Asianet News TamilAsianet News Tamil

காலரா நோய் பரவல்.. மறு உத்தரவு வரும் வரை 144 தடை அமல்..!

அன்றாடம் மருத்துவமனைக்கு வருபவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனையடுத்து நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த சுகாதாரத்துறை, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

Due to the outbreak of cholera in Karaikal District Collector has ordered a three days holiday for schools and colleges
Author
First Published Jul 3, 2022, 9:54 PM IST

காரைக்காலில் வயிற்றுப்போக்கும் காலரா தொற்று பரவல் எதிரொலியாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

காலரா நோய்

காரைக்கால் மாவட்டத்தில் காலரா நோய் பரவல் காரணமாக 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. விடுதிகள், மண்டபங்கள், உணவகங்கள், கல்விக்கூடங்களில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு போட்டுள்ளார். மேலும் காலரா பாதித்தோருக்கு சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மக்கள் பீதியடைய வேண்டாம் என்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

Due to the outbreak of cholera in Karaikal District Collector has ordered a three days holiday for schools and colleges

மேலும் செய்திகளுக்கு.. செம ட்விஸ்ட்.! திரெளபதிக்கு ஓட்டு போடும் பிரேமலதா & சுதீஷ்.. எந்த பதவியிலும் இல்லையே எப்படி?

புதுச்சேரி மாநிலம்‌ காரைக்கால்‌ மாவட்டத்தில்‌ ஏராளமானோர் வாந்தி, வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு ஆய்வு நடத்திய மருத்துவக்குழுவினர், இதுவரை 1000-க்கும்‌ மேற்பட்டோர்‌ பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளதாக தகவல்‌ வெளியானது. இதனை தொடர்ந்து காரைக்கால் பகுதியில் சிலருக்கு காலராவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

விடுமுறை அறிவிப்பு

மேலும்‌, காலரா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த 2 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அன்றாடம் மருத்துவமனைக்கு வருபவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனையடுத்து நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த சுகாதாரத்துறை, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  சுகாதார மற்றும்‌ குடும்ப நலத்துறை இயக்குநரகம்‌ காரைக்கால்‌ மாவட்டத்தை பொது சுகாதார அவசர நிலையாக பிரகடனப்படுத்தி அறிவித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு.. மேயர் முதல் வார்டு உறுப்பினர்கள் வரை.. ஒழுங்கா இருக்கணும் - வார்னிங் கொடுத்த மு.க ஸ்டாலின் !

இந்நிலையில் மாணவ, மாணவிகளுக்கு நோய் தொற்று பரவாமல் இருக்க காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள நீர்த்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காரைக்காலில் காலரா நோய் பரவலை தொடர்ந்து காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை விடப்படுவதாக காரைக்கால் மாவட்ட ஆட்சியர் முகமது மன்சூர் அறிவித்துள்ளார். மேலும், காரைக்காலில் வயிற்றுப்போக்கும் காலரா தொற்று பரவல் எதிரொலியாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு.. அதிமுகவிடம் கோடி கணக்கில் பணம் இருக்கு.. கொள்கை தான் இல்லை - அதிமுகவை கலாய்த்த சீமான்

Follow Us:
Download App:
  • android
  • ios