ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அரசின் சார்பில் முதலில் மரியாதை செய்த பிறகே, பாஜகவினர் மரியாதை செய்ய வேண்டும் என அமைச்சர் பிடிஆர், கூறியதால் பாஜகவினர் அமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவித்து பிடிஆர் சென்ற கார் மீது பாஜகவினர் காலணியை வீசினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தை அடுத்து பாஜகவுக்கு திமுக பொதுச் செயலாளரும் நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

09:56 PM (IST) Aug 13
ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு புறப்பட்ட போது தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் காரின் மீது பாஜகவினர் செருப்பு வீசினர். இதை அடுத்து நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் காரின் மீது காலணி வீசப்பட்ட சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, பிணத்தை வைத்து சாக்கடை அரசியல் செய்பவர்கள் குறித்து பேச விரும்பவில்லை என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பாஜகவை விமர்சித்துள்ளார்.
09:16 PM (IST) Aug 13
இந்த பேட்டியின் போது செய்தியாளர் ஒருவர் வரிசையாக கேள்வி கேட்க, இதனால் கோபமடைந்தார் சீமான். அப்போது சீமான் செய்தியாளரை, டே மண்டையை உடைத்து விடுவேன்டா ராஸ்கல்’ என்று திட்டியுள்ளார்.
08:34 PM (IST) Aug 13
காரில் ஏறி புறப்பட்ட நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பிஜேபியை சேர்ந்த பெண் உறுப்பினர் ஒருவர் தனது செருப்பை எரிந்துள்ளார். சிலர் காரை வழிமறித்து தாக்கியுள்ளனர். உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் கலவரத்தில் ஈடுபட்ட நபர்களை அப்புறப்படுத்தினர்.
08:13 PM (IST) Aug 13
அஞ்சலி நிகழ்ச்சியை முடித்துவிட்டு அங்கிருந்து பிடிஆர் சென்ற பொது கூட்டத்தில் இருந்த சிலர் அமைச்சரின் கார் மீது செருப்பை வீசினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
05:39 PM (IST) Aug 13
கோபமடைந்த பாஜகவினர் , ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு புறப்பட்ட போது தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் காரின் மீது செருப்பு வீசினர்.
05:23 PM (IST) Aug 13
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கியில் நகை மற்றும் பணம் மர்ம நபர்களால் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக வங்கிக்குள் பட்டப்பகலில் நுழைந்த மர்ம நபர்கள், வங்கியின் மேலாளர் மற்றும் ஊழியர்களை கட்டிப்போட்டுவிட்டு வங்கியில் இருந்த நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதனிடையே வங்கியில் ஏற்கனவே பணியாற்றிய ஊழியர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
03:37 PM (IST) Aug 13
மறைந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
03:35 PM (IST) Aug 13
தீவிரவாதிகளுக்கும், இந்திய ராணுவத்தினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 3 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலில் வீரமரணமடைந்த வீரர்களில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்த லட்சுமணனும் ஒருவர்.
