Asianet News TamilAsianet News Tamil

பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து.. பள்ளி மாணவர்கள் உட்பட 16 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு..!

இமாச்சலப் பிரதேசத்தில் பள்ளத்தாக்கில்  பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பள்ளிக் குழந்தைகள் உட்பட 16 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

bus accident...School children among 16 people dead
Author
Himachal Pradesh, First Published Jul 4, 2022, 11:43 AM IST

இமாச்சலப் பிரதேசத்தில் பள்ளத்தாக்கில்  பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பள்ளிக் குழந்தைகள் உட்பட 16 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். 

இமாச்சலப் பிரதேச மாநிலம் குலு மாவட்டத்திலிருந்து சைஞ் பகுதிக்கு பள்ளி மாணவர்கள் உள்பட பொது மக்கள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டவரை ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்து சென்றிக்கொண்டிருந்தது. அப்போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் தாறுமாறாக ஓடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இதில் பேருந்தில் இருந்த பள்ளிக்குழந்தைகள் உட்பட 16 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர். 

இதையும் படிங்க;- விரைவில் தமிழகம், தெலங்கானாவில் பாஜக ஆட்சி.. அடுத்த டார்கெட் தென்னிந்தியாதான்.. கர்ஜனை செய்த அமித் ஷா.!

bus accident...School children among 16 people dead

விபத்து தொடர்பாக தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

bus accident...School children among 16 people dead

இந்த விபத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த துயரமான நேரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார். காயமடைந்தவர் விரைவில் குணம் பெற தான் பிரார்த்தனை செய்வதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000மும் பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க;- காலரா நோய் பரவல்.. மறு உத்தரவு வரும் வரை 144 தடை அமல்..!

Follow Us:
Download App:
  • android
  • ios