மணமுடித்த நாயகிகள்..ஜோதிகா முதல் நயன்தாரா வரை எந்த வயதில் திருமணம் செய்து கொண்டார்கள் தெரியுமா?
முன்னணி நாயகிகளில்ன் திருமணம் குறித்து பலருக்கும் தெரியும். அவர்கள் எந்த வயதில் மணமுடித்தார்கள் என்பது குறித்த சிறிய பதிவு..
suriya - jyothika
காக்க காக்க படப்பிடிப்பில் சூர்யாவுக்கும் - ஜோதிகாவிற்கும் இடையே மலர்ந்த காதல் கடந்த 2006-ம் ஆண்டு திருமண பந்தத்தில் முடிந்தது. இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். ஜோதிகாவிற்கு திருமணம் ஆகையில் இவரது வயது 29 ஆக இருந்தது.
kajal aggarwal
காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு என நல்ல மார்க்கெட்டை பெற்று வந்த இவர் தனது 35 வது வயதில் தனது நீண்ட நாள் காதலரான கௌதம் கிட்ச்லு என்பவரை எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சமீபத்தில் பிறந்துள்ளது.
Shriya Saran
பாலிவுட் நாயகிகளை மிஞ்சும் கவர்ச்சியை காட்டி கலங்கடித்து வந்த ஸ்ரேயா சரண்.. மெல்ல மெல்ல பட வாய்ப்புகள் குறைந்தததை அடுத்து கடந்த 2018-ம் ஆண்டு ரஸ்யாவை சேர்ந்த ஆண்ட்ரி கோஷீவ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. ஸ்ரேயா சரண் தனது 36 வது வயதில் மணமுடித்தார்.
Nazriya Nazim
ராஜா ராணி படத்தில் நாயகியாக இளசுகளின் மனதை கொள்ளையடித்த நஸ்ரியா நாஜிம். மலையாள உலகில் முன்னணி நாயகனாக இருக்கும் பகத் ஃபாசிலை திருமணம் செய்து கொண்டார். அப்போது நஸிரியாவிற்கு 19 வயது. கடந்த 2014-ம் ஆண்டு இவர்களது திருமணம் நடைபெற்றது.
Sayyeshaa
சந்தோஷ் பி. ஜெயக்குமார் எழுதி இயக்கிய கஜினிகாந்த் படபிடிப்பின் போது ஆர்யாவிற்கும்- நாயகி சாயிஷாவிற்கும் இடையே காதல் மலர் கடந்த 2019-ல் இருவரும் திருமணம் முடித்தனர். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. திருமணத்தின் போது நாயகிக்கு 21 வயது.
மேலும் செய்திகளுக்கு..Nayanthara Movies : லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தொட்டு வந்த சிகரங்கள்!
samantha
டாப் 10 நாயகியாக வலம் வரும் சமந்தா தனது 30 வது வயதில் டோலிவுட் சூப்பர் நாயகன் நாக சைதன்யாவை கரம்பிடித்தார். காதல் திருமணம் செய்து கொண்ட இவர்கள் கடந்த ஆண்டு விவகாரத்து பெற்று கொண்டனர்.
மேலும் செய்திகளுக்கு.. Nayanthara Movies : லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தொட்டு வந்த சிகரங்கள்!
nikki galrani
டார்லிங் படத்தில் அசத்திய நிக்கி கல்ராணி பிரபல நடிகர் ஆதியை சமீபத்தில் கரம் பிடித்தார். உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் அமைதியாக நடைபெற்றது இவர்களின் திருமணம். நிக்கி தனது 30 வயதில் திருமணம் செய்து கொண்டார்.
மேலும் செய்திகளுக்கு.. வனிதாவை சேர்த்து கொள்வீர்களா?..ஆடிப்போன அருண்விஜய் !
Nayanthara
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தார. நானும் ரவுடி தான் படப்பிடிப்பு தளத்தில் அதன் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டார். 7 வருடங்கள் தொடர்ந்த இவர்களது காதல் தற்போது திருமண பந்தத்திற்கு வந்துள்ளது. கடந்த மாதம் மிகப்பெரிய நட்சத்திர கொண்டாட்டமாக நடைபெற்ற இவர்களது திருமணத்தில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். நயன்தாராவிற்கு தற்போது 37 வயதாகிறது.