03:17 PM (IST) Aug 13
சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக வருகிற 15-ந் தேதி, ஜாதி, மதம், கட்சி வேறுபாடு இல்லாமல், நாம எல்லாரும் இந்தியர்கள் என்ற உணர்வோடு, ஒரு 2 அல்லது 3 அடி நீளம் கொண்ட கம்பில் நமது நாட்டின் தேசிய கொடியை கட்டி, நம் வருங்கால சந்ததிகளான குழந்தைகள், இளைஞர்கள் கையால நம் வீட்டின் முன் அந்த கொடியை பறக்கவிட்டு, நாம் பெருமைகொள்வோம் என ரஜினி கூறி உள்ளார். மேலும் படிக்க
02:35 PM (IST) Aug 13
இபிஎப்ஓ சந்தாதாரர்கள் வீட்டிலிருந்தே படியே தங்களுடைய யுஏஎன்(UAN) எண்ணை ஆன் லைன் மூலம் சில நிமிடங்களில் பெறலாம். இதன் மூலம் பிஎப் கணக்கு தொடர்பான அனைத்து விவரங்களையும் பெற முடியும்.விரிவான செய்திகளுக்கு
02:34 PM (IST) Aug 13
ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் தலைவர் சயத் சலாலுதீன் மகன் சயத் அப்துல் முயீத், சிறையில் இருக்கும் பிரிவினைவாதத் தலைவர் பிட்டா கராத்தே மனைவி உள்பட 4 பேர் ஜம்மு காஷ்மீர் அரசுப்பணியிலிருந்து நீக்கப்பட்டனர்.விரிவான செய்திகளுக்கு
02:34 PM (IST) Aug 13
நடிகை கீர்த்தி சுரேஷுக்கு மேலும் ஒரு பிரம்மாண்ட பட வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன்படி கேஜிஎஃப் படத்தின் இரண்டு பாகங்களையும் பிரம்மாண்டமாக தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் அடுத்ததாக தயாரிக்க உள்ள படத்தில் ஹீரோயினாக நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.மேலும் படிக்க
02:08 PM (IST) Aug 13
தூக்கத்தை கெடுத்த ஒன்றரை வயது மகனை தந்தை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குழந்தையின் அழுகை சத்தம் திடீரென அடங்கியாதால் பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்து பார்த்ததில் இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சில நேரங்களில் மனிதர்கள் விலங்குகளை விட கொடூரமாக நடந்து கொள்கின்றனர். மேலும் படிக்க
02:07 PM (IST) Aug 13
தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ராஜநாகம், மலைப்பாம்பு, ஆமை, குரங்கு குட்டி போன்றவை மீண்டும் அந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பப்பட்டது.நேற்றிரவு தாய்லாந்து நாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட கோடிய விஷ ஜந்துக்கள் கடந்திவரப்பட்ட நிலையில் சுங்கத்துறை அதிகாரிகள் இந்நடவடிக்கை எடுத்துள்ளனர்.மேலும் படிக்க
02:06 PM (IST) Aug 13
கோவையில் உள்ள கடைகளில் மாநகராட்சி ஊழியர்கள் தேசியக்கொடியினை 25 ரூபாய் கொடுத்து வாங்கிக் கொள்ள வேண்டுமென நிர்ப்பந்தித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. கொடியை வாங்கிக் கொள்ளாவிட்டால் ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும் என்று அவர்கள் கடைகாரர்களை மிரட்டி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான செய்திகள் சமூக வலைதளத்தில் பரவியுள்ளதால் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. மேலும் படிக்க
02:05 PM (IST) Aug 13
எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு தொடர்ந்து ஆபாச மெசேஜ் அனுப்பியதுடன் உடல் ரீதியான பாலியல் சீண்டலில் தமிழ் ஆசிரியர் ஈடுபட்டுவந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பேரில் அந்த ஆசிரியரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் படிக்க
02:03 PM (IST) Aug 13
தமிழக நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் ராஜன் கார் மீது காலணி வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை விமான நிலையத்தில் ராணுவ வீரரின் உடலுக்கு அவர் அஞ்சலி செலுத்த வந்த போது அவரது கார் மீது பாஜகவினர் செருப்பு வீசினர். இதனையடுத்து அங்கிருந்த போலீசார் அவர்களை அப்புறப்படுத்தி அமைச்சரின் காரை பத்திரமாக அனுப்பி வைத்தனர். இதனால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் படிக்க
01:41 PM (IST) Aug 13
75-வது சுதந்திரதினத்தை முன்னிட்டு, ரிலையன்ஸ் ஜியோ ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்காக ஏராளமான சலுகைகளை அறிவித்துள்ளது. ஓர் ஆண்டுக்கு மொத்தமாக ரூ.2,999க்கு ரீசார்ஜ் செய்தால், ரூ.3 ஆயிரத்துக்கான இலவசங்களை அளிக்கிறது.விரிவான செய்திகளுக்கு
12:55 PM (IST) Aug 13
காங்கிரஸ் தலைவர் சோனியாா கந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம்தான் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்த நிலையில் 2வது முறையாக அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
12:54 PM (IST) Aug 13
நடிகர் கார்த்தியின் கெரியரில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படம் என்கிற புதிய சாதனையை விருமன் படைத்துள்ளது. இதற்குமுன் சுல்தான் படம் ரூ.5 கோடி வசூலித்ததே சாதனையாக இருந்த நிலையில் தற்போது விருமன் அதனை முறியடித்துள்ளது.மேலும் படிக்க
12:36 PM (IST) Aug 13
மத்திய அரசு நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி காப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பத்தாரர்கள் பொறியியல் மற்றும் தொழில்நூட்ப பட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
11:39 AM (IST) Aug 13
நெட்பிளிக்ஸில் இலவசமாக சந்தாவாய்ப்பு தேவை என நினைப்போருக்கு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் போஸ்ட்பெய்ட் திட்டத்தில் பல அருமையான சலுகைகளை அறிவித்துள்ளது. மேலும் விவரங்களுக்கு........
11:38 AM (IST) Aug 13
947 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார் சல்மான் ருஷ்டி. இவரது தந்தை கேம்பிரிட்ஜில் படித்த வழக்கறிஞர் ஆவார். அதுமட்டுமல்ல பிரபல வர்த்தகராகவும் இருந்துள்ளார். மும்பையில் தனியார் பள்ளியிலும், பின்னர் இங்கிலாந்தின் வார்விக் - ஷயரில் உள்ள உறைவிடப் பள்ளியிலும் படித்த இவர், கிங்ஸ் கல்லூரியில் வரலாற்றில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.மேலும் படிக்க
11:16 AM (IST) Aug 13
நாட்டின் 75-வது சுதந்திரதினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், ஆர்எஸ்எஸ் அமைப்பும்,தனது சமூக ஊடக கணக்கில் சுயவிவரப் படம்(profile picture) தேசியக் கொடியை வைத்தது. விரிவான செய்திகளுக்கு........
11:01 AM (IST) Aug 13
முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த நாகப்பட்டினத்தைச் சேர்ந்த சிவரஞ்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.நெல் ஜெயராமனுக்கு பின் பல மாநிலங்களுக்கு சென்று 1,250 பாரம்பரிய நெல் ரகத்தை சிவரஞ்சனி மீட்டெடுத்துள்ளார்.
11:00 AM (IST) Aug 13
புது டெல்லி காவல்துறை மற்றும் மத்திய ஆயுத காவல்படைகளில் உதவி ஆய்வாளர் தேர்வுக்கான அறிவிப்பை அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விருப்பம் மற்றும் தகுதி உள்ளவர்கள் இந்த மாதம் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் படிக்க
10:39 AM (IST) Aug 13
உதயநிதி வெளியிட்ட லால் சிங் சத்தா படம் ரிலீசானதில் இருந்தே நெகடிவ் விமர்சனங்களை பெற்று வருவதால், அப்படத்தின் வசூலும் மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்துள்ளது. இதனால் முதல் நாளை விட அப்படத்தின் இரண்டாம் நாள் வசூல் மரண அடி வாங்கி உள்ளது. மேலும் படிக்க
10:12 AM (IST) Aug 13
தங்கம் விலை புதிய உச்சத்தை அடைந்து, தொடர்ந்து 2வது நாளாக உயர்துள்ளது. சவரன் மீண்டும் ரூ.39ஆயிரத்தைக் கடந்துள்ளது.விரிவான செய்திகளுக்கு..........
10:07 AM (IST) Aug 13
தற்போது தனித்தனியாக நடைபெற்று வரும் நீட், JEE தேர்வுகளை CUET தேர்வுடன் யுஜிசி திட்டமிட்டு இருப்பதாக வெளியாகும் செய்திகளால் மாணவர்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் படிக்க
09:53 AM (IST) Aug 13
தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வரும் விக்ரம், தற்போது டுவிட்டரில் இணைந்துள்ளார். அதில் தான் அடுத்ததாக நடிக்க உள்ள பா.இரஞ்சித் படத்தின் அப்டேட்டையும் அவர் வெளியிட்டு உள்ளார். மேலும் படிக்க
09:53 AM (IST) Aug 13
வங்கியில் கடன் வாங்கியவர்களுக்கு நிம்மதியளிக்கும் வகையில் கடன் வசூலிப்பு நிறுவனங்களுக்கு பல்வேறு கிடுக்கிப்பிடி உத்தரவுகளை ரிசர்வ்வங்கி பிறப்பித்துள்ளது. விரிவான செய்திகளுககு.........
09:49 AM (IST) Aug 13
மோசடியாக பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ரத்து செய்ய பதிவுத்துறைக்கு அதிகாரம் அளிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டத்திருத்த மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். நில அபகரிப்பாளர்களிடமிருந்து மீட்டு சொத்துக்களை உரியவர்களுக்கு பெற்றுத்தரும் வரலாற்று சிறப்பு மிக்க இச்சட்ட திருத்தம் கொண்டு வர வழிகாட்டிய முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதாக வணிகம் மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க
09:28 AM (IST) Aug 13
தென்காசி மாவட்டம் பழைய குற்றாலத்தில் உள்ள தனியார் ரிசார்ட்டில் துப்பாக்கியால் சுட்டு எஸ்எஸ்ஐ பார்த்திபன் தற்கொலை செய்துள்ளார். சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
08:42 AM (IST) Aug 13
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சிஎஸ்கே அணியின் கேப்டனுமாகிய எம்எஸ் தோனி, தனது இன்ஸ்டாகிராம் ப்ரொபைல் பிட்சராக தேசியக் கொடியை வைத்துள்ளார் விரிவான செய்திகளுக்கு
08:17 AM (IST) Aug 13
நீலாங்கரையில் நடிகர் விஜய்யின் வீடு அமைந்துள்ள பகுதியில் உள்ள மரம் ஒன்று மூவர்ண கொடியை போல் அலங்கரிக்கப்பட்ட மின் விளக்குகளால் ஜொலிக்கின்றது. நடிகர் விஜய்யின் வீடு அமைந்துள்ள தெருவின் முனையில் இவ்வாறு அலங்கரிக்கப்பட்டு உள்ளது.மேலும் படிக்க
07:44 AM (IST) Aug 13
செஸ் ஒலிம்பியாட்டை தொடர்ந்து மாமல்லபுரத்தில் சர்வதேச காத்தாடி திருவிழா இன்று தொடங்குகிறது. மூன்று நாட்களுக்கு நடைபெறும் இந்த திருவிழாவில், தாய்லாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 10 அணிகள் கலந்து கொள்கின்றன. மேலும் படிக்க
07:37 AM (IST) Aug 13
விருமன் படத்திற்கு ஏ செண்டர் ஆடியன்ஸிடம், சற்று கலவையான விமர்சனங்களே கிடைத்தாலும், பி மற்றும் சி செண்டரில் படம் பட்டைய கிளப்பியது. அதுமட்டுமின்றி கார்த்தியின் கெரியரில் முதல் நாளில் அதிக வசூல் ஈட்டிய படமாகவும் விருமன் இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் படிக்க
07:31 AM (IST) Aug 13
பருப்பு விலை தொடர்ந்து உயர்ந்துவருவதையடுத்து, பதுக்கலைக் கட்டுப்படுத்தும் விதமாகவும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும் பருப்பு வகைகளை அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. விரிவான செய்திகளுக்கு............
07:11 AM (IST) Aug 13
ஜம்மு காஷ்மீரில் வீர மரணம் அடைந்த இராணுவ வீரர் லட்சுமணனின் உடல் இன்று சொந்த ஊர் வருகிறது. பயங்கரவாதிகளுடனான சண்டையில் வீரமரணமடைந்த வீரன் லட்சுமணனின் உடல் அவரது சொந்த ஊரான மதுரையில் உள்ள டி.புதுப்பட்டிக்கு கொண்டு வரப்படுகிறது.
07:06 AM (IST) Aug 13
உப்பு உற்பத்தி இல்லாத காலங்களில் உப்பள தொழிலாளர்களின் சிரமத்தை போக்கும் வகையில் ஆண்டுக்கு தலா 5,000 ரூபாய் நிவாரணம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். தற்போது அயோடின் கலந்த கல் உப்பு மற்றும் அயோடின் கலந்த சுத்திகரிக்கப்பட்ட தூள் உப்பு ஆகியவற்றினை நெய்தல் எனும் பெயரில் வெளிச் சந்தை விற்பனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்துள்ளார்.மேலும் படிக்க