Tamil Rockerz : தமிழ் ராக்கர்ஸ் மூலம் ஓடிடி-யில் தடம் பதிக்கிறார் அருண் விஜய் - டீஸருடன் வந்த மாஸ் அப்டேட்
Tamil Rockerz : புதுப்படங்களை திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியிட்டு தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கும் பெரும் தலைவலியாக இருந்த தமிழ் ராக்கர்ஸ் எனும் ஆன்லைன் தளத்தை மையமாக வைத்து இந்த வெப் தொடர் எடுக்கப்பட்டு உள்ளது.
நடிகர் அருண் விஜய் நடிப்பில் கடந்த வாரம் வெளியான யானை திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது. ஹரி இயக்கியுள்ள இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். குடும்பங்கள் கொண்டாடும் கமர்ஷியல் படமாக வெளியாகி உள்ள இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை வாரிக்குவித்து வருகிறது.
இதையும் படியுங்கள்... ‘மிஸ் இந்தியா’ பட்டத்தை தட்டித்தூக்கிய கர்நாடக அழகி சினி ஷெட்டி-க்கு குவியும் வாழ்த்துக்கள்
இதையடுத்து நவீன் இயக்கியுள்ள அக்னி சிறகுகள், பாக்ஸர், வா டீல், சினம், பார்டர் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார் அருண் விஜய், இந்த படங்களின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளன. இனி வரும் மாதங்களில் இப்படங்கள் ஒவ்வொன்றாக ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... Ajith : முதல்வர் இருக்கையில் அஜித்... டுவிட்டரில் அதகளப்படுத்தும் AK ரசிகர்கள் - வைரலாகும் Fan Made போட்டோ
இந்நிலையில், நடிகர் அருண் விஜய் புதிதாக வெப் தொடர் ஒன்றில் நடித்துள்ளார். தமிழ் ராக்கர்ஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த வெப் தொடரை அறிவழகன் இயக்கி உள்ளார். இவர் ஏற்கனவே ஈரம், வல்லினம், ஆராது சினம், அருண் விஜய்யின் குற்றம் 23, பார்டர் போன்ற படங்களை இயக்கி உள்ளார். இந்த வெப்தொடரை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் தயாரித்துள்ளது. சோனி லிவ் ஓடிடி தளத்தில் இந்த வெப் தொடர் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்... புற்றுநோய் பாதிப்பால் ஓராண்டாக போராடி வந்த 30 வயது இளம் நடிகர்.. சிகிச்சை பலனின்றி மரணம் - சோகத்தில் ரசிகர்கள்
இது புதுப்படங்களை திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியிட்டு தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கும் பெரும் தலைவலியாக இருந்த தமிழ் ராக்கர்ஸ் எனும் ஆன்லைன் தளத்தை மையமாக வைத்து இந்த வெப் தொடர் எடுக்கப்பட்டு உள்ளது. இதில் நடிகர் அருண் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்து உள்ளார். தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த வெப் தொடரின் டீஸர் இணையத்தில் வைரலாகி வருகிறது.