மீடூ புகார் முதல் காளி தம் அடிக்கும் போஸ்டர் வரை... தொடரும் சர்ச்சை- யார் இந்த லீனா மணிமேகலை?

24

ஒத்த செருப்பு படத்தை தற்போது இந்தியில் ரீமேக் செய்து வருகிறார் பார்த்திபன். இப்படத்தில் அபிஷேக் பச்சன் நாயகனாக நடித்துள்ளார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். அதேபோல் விரைவில் ஹாலிவுட்டில் ஒத்த செருப்பு படத்தை ரீமேக் செய்ய உள்ளார் பார்த்திபன். இதற்கான பணிகளும் நடந்து வருகிறது.

இதையும் படியுங்கள்... மணமுடித்த நாயகிகள்..ஜோதிகா முதல் நயன்தாரா வரை எந்த வயதில் திருமணம் செய்து கொண்டார்கள் தெரியுமா?

34

இதனிடையே பார்த்திபன் இயக்கத்தில் தற்போது இரவின் நிழல் என்கிற திரைப்படம் தயாராகி உள்ளது. இப்படத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், இதனை ஒரே ஷாட்டில் படமாக்கி உள்ளார் பார்த்திபன், உலகளவில் எந்த ஒரு இயக்குனரும் செய்திராத ஒரு சாதனை முயற்சியை இப்படத்தின் மூலம் செய்து காட்டி உள்ளார் பார்த்திபன்.

இதையும் படியுங்கள்... Vishal injured: பிரபல தமிழ் நடிகர் விஷாலுக்கு திடீர் விபத்து...சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதி...

44

இரவின் நிழல் திரைப்படம் வருகிற ஜூலை 15-ந் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில், இப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் 3 விருதுகளை வென்றுள்ளது. அதன்படி கல்ட் மூவீஸ் இண்டர்நேஷனல் மற்றும் நியூ யார்க்கில் நடைபெற்ற ஓனிராஸ் பிலிம் அவார்ட்ஸ் ஆகியவற்றில் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது இரவின் நிழல் படத்தின் ஒளிப்பதிவாளர் ஆர்தர் ஏ வில்சனுக்கு  கிடைத்தது. அதேபோல் மெடுசா திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான விருதை வென்றுள்ளது. இதுதவிர நியூயார்க் மற்றும் ரோம் சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு நாமினேட்டும் ஆகி உள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
KS Chithra: 'மகளின் மரணத்துக்குப் பிறகு கோயிலுக்கே போகல, யாரையும் பார்க்கல' - மனம் திறந்த சித்ரா
Recommended image2
Now Playing
எனக்கு வாழ்க்கை கொடுத்தவர் பிரச்சினையே இல்லாமல் பிரிந்தது வேதனை.! ஃபீலிங்ஸை கொட்டிய விக்னேஷ் சிவன்.!
Recommended image3
Now Playing
"பச்சமல பூவு" பாடிய பிறகு எஸ்.பி.பி. செய்த செயல்.! மாயம் செய்த இளையராஜாவை உச்சி முகர்ந்த பாடு நிலா.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved