Rajamouli : மகாபாரதத்தை படமாக்க ராஜமவுலி போட்ட மாஸ்டர் பிளான்... அப்டேட் கேட்டு ஷாக் ஆன ரசிகர்கள்

Rajamouli : இயக்குனர் ராஜமவுலி தனது கனவு படமான மகாபாரதம் குறித்து சமீபத்திய பேட்டியில் மனம்திறந்து பேசி உள்ளார்.

SS Rajamouli reveals his plans for making Mahabharata

தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ராஜமவுலி மாவீரா, நான் ஈ போன்ற படங்களை இயக்கியதன் மூலம் பாப்புலர் ஆனார். பிரபாஸ், ராணா, அனுஷ்கா நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான பாகுபலி படம் மூலம் இவர் பான் இந்தியா இயக்குனராக உயர்ந்தார். இப்படத்தை உலகமே வியந்து பார்த்தது.

இதையும் படியுங்கள்... ரஜினி வீடருகே தியேட்டர், ஜிம் உடன் கூடிய பிரம்மாண்ட பங்களா கட்டும் நயன்! இன்டீரியருக்கு மட்டும் இத்தனை கோடியா?

இதையடுத்து முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை மிகவும் பிரம்மாண்டமாக கொடுத்து ஹாலிவுட்டையே திரும்பி பார்க்க வைத்தார். இவர் இயக்கத்தில் அண்மையில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ரிலீசானது. ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் இணைந்து நடித்திருந்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1115 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

இதையும் படியுங்கள்... Tamil Rockerz : தமிழ் ராக்கர்ஸ் மூலம் ஓடிடி-யில் தடம் பதிக்கிறார் அருண் விஜய் - டீஸருடன் வந்த மாஸ் அப்டேட்

SS Rajamouli reveals his plans for making Mahabharata

இதையடுத்து பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் ராஜமவுலி, இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே இயக்குனர் ராஜமவுலி தனது கனவு படமான மகாபாரதம் குறித்து சமீபத்திய பேட்டியில் மனம்திறந்து பேசி உள்ளார்.

இதையும் படியுங்கள்... ‘மிஸ் இந்தியா’ பட்டத்தை தட்டித்தூக்கிய கர்நாடக அழகி சினி ஷெட்டி-க்கு குவியும் வாழ்த்துக்கள்

அதில் அவர் கூறியதாவது : “எனது கனவு படமான மகாபாரதத்தை எடுக்க நிறைய நேரம் தேவைப்படுகிறது. கைவசம் உள்ள 3, 4 படங்களை முடித்த பின்னர் அதை தொடங்க திட்டமிட்டுள்ளேன்” என கூறி உள்ளார். அவர் இப்படத்தை கைவிட்டுவிட்டதாக தகவல் பரவி வந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த விளக்கத்தை அளித்துள்ளார் ராஜமவுலி. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios