Asianet News TamilAsianet News Tamil

தமிழக அரசுக்கு அதிகாரம்.. நில அபகரிப்பு, மோசடி , ஆள்மாறாட்டம் செய்து பதிவு செய்தால்.!! வருகிறது புதிய சட்டம்

மோசடியாக பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ரத்து செய்ய பதிவுத்துறைக்கு அதிகாரம் அளிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டத்திருத்த மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். நில அபகரிப்பாளர்களிடமிருந்து மீட்டு  சொத்துக்களை உரியவர்களுக்கு பெற்றுத்தரும் வரலாற்று சிறப்பு மிக்க இச்சட்ட திருத்தம் கொண்டு வர வழிகாட்டிய முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதாக வணிகம் மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
 

Amendment of Act to cancel registration through forged documents - President's assent
Author
Tamilnádu, First Published Aug 13, 2022, 9:46 AM IST

மோசடியாக பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ரத்து செய்ய பதிவுத்துறைக்கு அதிகாரம் அளிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டத்திருத்த மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். நில அபகரிப்பாளர்களிடமிருந்து மீட்டு  சொத்துக்களை உரியவர்களுக்கு பெற்றுத்தரும் வரலாற்று சிறப்பு மிக்க இச்சட்ட திருத்தம் கொண்டு வர வழிகாட்டிய முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதாக வணிகம் மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

மோசடி, ஆள்மாறாட்டம் போன்ற காரணகளுக்காக பதிவு செய்யப்பட்ட ஆவணத்தை ரத்து  செய்ய பதிவு அலுவலருக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவையில் சட்ட திருத்த மசோதா கொண்டுவரப்பட்டு, நிறைவேற்றப்பட்டது.இதனால் பொதுமக்கள் மோசடி பதிவுகளால் தங்கள் சொத்துகளை இழந்தும், ஏமாற்றப்பட்டும் வரும் நிலைகள் தடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. 

மேலும் படிக்க:உப்பள தொழிலாளர்களுக்கு ரூ.5000 நிவாரணம் திட்டம்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பு

ஏனெனில் கடந்த 1980 ல் கொண்டுவரப்பட்ட இந்த சட்டத்தில், மோசடி, ஆள்மாறாட்டம் போன்ற காரணங்களுக்கு பதிவு செய்யப்பட்ட ஆவணத்தை ரத்து செய்யும் அதிகாரம் பதிவுத்துறை அளிக்கப்படவில்லை. இதனால் பொதுமக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டதால், பதிவுத்துறைக்கு அதிகாரம் அளிக்கும் சட்டத்திருத்த மசோதாவை தமிழக அரசு பேரவையில் தாக்கல் செய்தது.இந்நிலையில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவை குடியரசு தலைவரின் ஒப்புதல் பெறும் பொருட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.

தற்போது குடியரசு தலைவர் இந்த சட்ட திருத்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளார். நில அபகரிப்பாளர்களிடமிருந்து மீட்டு  சொத்துக்களை உரியவர்களுக்கு பெற்றுத்தரும் வரலாற்று சிறப்பு மிக்க இச்சட்ட திருத்தம் கொண்டு வர வழிகாட்டிய முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதாக வணிகம் மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.புதிய சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள பிரிவு 22 - பி மூலம் போலி ஆவணங்கள் மற்றும் ஆள் மாறாட்டம் மூலம் செய்யப்பட்ட பதிவினை ரத்து செய்ய பதிவு அலுவலருக்கு அதிகாரம் உள்ளது.

மேலும் படிக்க:சென்னையில் செருப்பில் கடத்தப்பட்ட ரூ.100 கோடி ஹெராயின் பறிமுதல்..சர்வதேச கடத்தல் கும்பலுடன் தொடர்பு?

அதுமட்டுமின்றி, நில அபகரிப்பு செய்து மோசடியாக ஆவண பதிவு செய்யப்பட்டது என்று மாவட்ட பதிவாளர்களால் புகார்கள் பெறப்பட்டால், மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர்களை வைத்து விசாரணை நடத்தி, மோசடி ஆவணம் என கண்டறியப்பட்டால் அந்த ஆவணத்தை புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பிரிவு 77 ஏ யின் படி அதனை ரத்து செய்ய முடியும். மேலும் முறையாக ஆய்வு செய்யாமல் போலி ஆவணத்தை பதிவு செய்தால் ஆவணத்தாரகள் மற்றும் பதிவு அலுவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் இந்த சட்டதிருத்தம் வழிவகை செய்கிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios