புற்றுநோய் பாதிப்பால் ஓராண்டாக போராடி வந்த 30 வயது இளம் நடிகர்.. சிகிச்சை பலனின்றி மரணம் - சோகத்தில் ரசிகர்கள்
Kishore Das : புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நடிகர் கிஷோர் தாஸ், 30 வயதில் மரணமடைந்திருப்பது திரையுலகினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
நடிகர் கிஷோர் தாஸ், அசாம் மாநிலத்தில் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வந்தார். அங்கு இவர் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து மக்கள் மத்தியில் பாப்புலர் ஆனார். இதையடுத்து 300-க்கும் மேற்பட்ட இசை ஆல்பங்களிலும் இவர் பணியாற்றி உள்ளார். இதுதவிர தாதா துமி ட்ஸ்டோ போர் என்கிற படத்திலும் கிஷோர் தாஸ் கடைசியாக நடித்திருந்தார்.
இதையும் படியுங்கள்... கையில் LGBT கொடி... வாயில் சிகரெட் உடன் ‘காளி’ - லீனா மணிமேகலையின் ஆவண பட போஸ்டரால் வெடித்த சர்ச்சை
இவர் கடந்த ஓராண்டாக புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக இவர் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையும் பெற்று வந்தார். அங்கு அவருக்கு கீமோதெரபி போன்ற சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதையும் படியுங்கள்... விடாது துரத்தும் சர்ச்சை..சூர்யா..ஞானவேல் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு...
புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நடிகர் கிஷோர் தாஸ், 30 வயதில் மரணமடைந்திருப்பது திரையுலகினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அவரது மறைவால் சோகத்தில் ஆழ்ந்த ரசிகர்கள் அவருக்கு சமூக வலைதளம் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... அன்று சூர்யா... இன்று ஷாருக்கான் - மாதவனின் ராக்கெட்ரி டீம் வெளியிட்ட ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ வைரல்
நடிகர் கிஷோர் தாஸ் நடித்த கடைசி படம் கடந்த மாதம் 24-ந் தேதி ரிலீசானது. படம் வெளியாகிய ஒரே வாரத்தில் அவர் உயிரிழந்துள்ளார். அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவும் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நடிகர் கிஷோர் தாஸின் இறுதிச் சடங்கு சென்னையிலேயே நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.