Ajith : முதல்வர் இருக்கையில் அஜித்... டுவிட்டரில் அதகளப்படுத்தும் AK ரசிகர்கள் - வைரலாகும் Fan Made போட்டோ
Ajith : நடிகர் அஜித், தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் இருக்கையில் அமர்ந்தபடி இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் படு வைரல் ஆகி வருகிறது.
தமிழ் திரையுலகில் எந்தவித சினிமா பின்புலமும் இன்றி தன் சொந்த முயற்சியால் முன்னேறி தற்போது தலை சிறந்த நடிகராக வலம் வருபவர் அஜித். இவருக்கென உலகமெங்கும் ரசிகர் பட்டாளமே உள்ளது. நடிகர் அஜித் நடிப்பில் தற்போது ஏகே 61 திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தை எச்.வினோத் இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.
இதையும் படியுங்கள்... புற்றுநோய் பாதிப்பால் ஓராண்டாக போராடி வந்த 30 வயது இளம் நடிகர்.. சிகிச்சை பலனின்றி மரணம் - சோகத்தில் ரசிகர்கள்
சமீபத்தில் நடிகர் அஜித் இங்கிலாந்து நாட்டுக்கு சுற்றுலா சென்றிருந்தார். அங்கு அவர் பைக் ட்ரிப் சென்ற புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆனது. இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகர் அஜித், தனது ரசிகர் ஒருவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து கைப்பட கடிதம் ஒன்றையும் எழுதினார்.
இதையும் படியுங்கள்... கையில் LGBT கொடி... வாயில் சிகரெட் உடன் ‘காளி’ - லீனா மணிமேகலையின் ஆவண பட போஸ்டரால் வெடித்த சர்ச்சை
இலங்கையை சேர்ந்த லாவன் என்பவர் நடிகர் அஜித்தின் தீவிர ரசிகன். அவரது நண்பர் ஒருவர் லண்டனில் வசித்து வருகிறார். தற்போது அங்கு சுற்றுலா சென்றுள்ள அஜித்தை நேரில் சந்தித்த லாவனின் நண்பன், அவருக்காக அஜித்திடம் பேசி கைப்பட எழுதி வாங்கிய கடிதத்தின் புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரல் ஆனது.
இதையும் படியுங்கள்... விடாது துரத்தும் சர்ச்சை..சூர்யா..ஞானவேல் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு...
இந்நிலையில், அஜித் அந்த கடிதம் எழுதும்போது எடுத்த புகைப்படத்தை போட்டோஷாப்பில் எடிட் செய்துள்ள அஜித் ரசிகர்கள், அவர் தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் இருக்கையில் அமர்ந்து எழுதும்படி மாற்றியமைத்து உள்ளனர். கிட்டத்தட்ட ஒரிஜினல் போலவே காட்சியளிக்கு இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.