மருத்துவமனையிலிருந்து திரும்பிய விஜயகாந்த்..உடல்நிலை எப்படி இருக்கு தெரியுமா?
அறுவை சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பியுள்ள பிரபல நடிகர் விஜயகாந்த் தற்போது அவரது வீட்டில் மேல் சிகிச்சை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
vijayakanth
எண்பதுகளில் இருந்து அதிரடி நாயகனாக இருந்தவர் விஜயகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த பல இடங்கள் பிளாக் பாஸ்டர்களாக அமைந்து ரசிகர்களை வெகுவாக குஷிப்படுத்துகிறது. ஹிட் நாயகனாக இருந்தபோதே தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட கேப்டன். அதன் பின்னர் அரசியல் கட்சி தலைவரானார். தேமுதிக என்னும் கட்சியின் சார்பாக கடந்த 2011 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட விஜயகாந்த் வெற்றி பெற்றார்.
vijayakanth
கடந்த 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரை தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து மாஸ் காட்டினார் விஜயகாந்த். கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளை தனக்கு சொந்தமாக்கிய நடிகர் விஜயகாந்த் அரசியல் தலைவரான பிறகு படங்களின் நடிப்பதை குறைத்துக் கொண்டார்.
Vijayakanth
கடந்த 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரை தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து மாஸ் காட்டினார் விஜயகாந்த். கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளை தனக்கு சொந்தமாக்கிய நடிகர் விஜயகாந்த் அரசியல் தலைவரான பிறகு படங்களின் நடிப்பதை குறைத்துக் கொண்டார்.
மேலும் செய்திகளுக்கு...ரஜினி வீடருகே தியேட்டர், ஜிம் உடன் கூடிய பிரம்மாண்ட பங்களா கட்டும் நயன்! இன்டீரியருக்கு மட்டும் இத்தனை கோடியா?
Vijayakanth
2000 ங்களின் பக்கத்தில் சிம்மாசனம், வல்லரசு, வானத்தைப்போல போன்ற வெற்றி படங்களை கொடுத்த விஜயகாந்த் சிம்மாசனத்தில் மூன்று வேடத்திலும், வானத்தைப்போல படத்தில் இரட்டை வேடத்திலும் நடித்து அசத்தி இருந்தார். அதேபோல கண்ணுபட போகுதய்யாவிலும் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் இதில் உளவுத்துறை என்னும் படம் 125 நாட்கள் ஓடி மாபெரும் வெற்றி படமாக அறிவிக்கப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு...ஆதித்ய கரிகாலனாக கெத்தான தோற்றத்தில் விக்ரம்... வைரலாகும் பொன்னியின் செல்வன் படத்தின் சர்ப்ரைஸ் போஸ்டர்
இதன் பிறகு 70 வயதான விஜயகாந்த் பல ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் தேர்தல் களங்களை சந்திப்பதையும் நிறுத்திவிட்டார் விஜயகாந்த். இவருக்கு பதிலாக இவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் தான் தேமுதிகவின் பொறுப்பை கவனித்து வருகிறார்.
Vijayakanth
இந்நிலையில் தேமுதிக கட்சி சார்பாக சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கட்சி தலைவரும், பிரபல நடிகருமான விஜயகாந்திற்கு சர்க்கரை நோய் காரணமாக காலில் மூன்று விரல்கள் அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டுள்ளதாக அறிவித்திருந்தது.
மேலும் செய்திகளுக்கு...Rajamouli : மகாபாரதத்தை படமாக்க ராஜமவுலி போட்ட மாஸ்டர் பிளான்... அப்டேட் கேட்டு ஷாக் ஆன ரசிகர்கள்
பின்னர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய விஜயகாந்திற்கு ரஜினி உள்ளிட்ட பிரபல நடிகர்களும் அரசியல் பிரமுகர்களும் விரைவில் நலம் பெற வாழ்த்து தெரிவித்திருந்தனர். புதிய தகவலாக விஜயகாந்த் வீட்டில் இருந்தே சர்க்கரை நோய்க்கான மேல் மருத்துவத்தை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.